Published:Updated:

வீட்டிலேயே செய்யக்கூடிய 5 விதமான அடிப்படை பார்லர் சர்வீஸ் ! #StayHome

பார்லர் சர்வீஸ் ( freepik )

ஐ ப்ரோ த்ரெடிங், ஃபேஷியல், மெனிக்யூர் என, நீங்கள் பியூட்டி சலூனுக்குச் சென்று செய்துகொள்ளக்கூடிய பல சர்வீஸ்களை, வீட்டிலேயே செய்துகொள்ள முடியும்

வீட்டிலேயே செய்யக்கூடிய 5 விதமான அடிப்படை பார்லர் சர்வீஸ் ! #StayHome

ஐ ப்ரோ த்ரெடிங், ஃபேஷியல், மெனிக்யூர் என, நீங்கள் பியூட்டி சலூனுக்குச் சென்று செய்துகொள்ளக்கூடிய பல சர்வீஸ்களை, வீட்டிலேயே செய்துகொள்ள முடியும்

Published:Updated:
பார்லர் சர்வீஸ் ( freepik )

இந்த லாக் டவுன் நாள்களில் `மளிகைக் கடையெல்லாம் மூடிட்டாகூட பெண்கள் சமாளிச்சுடுவோம், ஆனா பியூட்டி பார்லர் மூடினதுதான் தாங்க முடியலை' என வருத்தத்தில் இருக்கும் பெண்களுக்கும், `அப்பாடா, இந்த மாசம் ஒரு பெரிய பில்தொகை மிச்சம்' என நிம்மதி பெருமூச்சுவிடும் கணவர்களுக்கும் அழகுக்கலை நிபுணர் ராதிகா சொல்லும் விஷயங்கள் ஆறுதலாக இருக்கும்...

அழகுக்கலை நிபுணர் ராதிகா
அழகுக்கலை நிபுணர் ராதிகா

``ஐ ப்ரோ த்ரெடிங், ஃபேஷியல், மெனிக்யூர் என, நீங்கள் பியூட்டி சலூனுக்குச் சென்று செய்துகொள்ளக்கூடிய பல சர்வீஸ்களை, வீட்டிலேயே செய்துகொள்ள முடியும்" என்று சொல்லும் ராதிகா, அதற்கான வழிகளையும் விளக்குகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1. ஐ ப்ரோ த்ரெடிங்

ஐ ப்ரோ த்ரெடை வைத்து நம்முடைய புருவங்களை நாமே திருத்திக்கொள்ள முடியும் என்றாலும் அதற்கு, தொடர் பயிற்சி அவசியம். சுலபமாகச் செய்ய முடியாது. சிலருக்கு புருவ முடிகள் மெதுவாக வளரும் அவர்களுக்குப் பிரச்னை இல்லை.

அடர்த்தியாக புருவ முடிகள்
அடர்த்தியாக புருவ முடிகள்
freepik

சிலருக்கு வேகமாகவும் அடர்த்தியாகவும் வளரும். இவர்கள் தங்களது புருவ வடிவத்தைத் தாண்டி சுற்றிலும் வளரும் `எக்ஸ்ட்ரா ஹேர்' எனப்படும் முடிகளை மட்டும் நீக்கிக்கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செலோ டேப் ஒன்றை எடுத்து ஒன்றரை இன்ச் அளவுக்கு வெட்டிக்கொள்ளவும். கண்ணாடி முன் நின்று, ஒரு கண்ணை மூடி, அதன் இமைகளின் மீது விரல்களை வைத்து சுருக்கமில்லாம இழுத்துப் பிடிக்கவும். (பார்லரில் ஐ ப்ரோ செய்யும்போது கண்களைப் பிடிப்பதுபோல்)

பின்னர் செலோ டேப்பை புருவத்தைச் சுற்றிலும் உள்ள எக்ஸ்ட்ரா முடிகள் வளர்ந்துள்ள இடத்தில் அழுத்தமாக ஒட்டிவிடுங்கள். நன்கு அழுத்தம் கொடுத்த பின்னர் முடிகள் வளர்ந்திருக்கும் திசைக்கு எதிர் திசையிலிருந்து, ஒட்டியிருக்கும் செலோ டேப்பின் நுனியைப் பிடித்து, அதன் எதிர்திசையை நோக்கி முடிந்த அளவுக்கு வேகமாகப் பிடித்து இழுக்கவும்.

புருவ வடிவத்தை மீறி வளர்ந்துள்ள கூடுதல் முடிகள் செலோ டேப்பில் ஒட்டியபடியே சருமத்தைவிட்டு நீங்கிவிடும்.

ஐபுரோ பிளக்கிங்
ஐபுரோ பிளக்கிங்
freepik

இல்லையேல், பிளக்கர் எனப்படும் உபகரணம் கைவசம் இருந்தால். அதன் உதவியால், தேவையில்லாத புருவ முடிகளை ஒவ்வொன்றாக நீக்கிக்கொள்ளலாம்.

2. மினி ஃபேஷியல்

மாதத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை பார்லர் சென்று ஃபேஷியல் செய்தவர்கள், தற்போது வீட்டிலேயே செய்து கொள்ளலாம். இதில் நீராவி பிடிப்பது, பிளாக் அண்ட் வொயிட் ஹெட்ஸ் நீக்குவது போன்றவை அவசியமில்லை.

வீட்டைத் தாண்டி வெளியே செல்லாததால், முகத்தில் பெரிதாக மாசு, இறந்த செல்கள் போன்றவை இருக்காது. அதனால் வாரம் ஒரு முறை மிக எளிய முறையில் `மினி ஃபேஷியல்' செய்துகொண்டாலே போதும்.

எண்ணெய்ப் பசை சருமம் :

ஸ்டெப் : 1

எண்ணெய்ப் பசை சருமத்துக்கான ஃபேஸ் வாஷை பயன்படுத்தி முகத்தைக் கழுவவும். இது முகத்தில் படிந்துள்ள அதிகப்படியான எண்ணெய்ப் பசையை நீக்கிவிடும்.

ஸ்டெப் : 2

தேவையான அளவு அரிசி மாவு (அல்லது தோசை மாவு) இதனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி, விரல் நுனிகளால் சிறுசிறு வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். இதனால் முகத்தில் படிந்துள்ள அழுக்குகள் நீங்கும்.

மசாஜ் செய்யவும்
மசாஜ் செய்யவும்
freepik

ஸ்டெப் : 3

சோற்றுக் கற்றாழையின் சதைப்பகுதியை நன்கு அலசவும், இதை மசித்துக்கொண்டு அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தக்காளி சாற்றைக் கலக்கவும். (ஏதாவது ஒன்றுதான் இருக்கிறது என்றாலும் பரவாயில்லை, பயன்படுத்தலாம்) இந்தக் கலவையை முகத்தில் தடவவும். பிறகு விரல்களால் முகத்தில் கீழிருந்து மேல் நோக்கி மசாஜ் கொடுக்கவும்.

ஸ்டெப் : 4

தேவையான அளவு கடலைமாவுடன் எலுமிச்சை சாறு கலந்து குழைத்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். (சருமத்தில் சுருக்கம் வராமல் தடுக்க, பேக் காயும்வரை பேசாமல் சிரிக்காமல் இருப்பது அவசியம்.)

வறண்ட சருமம்

ஸ்டெப் :1

வறண்ட சருமத்துக்கான ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தைக் கழுவவும். இது சருமத்தின் அழுக்கை நீக்குவதுடன், ஈரப்பதத்தை தக்கவைக்கும்.

ஸ்டெப் : 2

துருவிய தேங்காய் ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். இதைப் பிசைந்து முகத்தில் பூசவும். பின்னர் விரல் நுனிகளால் முகத்தில் சிறுசிறு வட்ட வடிவில் மசாஜ் செய்யவும்.

தேங்காய் மசாஜ்
தேங்காய் மசாஜ்
freepik

ஸ்டெப் : 3

தேவையான அளவு நெய் அல்லது உப்பு சேர்க்காத வெண்ணெயை முகத்தில் தடவவும். பிறகு விரல்களால் முகத்தில் கீழிருந்து மேல் நோக்கி மசாஜ் கொடுக்கவும்.

ஸ்டெப் : 4

தேவையான அளவு பச்சைப்பயறு மாவு அல்லது கோதுமை மாவு எடுத்துக்கொள்ளவும். இதனுடன் பால் சேர்த்துக் குழைத்துக்கொள்ளவும். இதை முகத்தில் பேக்காக போட்டு, 10 நிமிடங்கள் கழித்துக் கழுவவும்.

காம்பினேஷன் சருமம்

ஸ்டெப் : 1

ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தைக் கழுவவும்.

ஸ்டெப் : 2

ஃபில்டர் காபிக்கு டிகாக்ஷன் எடுத்ததும் மிஞ்சும் காபி தூள் ஒரு டீஸ்பூன், அதனுடன் சர்க்கரை அரை டீஸ்பூன் சேர்த்துக் கலந்துகொள்ளவும். இக்கலவையை முகத்தில் பூசி, விரல் நுனிகளால் முகத்தில் சிறுசிறு வட்ட வடிவில் மசாஜ் செய்யவும்.

ஸ்டெப் : 3

கோதுமை மாவு ஒரு டீஸ்பூன், நெய் ஒரு டீஸ்பூன் மற்றும் கஸ்தூரி மஞ்சள்தூள் அரை டீஸ்பூன் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் குழைத்து முகத்தில் தடவி, கீழிருந்து மேலாக மசாஜ் செய்யவும்.

ஸ்டெப் : 4

தேவையான அளவு மைதா மாவுடன் தயிர் சேர்த்துக் குழைத்துக்கொள்ளவும். இதை முகத்தில் பேக்காக போட்டு, 10 நிமிடங்கள் கழித்துக் கழுவவும்.

3. ஹேர் ஆயில் மசாஜ்

மாதம் ஒருமுறை ஹெட் மசாஜ் செய்வதற்குப் பதிலாக வாரம் இருமுறை வீட்டிலேயே செய்துகொள்ளலாம். தலைப்பகுதியில் இருந்து கூந்தல் முழுவதும் தேங்காய் எண்ணெயைத் தடவிக்கொள்ளவும். பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணெயை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக்கொள்ளவும்.

கூந்தல் பராமரிப்பு
கூந்தல் பராமரிப்பு
freepik

வீட்டில் டிவி பார்க்கும் நேரத்திலோ அல்லது ஓய்வு நேரத்திலோ, கை விரல்களைக் கிண்ணத்தில் உள்ள எண்ணெயில் விட்டெடுத்து, வலி பொறுக்கும் அளவுக்கு கூந்தலின் வேர்ப்பகுதியில் ஆரம்பித்து நுனிவரை இழுத்தவாறு தடவவும். 15 நிமிடங்கள் இதைச் செய்யலாம். பிறகு நாள் முழுவதும் ஊறவிட்டு, மறுநாள் தலையை அலசலாம்.

இதனால் கூந்தல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறுவதோடு, தொடர்ந்து செய்தால் நாளடைவில் ஸ்ட்ரெயிட்டனிங் செய்ததைப்போல் கூந்தல் நேராகும்.

4. மெனிக்யூர் & பெடிக்யூர்

பெரிதாக மெனக்கெடாமல், எளிதாகச் செய்யக்கூடிய முறை இது. ஆனால் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை தவறாமல் செய்துவந்தால், நாளடைவில் கைகளும், பாதங்களும் பட்டுபோல மிருதுவாக மாறும்.

பாத்திரத்தில் கைகள் (விரலிலிருந்து மணிக்கட்டுவரை) மற்றும் கால்கள் (பாதத்திலிருந்து கணுக்கால்வரை) மூழ்குமளவுக்கு வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொள்ளவும். ( கைகளுக்கு பாத்திரமும், கால்களுக்கு பக்கெட்டும் பயன்படுத்தவும்)

இதில் ஒரு டேபிள்ஸ்பூன் கல் உப்பு, சிறிதளவு ஷாம்பூவை கலந்துகொள்ளவும்.

மெனிக்யூர் & பெடிக்யூர்
மெனிக்யூர் & பெடிக்யூர்
freepik

கைகள் மற்றும் கால்களை இதில் 15 முதல் 20 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு பிரஷ் அல்லது பீர்க்கங்காய் நாரில் தேய்த்துக் கழுவவும். (கை மற்றும் காலுக்கென தனித்தனியே பயன்படுத்தவும்)

ஈரத்தை டவலால் துடைத்துவிட்டு. அளவாக தேங்காய் எண்ணெயை எடுத்து கைகள் மற்றும் பாதங்களில் தடவி 5 முதல் 10 நிமிடங்கள்வரை மசாஜ் கொடுக்கவும்.

5. இன்ஸ்டன்ட் ப்ளீச்

பால் பவுடர் ஒரு டீஸ்பூன், தேன் ஒரு டீஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து குழைத்துக்கொள்ளவும்.

உடனடியாக முகம் பிரகாசிக்கும்
உடனடியாக முகம் பிரகாசிக்கும்
freepik

இதைக் கழுத்து மற்றும் முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். உடனடியாக முகம் பிரகாசிக்கும். (பால் பவுடர் இல்லையென்றால் மாற்றாக மைதா மாவைப் பயன்படுத்தலாம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism