தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

ஆரி வொர்க்... கலைநயம் ப்ளஸ் கற்பனைத்திறன் - பவானி

ஆரி வொர்க்... கலைநயம் ப்ளஸ் கற்பனைத்திறன் - பவானி
பிரீமியம் ஸ்டோரி
News
ஆரி வொர்க்... கலைநயம் ப்ளஸ் கற்பனைத்திறன் - பவானி

நீங்களும் செய்யலாம்

ஆரி வொர்க்... கலைநயம் ப்ளஸ் கற்பனைத்திறன் - பவானி

பேட்ச் வொர்க் எனப்படுகிற சின்ன வேலைப்பாடு போதும், அவற்றை ஆடம்பரமாகக் காட்டுவதற்கு. ‘பேட்ச் வொர்க்’ என்கிற பெயரிலேயே அதன் அர்த்தம் விளங்கும். அதாவது ஒட்டவைக்கிற வேலைப்பாடு. ஆரி வொர்க்கில் பேட்ச் வொர்க் செய்து உடுத்துவது சமீபகாலமாக ட்ரெண்டாகி வருகிறது. கண்ணாடி, சமிக்கி, மணிகள், முத்து, ஜரிகை நூல் என ஆரி வேலைப்பாட்டில் எல்லாம் இருக்கும். சிம்பிளாக ஆரி வொர்க் செய்த உடையைக் கடைகளில் வாங்குவதானால் கூட சில ஆயிரங்களைச் செலவிட வேண்டும்.

‘`என் தங்கச்சி கல்யாண ஜாக்கெட்டுக்கு ஆரி வொர்க் பண்ண வெளியில கொடுத்தோம். நாலாயிரம் ரூபாய் கேட்டாங்க. கிட்டத்தட்ட ஒரு பட்டுச் சேலை வாங்கற செலவு... அந்த ஆதங்கத்துலதான் நானும் க்ளாஸ் போய் ஆரி வொர்க் கத்துக்கிட்டேன். அதுல உள்ள அத்தனை நுணுக்கங்களையும் கத்துக்கிட்டு இன்னிக்கு முழுநேர பிசினஸா பண்ணிட்டிருக்கேன். ஒன்பதாம் வகுப்பு படிச்ச எனக்கு இன்னிக்கு என் கைத்தொழில்தான் சோறு போடுது. இந்த பிசினஸ்ல வரும் வருமானத்துலதான் நான் என் ரெண்டு பிள்ளைகளையும் படிக்க வைக்கிறேன். கஷ்டம்னு யார்கிட்டயும் ஒரு ரூபாய்கூட கடன் கேட்டு நின்னதில்லை. என் கஸ்டமர்ஸும் பிசினஸும்தான் எனக்குக் கடவுள்...’’ - தன்னம்பிக்கையால் தலைநிமிர்ந்திருக்கிறார் சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்த பவானி. 

ஆரி வொர்க்... கலைநயம் ப்ளஸ் கற்பனைத்திறன் - பவானி

என்ன சிறப்பு... என்னவெல்லாம் லேட்டஸ்ட்?

சேலை, சல்வார், காக்ரா சோளி, குழந்தைகளின் உடைகள் என எல்லாவற்றிலும் ஆரி வொர்க் செய்யலாம். பட்டு, சில்க் காட்டன், நெட், காட்டன், சிந்த்தெடிக் என எல்லா மெட்டீரியல்களிலும் போட முடியும்.

ஆரி வேலைப்பாட்டைப் பொறுத்த வரை புதிது புதிதாக டிசைன்களை உருவாக்க வேண்டும். அதேநேரம் பாரம்பர்யமான உருவங்களையும் ஆரியில் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.

என்ன தேவை... எவ்வளவு முதலீடு?

சில்க் த்ரெட், ஊசி, சமிக்கி, குந்தன் ஸ்டோன் உள்ளிட்ட அலங்காரப் பொருள்கள், ஆரி ஸ்டாண்டு, ஃப்ரேம் என எல்லாவற்றுக்கும் சேர்த்து ஆயிரம் ரூபாய் முதலீடு போதுமானது. 50 சதவிகித லாபம் கிடைக்கும். இது முழுக்க முழுக்க கைவேலைப்பாடு மட்டுமே. மெஷின் தேவையில்லை.

ஆரி வொர்க்... கலைநயம் ப்ளஸ் கற்பனைத்திறன் - பவானி

லாபம்? விற்பனை வாய்ப்பு?

ஆரி வேலைப்பாட்டை முழு உடைக்குச் செய்வதானாலும் சரி, பேட்ச் வொர்க்காகச் செய்வதானாலும் சரி... லாபகரமானதுதான். ஒரு ஜாக்கெட்டுக்கு அதன் வேலைப்பாட்டைப் பொறுத்து 10,000 ரூபாய்கூட கட்டணம் வாங்கலாம்.பேட்ச் வொர்க் செய்வதானால், ஒரு பேட்ச்சுக்கு அதன் அளவைப் பொறுத்து 20 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை வாங்கலாம். ஒரு ஜாக்கெட்டுக்கு 8 முதல் 9 பேட்ச் தேவை. அதற்கான கட்டணத்துடன், நம் கூலியும் சேர்த்து வாங்கலாம்.

பயிற்சி?

அடிப்படைத் தையலோ, எம்ப்ராய்டரி வேலைப்பாடோ தெரிய வேண்டும் என்கிற அவசியமில்லை. ஒருநாள் பயிற்சியில் எளிமையான ஆரி பேட்ச் வொர்க் கற்றுக்கொள்ளலாம். தேவையான பொருள்களுடன் சேர்த்துக் கட்டணம் 1,200 ரூபாய்.

 -  சாஹா, படங்கள்: தே.அசோக்குமார்