அழகுபடுத்துதல் என்பது உங்கள் திறமையை வெளிப்படுத்தும் ஒரு கலை. அந்தக் கலை உங்களுக்குள் ஒளிந்திருப்பது உங்களுக்கே தெரியாத நிலையில், அதை வெளிக்கொணர்ந்து, வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வழிகாட்டும் ஒரு பயிற்சிதான், அவள் விகடன் பியூட்டி வொர்க்ஷாப்.

நவம்பர் 17-ம் தேதி சென்னையில் நடந்த இந்தப் பயிற்சி முகாமில் சருமத்துக்கேற்ற ஃபவுண்டேஷன், உதடுகளுக்கேற்ற லிப் ஷேடு, முகம் மற்றும் சருமத்துக்கான தினசரி பராமரிப்பு முறைகள், நியூட்ரல் மேக்கப், ஐ மேக்கப், பார்ட்டி மேக்கப், உடலமைப்புக்கேற்ற உடைகள், வீட்டிலேயே ஸ்ட்ரெயிட்டனிங், கர்லிங் செய்முறைகள், கூந்தல் பராமரிப்பு முறைகள் ஆகியவற்றை மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ராதிகா, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் வினோத் பாமா ஆகியோர் செய்முறை விளக்கத்துடன் பயிற்றுவித்தனர்.

வாணியம்பாடியிலிருந்து இந்தப் பயிற்சியில் கலந்து கொள்வதற்காகவே சென்னைக்கு வந்திருந்த அவள் வாசகி ஆர்.பவித்ரா, ‘‘இந்தப் பயிற்சி யின் ஹைட்லைட்டே மிக எளிதாகவும் விரை வாகவும் மேக்கப் செய்யும் முறையைக் கற்றுத் தந்ததுதான். நான் தொழில்முனைவோர் ஆவதற்கான விதையை இந்த பியூட்டி வொர்க்ஷாப் ஊன்றியிருக்கிறது’’ என்றார்.

‘‘நான் தயாரிக்கும் மூலிகை அழகுசாதனப் பொருள்களை எப்படியெல்லாம் விற்கலாம் என்கிற பாதையை இந்த வொர்க்ஷாப் காட்டியது” என்கிறார் சென்னை, சோழிங்க நல்லூரைச் சேர்ந்த பி.ராதிகா.

‘‘நவீன பொருள்களைக்கொண்டு பல விதமான பயிற்சிகளைப் பெற்றேன். தேங்க்ஸ் அவள் விகடன்” என்கிறார் பயிற்சியில் கலந்து கொண்ட பெருங்களத்தூரைச் சேர்ந்த எஸ்.மகாலஷ்மி.

அழகுக்கலையில் ஆர்வமுள்ள பெண் களுக்கு, ‘இதை நாம பிசினஸா எடுத்துச் செய்யலாமே’ என்கிற யோசனை மிதக்க ஆரம்பித்திருக்கும் நிலையில் அவள் விகடன் நடத்திய பியூட்டி வொர்க்ஷாப்புக்கு வந்தவர்களின் அடுத்த எதிர்பார்ப்பு, `ஹெச்டி (High Definition) மேக்கப் பயிற்சி எப்போ?’ என்பதுதான்!