சிறப்புக்கட்டுரைகள்
Published:Updated:

சர்ப்ரைஸ்

சர்ப்ரைஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
சர்ப்ரைஸ்

சர்ப்ரைஸ்

சர்ப்ரைஸ்

காதல் திருமணமாக இருந்தாலும் சரி அல்லது வீட்டில் பார்த்து வைக்கும் திருமணமாக இருந்தாலும் சரி. தங்களுடைய பார்ட்னருக்கு என்ன பிடிக்கும், என்ன சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தலாம் என்பதில் ஒரு க்யூரியாஸிட்டி நம் எல்லோருக்கும் இருக்கும். கலர்ஃபுல் ஆடை, காஸ்ட்லியான நகைகள், உறவினர் கூட்டம் என மணமக்களைச் சுற்றி எல்லாமே ஸ்பெஷலா இருந்தாலும், மணமக்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும் பரிசுகள்தான் சூப்பர் ஸ்பெஷல்.

கேக் கட் செய்வது, விலை உயர்ந்த நகைகள், பூச்செண்டு என சர்ப்ரைஸ் கொடுப்பதற்கென வெகுசில ஐடியாக்கள் மட்டுமே இருந்த காலம் போய் இப்போது கிடார் வாசிப்பது, யாட் டிரைவிங், ஃப்ளாஷ் மோப் என டிரெண்டே வேறுவிதமாக மாறிவருகிறது. இதற்கென ‘சர்ப்ரைஸ் பிளானர்கள்’ என போர்டு மாட்டி கம்பெனியே நடத்துகிறார்கள். அந்த வகையில் இதுவரை 5,000 சர்ப்ரைஸ் பிளான்களை வெற்றிகரமாக முடித்து கஸ்டமர்களின் மனதில் இடம்பிடித்து இருக்கும் சென்னையைச் சார்ந்த  `தி சிக்ஸ் இன்’ சர்ப்ரைஸ் பிளானர் நிறுவனத்தின் உரிமையாளர் சக்திவேல், தங்களுடைய சர்ப்ரைஸ் ப்ளான்கள் பற்றியும் அதில் உள்ள  சவால்களைப் பற்றியும் நம்மிடம் பகிர்கிறார்.

சர்ப்ரைஸ்

“நான் படிச்சது மெக்கானிக்கல் இன்ஜினீயரிங். ஆனா, என்னுடைய இயல்பான குணமே எல்லாரும் செய்யற ஒரு விஷயத்தை நாம எப்படி வித்தியாசமா செய்யலாம்னு யோசிக்கிறதுதான். என்னுடைய நண்பர்கள் யாருக்காவது கிஃப்ட் கொடுக்கணும்னா என்னைக் கூப்பிட்டுத்தான் ஐடியா கேட்பாங்க. என்னிடம் ஐடியா கேட்கறவங்களுக்குப் புதுசு, புதுசா ஏதாவது ஐடியா கொடுப்பது முதல் அதை செயல்படுத்துவது வரை எல்லாத்தையும் செஞ்சு கொடுத்துடுவேன். அதுல சிலசமயம் சொதப்பல்களும் நடந்திருக்கு. நிறைய பாராட்டுகளும் வந்திருக்கு. இப்படி நிறைய பேருக்கு சர்ப்ரைஸ் பிளான் செய்து செய்து அதுல எக்ஸ்பர்ட் ஆகிட்டேன். ஆரம்பத்தில் இது என்னோட ஹாபியா மட்டும்தான் இருந்தது.

சர்ப்ரைஸ்

படிப்பு முடிச்சு மெக்கானிக்கல் இன்ஜினீயர் ஆகிட்டேன். அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் போக ஆரம்பிச்சேன். வெளிநாடுகளில் திருமணங்கள் ரொம்ப கிராண்டா நடக்கும். வெளிநாட்டுத் திருமணங்களில் என்னை கவர்ந்த ஒரு விஷயம் திருமணங்களில் சர்ப்ரைஸ் செய்வது. நான் இங்கே நண்பர்களுக்குக் கொடுக்கும் அதே சர்ப்ரைஸ் ஐடியாவையே கொஞ்சம் கிராண்டா யோசிச்சு, திருமணத்தை அடிப்படையாக வைத்து பிசினஸாக பண்ணிட்டு இருந்தாங்க. ‘நாம ஏன் இதை யோசிக்கலை?’னு மனசுல ஒரு ஸ்பார்க் வந்துச்சு.

சர்ப்ரைஸ்

இந்தியாவுக்கு வந்ததும் முதல் வேலையா புதுப்புது ஐடியாக்களை உருவாக்கி, இதை பார்ட் டைம் பிசினஸா பண்ணலாம்னு என் நண்பருடன் இணைந்து களத்தில் இறங்கினேன். ஆரம்பத்தில் குறைந்த அளவு பட்ஜெட் வாய்ப்புகள்தான் கிடைத்தன. அதுல நான் என்னை நிரூபிக்க நிறையவே கஷ்டப்பட வேண்டியிருந்தது. நான் பார்த்துட்டு இருந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சர்ப்ரைஸ் ப்ளான் செய்வதில் முழு நேரமா இறங்கினேன். அதுக்கான பலனும் கிடைச்சது. நிறைய திருமணங்களுக்கு மட்டுமில்லாமல் லவ் புரோபோசல்களுக்கான ஆர்டர்களும் வர ஆரம்பிச்சுது. எல்லா ஆர்டர்களிலும் என் வாடிக்கையாளர்களின் மனநிறைவு முக்கியம் என்பதில் கவனமாக இருந்தேன். அதுக்காக மணிக்கணக்கில் உழைப்பேன். சர்ப்ரைஸ்களைச் சரியான நேரத்தில் வெளிப்படுத்துவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சரியான நபர்களுக்குச் செய்றோமா என்பதும் முக்கியம். அதில் நான் ரொம்ப எச்சரிக்கையா இருப்பேன். எனக்கு ஆர்டர் கொடுப்பவர் பற்றியும் சர்ப்ரைஸை அனுபவிக்கப் போறவங்களைப் பற்றியும் முழுத் தகவலையும் வாங்கிய பிறகுதான் வேலையை ஆரம்பிப்பேன்.

சர்ப்ரைஸ்

மூவாயிரம் ரூபாயில் ஆரம்பித்து ஐந்து லட்சம் வரை அவரவரின் பட்ஜெட்டுக்கு ஏற்ப சர்ப்ரைஸ் பிளான்கள் கைவசம் இருக்கு. டிரெண்ட் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி ப்ளான் பண்ணுவதுதான் என்னோட ஸ்பெஷல். சென்னையைச் சேர்ந்த அகஸ்டின், தன் காதலி யாமினிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க எங்களை அணுகினார். இரண்டு நாள்கள் யோசிச்சு, அவருடைய பட்ஜெட்டுக்குப் பொருத்தமான ஒரு ஐடியாவைச் சொன்னேன். உடனே ஓகே சொல்லிட்டார். யாமினியின் பிறந்த நாள் அன்று அங்கே, இங்கேன்னு அவங்களைக் கொஞ்சம் அலையவெச்சு, ஒரு ரிசார்ட்டின் மூன்றாவது மாடியின் பால்கனிக்கு வரவழைத்தோம். அதன்பின் அங்கு இருந்த டேபிளின் மீது மோதிரம் இருக்குன்னு சொல்லி, அவங்களை எடுத்துக்கச் சொன்னோம். அவங்களும் மோதிரத்தை எடுத்துட்டு ரொம்ப ஆர்வமா ‘அகஸ்டின் எங்கே இருக்கார்?’னு கேட்ட மாத்திரத்திலேயே 150 முறை பல்வேறு வண்ணங்களுடன் வெடிக்கும் வாண வேடிக்கையை அவங்க நின்றுகொண்டிருந்த பால்கனியில் இருந்து பாக்குற மாதிரி வெடிக்கவைத்து, யாமினியை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வெச்சுட்டோம். ஆனந்த கண்ணீருடன் அகஸ்டினுக்கு போன் செய்ய முயன்ற யாமினியின் கண்களைக் கட்டி, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடைக்கு அழைத்துச் சென்று கண்ணில் கட்டியிருந்த துணியை அவிழ்க்க, அங்கு பொக்கேவுடன் காத்திருந்த அகஸ்டின், தன் காதலை யாமினியிடம் சொன்ன அந்த நொடி வேற லெவல். ஆரம்பத்திலிருந்து எல்லாம் சொதப்பாமல் நடக்கணும்னு இருந்த எனக்கும் அது சர்ப்ரைஸ் நொடியாக அமைந்துவிட்டது. எந்த வேலை செய்தாலும் என்ஜாய் பண்ணி செய்தால் நிச்சயம் சக்சஸ்தான்” என சிம்பிளாகச் சொல்லி முடித்தார்.

லோக்மணி