Election bannerElection banner
Published:Updated:

`பிரைடல் மேக்கப்பில் நல்ல வருமானம் ஈட்டலாம்!' - வாசகிகளுக்கு வழிகாட்டிய அவள் விகடன் பயிற்சி

H3 Beauty Academy
H3 Beauty Academy

மேக்கப்போடுவது என்பது 'ஸ்கின் ப்ளே' கலை. ஒருவரின் முகத்தில் மேக்கப் போடும்போது கைகளின் இதத்தை வாடிக்கையாளர்கள் உணர வேண்டும். அது பழகி, பிடித்துப்போய்விட்டால் வாடிக்கையாளர்கள் கையைவிட்டுப் போகமாட்டார்கள்.

தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள், இல்லத்தரசிகள், கல்லூரி மாணவிகள் அனைவருக்கும் ஏற்ற தொழில் வாய்ப்பு `பிரைடல் மேக்கப்'. முறையான நிபுணர்களிடம் பயிற்சி பெற்றால் அசத்தல் வருமானம் ஈட்டும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக மாறிவிடலாம். சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு அவள் விகடன் நடத்திய நிகழ்வுகளின் தொடர்ச்சியாக H3 Beauty Academy உடன் இணைந்து Basic to Advanced Makeup & Bridal Styling என்ற பயிற்சியை வாசகிகளுக்கு வழங்கியது.

H3 Beauty Academy
H3 Beauty Academy

5,000 ரூபாய் மதிப்புள்ள பயிற்சி அவள் விகடன் வாசகிகளுக்காக ரூ.500 சிறப்புக் கட்டணத்தில் வழங்கப்பட்டது. மார்ச் 27, 28 ஆகிய இரண்டு தேதிகளில் நான்கு பேட்சுகளாக நடைபெற்ற பயிற்சியில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கோவிட்-19 பெருந்தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறைவான எண்ணிக்கையிலானவர்களே பயிற்சியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகியவற்றுடன் பயிற்சி நடைபெற்றது.

மேக்கப் ஆர்ட்டிஸ்ட் உமேஸ்வரி, செலிபிரிட்டி ஸ்டைலிஸ்ட் சினேகா சஜித், ஹேர் ஸ்டைலிஸ்ட் சுகுணா ஆகியோர் வாசகிகளுக்குப் பயிற்சியை வழங்கினர். மணப்பெண்ணுக்கு மட்டுமல்லாமல் நாள்தோறும் போட்டுக்கொள்வதற்கு ஏற்ற மேக்கப் தொடங்கி விதமான ஹேர்ஸ்டைல்கள் வரை பயிற்சியில் கற்றுக்கொடுக்கப்பட்டன. பல்வேறு மேக்கப் பிராண்டுகளின் தன்மை, அவற்றை எவ்வாறு உபயோகப்படுத்துவது என்பன போன்ற தகவல்களும் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டன.

H3 Beauty Academy
H3 Beauty Academy

பயிற்சியின்போது பேசிய உமேஸ்வரி, ``மேக்கப் போடுவது என்பது 'ஸ்கின் ப்ளே' கலை. ஒருவரின் முகத்தில் மேக்கப் போடும்போது கைகளின் இதத்தை வாடிக்கையாளர்கள் உணர வேண்டும். அது பழகி, பிடித்துப்போய்விட்டால் வாடிக்கையாளர்கள் நம்மைவிட்டுப் போகமாட்டார்கள்.

எந்த மேக்கப் ஆனாலும் முதலில் க்ளென்சிங், டோனிங், மாய்ஸ்ச்சரைஸிங் செய்வது அடிப்படை. இப்போது பல பிராண்டுகள் வந்துவிட்டதால் விதவிதமான டோனர்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. ஆனால், டோனிங்குக்கு 'பெஸ்ட்' ரோஸ்வாட்டர்தான்.

Organic makeup kit
Organic makeup kit

டிரெண்டில் வந்துகொண்டே இருக்கும் மேக்கப் பொருள்களைப் பற்றிய அறிவை வளர்த்துக்கொண்டே இருந்தால்தான், தொழிலில் நீடித்து நிற்க முடியும்" என்னும் தகவல்களை அளித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் ரூ.350 மதிப்புள்ள ஆர்கானிக் மேக்கப் கிட் வழங்கப்பட்டது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு