கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

ஆல் இந்தியா ட்ரிப் | 10,000 கிமீ | 45 நாட்கள் | 30 நகரங்கள் | 10,000 பைக்கர்கள்!

ஆல் இந்தியா ட்ரிப்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆல் இந்தியா ட்ரிப்

ஆல் இந்தியா ட்ரிப்: பைக் ரைடு

ஆல் இந்தியா ட்ரிப் | 10,000 கிமீ 
| 45 நாட்கள் | 30 நகரங்கள் | 10,000 பைக்கர்கள்!

`ஒரு ஆல் இந்தியா ட்ரிப் போலாமா' என xBhp கேட்டபோது, ஊர் சுத்த கசக்கவா செய்யும் எனக் கிளம்பியவன்தான் 45 நாட்களுக்குப் பிறகு அலுவலகம் திரும்பிய நாளில் இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

நண்பர்களெல்லாம் சேர்ந்து என்ன பேசுறோமோ இல்லையோ... ட்ரிப் பத்திப் பேசாம இருக்க மாட்டோம். கொடைக்கானல் ஆரம்பிச்சு கோவா வரைக்கும் ட்ரிப் போக லொக்கேஷன் தேடுவோம். இயக்குனர் ஷங்கர்கூட அவ்வளவு லொக்கேஷன் தேடி இருக்க மாட்டார். நம்ம ப்ளானிங் எல்லாம் நல்லாதான் செய்வோம். ஆனா ட்ரிப் அந்தளவிலேயே முடிந்துவிடும். அப்படியில்லாமல் எனக்குச் சாத்தியமான இந்த ட்ரிப், இந்தியாவைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பையும், இந்தியா முழுவதும் இருக்கும் பைக்கர்களைச் சந்திக்கும் வாய்ப்பையும் கொடுத்தது.

xBhp என்பது 2003-ல் பைக்கர்களுக்காகத் தொடங்கப்பட்ட கமியூனிட்டி. இன்று இந்தியா முழுவதும் பலரால் பின்தொடரப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இவர்கள் ஆல் இந்தியா ட்ரிப் ஒன்றை ஒருங்கிணைத்து விடுவார்கள். அப்படி ஆரம்பித்த 2022-க்கான திட்டம்தான் இந்த #roadtripunited2022. இந்தப் பயணத்தில் கலந்து கொள்ள மோட்டார் விகடனுக்கு ஒரு சிறப்பு அழைப்பிதழ் அனுப்பியிருந்தது xBhp. அதில் கலந்து கொள்ள பெட்டி படுக்கையோடு கிளம்பிவிட்டேன்.

நவம்பர் 6 - டெல்லியில் தொடங்கிய பயணம், டிசம்பர் 16 மீண்டும் டெல்லியிலே முடிவடைந்தது. 45 நாள் இந்தியா முழுவதும் சுற்றிவிட்டுத் திரும்பினோம். கிட்டத்தட்ட 10,000 கிமீக்கும் மேல் பயணம் செய்த தூரம். என்னோடு சேர்த்து 12 பேர் புறப்பட்டுப் போனோம். ஆக்ராவில் தாஜ்மஹாலின் முன்பு வியந்து நின்றவன், அதே அனுபவத்தை கன்னியாகுமரியில் சூரிய உதயத்தின்போதும் உணர்ந்தேன்.

ஆல் இந்தியா ட்ரிப் | 10,000 கிமீ 
| 45 நாட்கள் | 30 நகரங்கள் | 10,000 பைக்கர்கள்!

எந்த நகரத்திலும் ஒரு நாளுக்கு மேல் தங்கவில்லை. அதனால் சூரிய உதயம் ஒரு மாநிலத்திலும், சூரிய அஸ்தமனம் இன்னொரு மாநிலத்திலும் பார்க்க நேர்ந்தது. இந்தியா முழுவதும் வேறுபட்டு நிற்கிற கலாச்சாரம், பண்பாடு, மொழி, மனிதர்கள் என எல்லாவற்றையும் இந்த நாட்கள் எனக்கு அறிமுகம் செய்தன.

ஒவ்வொரு நகரத்திலும் அங்கு இருக்கும் பைக்கர்களைச் சந்திக்க மீட் அப் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 30-க்கும் மேற்பட்ட நகரங்களில் 300-க்கும் மேற்பட்ட பைக்கிங் கிளப்புகள், ஆயிரக்கணக்கான பைக்கர்கள் உடனான சந்திப்புகள் நடைபெற்றன. எங்களை எது பிரித்தாலும் மோட்டார் சைக்கிள் ஒன்றிணைத்தது. அவர்களின் பைக்குகள், கார்களின் மாடல்கள், பயணங்கள் எனக் கேட்க கேட்கக் குறையாத கதைகள் கிடைத்தன. கன்னியாகுமரி தொடங்கி லடாக் வரை டிவிஎஸ் எக்ஸெல் மொபெட்டில் சென்ற இளைஞர், வின்டேஜ் வாகனங்கள் சேகரித்து அழகு பார்க்கும் பெரியவர், ஸ்கூட்டியில் வேகத்தை 250சிசி ஆக மாற்றிய இளைஞர் எனப் பலரையும் சந்தித்து அவர்களோடு உரையாட முடிந்தது.

ஆல் இந்தியா ட்ரிப் | 10,000 கிமீ 
| 45 நாட்கள் | 30 நகரங்கள் | 10,000 பைக்கர்கள்!
ஆல் இந்தியா ட்ரிப் | 10,000 கிமீ 
| 45 நாட்கள் | 30 நகரங்கள் | 10,000 பைக்கர்கள்!

6 பைக்குகள், 3 கார்களில் பயணம் செய்தோம். TVS NTORQ 125சிசி ஸ்கூட்டர் தொடங்கி 1,340 சிசி கொண்ட Hayabusa வரை ஆறுவிதமான பைக்குகள். மூன்று தார் கார்கள். இந்தியாவைச் சுற்றுவதற்கு இந்த வகை பைக்குகள், கார்கள்தான் என்பது கிடையாது. எதில் வேண்டுமானாலும் போகலாம் என்பதற்கு எங்களின் இந்தப் பயணமே சாட்சி.

டெல்லியில் ஆரம்பித்த ட்ரிப்பை கொல்கத்தா வரை ஒரு பகுதி, கொல்கத்தாவில் இருந்து கன்னியாகுமரி வரை ஒரு பகுதி, கன்னியாகுமரி தொடங்கி மும்பை வரை மற்றொரு பகுதி, மீண்டும் டெல்லிக்கு ஒரு பகுதி என நான்காகப் பிரித்துக் கொண்டோம். இதற்குக் காரணம், நாம் செல்லும் பைக்குகள், கார்கள் ஆகியவற்றிற்கு சர்வீஸ் செய்வது முக்கியமானது. குறிப்பிட்ட தொலைவில் பெட்ரோல், ஆயில், செயின் ஆகியவற்றைச் சோதித்து கொள்ள வேண்டும். அவற்றில் எந்தப் பிரச்சனையும் இல்லாத போதுதான் பயணத்தில் இடையூறு இருக்காது.

ஆல் இந்தியா ட்ரிப் | 10,000 கிமீ 
| 45 நாட்கள் | 30 நகரங்கள் | 10,000 பைக்கர்கள்!

ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு நிறம் உண்டு. ஒரு சுவை உண்டு. நமக்கு இட்லி சாம்பார் போல, டெல்லியில் ஆலு பரோட்டாவும் சப்ஜியும். சப்ஜியாக தயிர், ஊறுகாய் இப்படி எது வேண்டுமானாலும் இருக்கலாம். பிற்பகலுக்குக்கூட ரொட்டி, நாண்-தான். ஊர்ல நல்லா குழைஞ்ச சாதமும் ரசமும் சாப்பிட்ட நான் இங்க வந்து… என வசனமெல்லாம் பேசிட்டு இருக்க முடியாது. கிடைப்பதைச் சாப்பிடத்தான் வேண்டும்.

`பெட்ரோல் விற்கிற விலையில் வெறும் பைக்கர்களைச் சந்திக்க இவ்வளவு பெரிய பயணமா?’ எனக் கேட்டால் அது மட்டும் கிடையாது. இந்தப் பயணத்திற்கு என்று ஒரு நோக்கம் உண்டு. பெரும்பாலான சாலை விபத்துகள் போதைப்பொருள் எடுத்துக் கொண்டு வண்டி ஓட்டுவதால் நடக்கின்றன. இது குறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில் `Say No to Drugs, Say Yes to Motorcycle’ என்கிற வாசகத்தைப் போகும் இடமெல்லாம் எடுத்துச் சென்றோம். அந்தந்த நகரங்களில் இருக்கும் பைக்கர்களுக்குப் போதைப்பொருட்கள் எடுப்பதால் ஏற்படும் விளைவுகளையும், அதற்கு மாற்றாக மோட்டார் சைக்கிள் மீது உங்கள் மோகத்தை காட்டுங்கள் எனவும் அறிவுறுத்தினோம்.

ஆல் இந்தியா ட்ரிப் | 10,000 கிமீ 
| 45 நாட்கள் | 30 நகரங்கள் | 10,000 பைக்கர்கள்!
ஆல் இந்தியா ட்ரிப் | 10,000 கிமீ 
| 45 நாட்கள் | 30 நகரங்கள் | 10,000 பைக்கர்கள்!

தாஜ்மஹால் தொடங்கி கொல்கத்தா ஹவுரா பிரிட்ஜ், ஹைதராபாத் சார்மினார், விசாகப்பட்டினம் கடற்கரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, ஊட்டி மலைத்தொடர், கர்நாடக மலைகள், கோவாவின் கலாச்சாரம், மும்பையின் வர்த்தக வீதிகள், ராஜஸ்தானின் வண்ணமயமான நகரங்கள் என பராம்பரியமும் இயற்கையும் சேர்ந்து கோலோச்சும் இந்தியாவை முழுமையாகப் பார்ப்பதற்கு 45 நாட்கள் போதாது.

கிருஷ்ணகிரியில் சந்தித்த ஒரு இளைஞர் TVS 50-ல் லே - லடாக் வரை போய் வந்ததை எங்களிடம் பகிர்ந்து கொண்டார். பயணத்திற்கு எந்த வாகனம் என்பதா முக்கியம். பயணம் செய்ய விரும்பும் மனம்தான் முக்கியம் எனப் புரிந்தது.

நாங்கள் எடுத்துச் சென்ற ஆறுப் விதமான பைக்குகளிலும் மாறி மாறி பயணம் செய்தேன். பாதுகாப்புக் கவசங்கள் பயணத்தில் மிகவும் முக்கியம். ஹெல்மெட், க்ளோவ்ஸ், ஜாக்கெட், ஷூ போன்ற ரைட்டிங் கியர்ஸ் அணிவது மிகவும் அவசியம். எங்களைச் சந்திக்க வந்த நண்பர்களும் அதை கடைப்பிடித்திருந் தார்கள்.

டெல்லி நகரின் நவநாகரிக கட்டிடங் களைப் பார்வையிட்ட அதே நாளின் முடிவில், ஆக்ராவின் பண்பாட்டு அதிசயத்தையும் பார்க்க நேர்ந்தது. வாழ்வில் மறக்க முடியாத பயணமாக இது அமைந்தது. இன்னொரு பயணத்தில் சந்திப்போம்.