Published:Updated:

அடர்த்தியான மீசை முதல் பளிச் கண்கள்வரை... டீன் ஏஜ் பாய்ஸுக்கு 12 பியூட்டி டிப்ஸ்!

அரும்பு மீசை அடர்த்தியாக வளர உதவும் பியூட்டி டிப்ஸ்.

`எங்கனா வீட்டுல அடங்குறானா' என்று திட்டு வாங்கின டீன் பசங்களை எல்லாம் கொரோனா வீட்டோடு அடைத்துவிட்டது. டீன் பெண்களுக்கு வீட்டு வேலை, க்ராஃப்ட், பியூட்டி கேர் என்று லாக்டௌனிலும் நேரம் செலவழிக்க வழிகள் கிடைக்கின்றன.

Laziness
Laziness
freepik

'நாங்கயெல்லாம் பாவம்... டிவி, சாப்பிடுறது, தூங்குறது, தூங்குறது, சாப்பிடுறது, டிவினு கிடக்கோம்' என்று சலிப்போடு சொல்கிறார்கள் டீன் பாய்ஸ்.

"டோன்ட் வொர்ரி பாய்ஸ். இவ்ளோ நாளா வீடு தங்காம வெயில்ல அலையுறது, கிரிக்கெட் விளையாடுறது, பைக்ல சுத்துறதுன்னு உங்களோட ஹேர், ஸ்கின் எல்லாமே டேமேஜ் ஆகியிருக்கும். இந்த லாக்டெளன் நாள்களை, அவற்றையெல்லாம் சரிபண்ண பயன்படுத்திக்கோங்க.

சில எளிமையான பியூட்டி கேர் எடுத்துக்கிட்டீங்கனா, செல்ஃபி எடுக்க 'பியூட்டி ஆப்' உதவியெல்லாம் அப்புறம் உங்களுக்குத் தேவைப்படாது. 'ஹாய் ஹேண்ட்ஸம்' மெசேஜ்கள் கியான்ரன்டீட்'' என்று சொல்லும் அழகுக்கலை நிபுணர் ப்ரீத்தி,

Preethi (Beauty Expert)
Preethi (Beauty Expert)

டீன் ஏஜ் பாய்ஸுக்கான எளிய குரூமிங் டிப்ஸ் தருகிறார். நல்ல தூக்கம், சமச்சீர் உணவு, உடற்பயிற்சி... இந்த மூன்றும்தான் அழகாக வலம்வருவதற்கான அடிப்படையான விஷயங்கள். அதற்கடுத்துத்தான் வெளிப்புற அழகு பராமரிப்புகள் கைகொடுக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1. தூக்கம்

தொடர்ந்து தாமதமாக உறங்கி தாமதமாக எழும் பழக்கம் இருந்தால், இந்த லாக்டெளன் நாள்களில் அதைச் சரிசெய்ய முயலவும். தினமும் தொடர்ந்து குறிப்பிட்ட நேரத்திலும் குறிப்பிட்ட மணி நேரமும் தூங்கி எழுவது அவசியம்.

Wake up early
Wake up early
freepik

தூக்கம் வரவைக்க, முதலில் செல்போனைத் தள்ளிவைக்க வேண்டும். நல்ல புத்தகங்கள் வாசிப்பது, மனதுக்குப் பிடித்த இசையைக் கேட்பது என இதுபோன்ற ஆரோக்கியமான விஷயங்களைக் கடைப்பிடிக்கவும்.

2. உணவு

பெரும்பாலும் வெளியே இருக்கும் நீங்கள் அதிக வெயிலை அனுபவித்து இருப்பீர்கள். ஆனால், தற்போது வீட்டிலேயே இருப்பதால் வெயிலிலிருந்து பெறப்படும் வைட்டமின் டி குறைபாடு ஏற்படும் வாய்ப்பிருக்கிறது.

பால் பொருள்கள், முட்டை, இறைச்சி, மீன், வெண்ணெய், காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள் போன்றவற்றிலிருந்து வைட்டமின் டி கிடைக்கும். இந்த உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது.

Eating while watching tv is bad
Eating while watching tv is bad
freepik

தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சிப்ஸ், சாக்லேட் போன்ற நொறுக்குத் தீனிகள், ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஃப்ரூட் சாலட், கிரீன் டீ என ஆரோக்கியம் தரும் உணவுகளைச் சாப்பிடவும்.

உடலின் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும். இது சருமத்தையும் புத்துணர்வாக வைத்திருக்கும்.

3. உடற்பயிற்சி

சடாரென உடல் இயக்கம் குறைவாகும்போது, உடலில் கொழுப்பு சேர வாய்ப்பிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் வீட்டிலேயே இருப்பதால் சுறுசுறுப்பில்லாமல் எப்போதும் சோம்பலாக உணர்வீர்கள்.

Stepping Stairs Exercise
Stepping Stairs Exercise
freepik

தினசரி வீட்டு மொட்டை மாடியில் நடைப்பயிற்சி, மாடிப்படிகளில் ஏறி இறங்கும் பயிற்சி என எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலே உடலில் ரத்த ஓட்டம் பாய்ந்து சுறுசுறுப்பை பெறமுடியும். உங்களுக்குப் பிடித்த, ஆர்வத்தைத் தூண்டும் உடற்பயிற்சி ஆப்பை டவுன்லோடு செய்தும் பயன்படுத்தலாம். உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

4. ஹேர் கேர்

வாரம் மூன்று முறை தலைக்கு குளிக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு முறையாவது எண்ணெய்க் குளியலாக இருந்தால் சிறப்பு. முடி ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

எண்ணெய் வைத்ததும் நன்கு மசாஜ் செய்து, குறைந்தபட்சம் அரை மணி நேரம் ஊறவைத்து, பின்னர் தலைக்குக் குளிக்கவும்.

வீட்டிலேயே இருப்பதால் தலைக்கு சீப்பை காட்டாமல் இருக்காதீர்கள். தினசரி இருமுறை பெரிய பல்லுள்ள சீப்பால் தலையை அழுந்த வாரவும். இது தலைப்பகுதியில் ரத்தஓட்டம் சீராகப் பாய உதவும். இதனால் முடியின் வளர்ச்சியும் தூண்டப்படும்.

Healthy Hair
Healthy Hair
freepik

ஹேர் டிரையர் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடவும். அந்த வெப்பக்காற்றால் கேசம் வறண்டு போகும்.

இதுவரை உங்களுக்கு விருப்பமான ஸ்டைலுக்குத் தலைமுடி படியாமல் இருந்திருந்தால். இதுதான் சந்தர்ப்பம். தினமும் உங்களுக்குப் பிடித்த ஹேர்ஸ்டைலைச் செய்து, ஹேர் பின்களைக் குத்தி முடியை அதே ஸ்டைலில் படியவிட்டுப் பழக்கலாம்.

தலையையும் கேசத்தையும் சுத்தமாகப் பராமரித்தாலே பொடுகுத் தொல்லை ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

5. ஸ்கின் கேர்

டீன் ஏஜ் சருமத் தொல்லைகளில் முக்கியமானது முகப்பரு. தினமும் முகத்தை தரமான ஃபேஸ்வாஷ் பயன்படுத்தி சுத்தமாகப் பராமரிப்பது அவசியம்.

எண்ணெய்ப் பசை சருமத்தினருக்குத்தான் முகப்பரு தொல்லை அதிகம். இவர்கள் அடிக்கடி வெறும் தண்ணீரில் முகத்தைக் கழுவித் துடைத்தால், சரும துவாரங்கள் அடைபடுவதைத் தவிர்க்கலாம். அந்தத் துவாரங்கள் அடைபடுவதுதான் முகப்பரு வருவதற்கான முதல் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Exfoliate your face regularly
Exfoliate your face regularly
freepik

முகத்தில் மூக்கு மற்றும் தாடைப் பகுதியில் தங்கும் அழுக்கால் பிளாக் மற்றும் வொயிட் ஹெட்ஸ் தொல்லை ஏற்படும். அதனால் அப்பகுதிகளில் அழுக்குத் தங்காமல் சுத்தப்படுத்துவது அவசியம். இதற்கு எளிமையான வழி, தோசை மாவு. இதில் சிறிதளவு எடுத்து மூக்கு மற்றும் தாடையின் மீது பூசி, விரல்களால் மென்மையாக மசாஜ் செய்து கழுவினால் பலனளிக்கும்.

6. கண்கள் பளிச்சிட

பயன்படுத்திய சாதாரண டீ அல்லது கிரீன் டீ பேக்கை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். நேரம் கிடைக்கும்போது, கண்களை மூடி படுத்தபடி அந்தக் குளிர்ந்த டீ பேக்ஸை கண்கள் மேல் வைத்து 10 நிமிடங்கள் கழித்து எடுத்துவிடுங்கள்.

Bright eyes
Bright eyes
freepik

அதிகமாக மெனக்கெடாமல், இதேபோல் உருளைக்கிழங்குத் துருவல், வட்ட வடிவில் நறுக்கிய வெள்ளரிக்காய்த் துண்டுகள் போன்றவற்றையும் கண்களில் வைக்கலாம். இதைத் தொடர்ந்து செய்துவந்தால் கண்கள் பிரகாசிக்கும்.

7. வறண்ட உதடுகளுக்கு

Remedy for Dry Lips
Remedy for Dry Lips
freepik

ஒரு ஸ்பூன் பாலுடன் கால் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து உதடுகளில் தடவி மிருதுவாகத் தேய்க்கவும். தினசரி 2 அல்லது 3 நிமிடங்களுக்குத் தொடர்ந்து செய்துவந்தால், உதடுகள் மிருதுவாக மாறும்.

8. தாடி மற்றும் மீசை

அரும்பு மீசை வளரும் இந்த வயதில், தினமும் இரவு உறங்கச் செல்லும் முன், சிறிதளவு விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்க் கலவையை மீசை மற்றும் தாடியில் பூசி மசாஜ் கொடுக்கவும்.

தினசரி 5 நிமிடங்கள் கொடுத்தால் போதுமானது. இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து மீசை மற்றும் தாடியின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு முடிகள் இடைவெளியில்லாமல் அடர்ந்து வளரவும் உதவும்.

Grow Your Mustache & Beard faster
Grow Your Mustache & Beard faster
freepik

இதுவரை மொழுமொழுவென அமுல் பேபியாக இருந்த முகத்தில் அரும்பு மீசை, தாடி வளரும் இந்தப் பருவத்தில் வழக்கமான ஃபேஸ் வாஷ் போதுமா..? தாடி, மீசை மற்றும் கிருதா பகுதிகளில் கூடுதல் அழுக்குகள், இறந்த செல்கள் தங்கி இருக்க வாய்ப்பிருக்கிறது.

அதனால் குளிக்கச் செல்வதற்கு முன், குழந்தைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய பேபி டூத் பிரஷ்ஷை சிறிதளவு பாலில் தொட்டு தொட்டு மீசை, தாடி மற்றும் கிருதா பகுதிகளில் மிருதுவாகத் தேய்க்கவும். இதை வாரம் இருமுறை செய்தாலே போதும், முகத்தில் முடி வளர்ந்துள்ள பகுதிகளில் பூஞ்சை மற்றும் பொடுகு ஏற்படாமல் தவிர்க்கலாம்.

உங்களுக்குப் பொருத்தமான ஸ்டைலில் தாடி வளர்ப்பது எப்படி? #InternationalMensDay

9. பாடி கேர்

ஒரு மடங்கு எண்ணெய்க்கு (தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் ஆயில்) அரை மடங்கு சர்க்கரை சேர்த்து (உங்கள் உடலுக்குத் தேவைப்படும் அளவு) நன்கு கலந்துகொள்ளவும்.

Do Body Scrub
Do Body Scrub
freepik

குளிக்கும் முன் உடல் முழுவதும் 10 நிமிடங்கள் பூசி மசாஜ் செய்யவும். பிறகு, பாடி வாஷ் பயன்படுத்தி குளித்துவிடுங்கள். சருமத்தின் இறந்த செல்கள் மூற்றிலுமாக நீங்கி சருமம் சுத்தமாகவும் பிரகாசமாகவும் இருக்கும்.

10. மிருதுவான கைகளுக்கு

இயற்கையாகவே பெண்களைவிட ஆண்களுக்கு உள்ளங்கை கடினமானதாக இருந்தாலும். பைக் ஓட்டுவது, கடினமான வேலைகள் செய்வதால் உள்ளங்கை சருமம் மேலும் சொரசொரப்பாக மாறக்கூடும்.

Easy Remedy to get Soft Hands
Easy Remedy to get Soft Hands
freepik

இதற்கு அரை மூடி எலுமிச்சை சாறு மற்றும் கால் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து உள்ளங்கையில் பூசி பரபரவென சூடுபரக்க தேய்க்கவும். சர்க்கரை கரையும்வரை தேய்க்கவும். இதை தினமும் செய்துவந்தால் லாக்டெளன் முடிவதற்குள் உங்கள் கைகள் மிருதுவாக மாறிவிடும்.

11. பொலிவான கால்களுக்கு

அரிசி மாவு அல்லது தோசை மாவு ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து பாதங்களின் மேற்பகுதியில் பூசி, நன்கு அழுத்தமாகத் தேய்த்து 5 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும்.

Give a foot massage
Give a foot massage
freepik

பிறகு அப்படியே காயவிட்டு, காய்ந்த பிறகு கழுவவும். பாதங்களின் கருமை, மற்றும் படிந்துள்ள அழுக்குகள், இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி பாதங்கள் பளிச் சுத்தமாகும்.

12. மன அழுத்தம் நீங்க

'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது 100 சதவிகிதம் உண்மை. உங்கள் உள்ளம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால் அது முகத்தில் பிரதிபலிக்கும்

Always be happy
Always be happy
freepik

எந்நேரமும் செல்போனில் கேம்ஸ், சோஷியல் மீடியாவில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பது என மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் இருப்பது அவசியம்.

உங்களுக்கான ஆர்வம் மற்றும் திறமையை மேம்படுத்தும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். இதன் மூலம், வீட்டிலேயே அடைந்து கிடப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தைச் சமாளித்து உபயோகமாகவும் உற்சாகமாகவும் இருக்கலாம்!"

லாக்டௌனில் எடை அதிகரிக்காமல் பராமரிக்க... 5 எளிய உடற்பயிற்சிகள்! 
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு