Published:Updated:

அவள் விகடன் வழங்கும் `அழகுக்கு அழகு சேர்ப்போம்' பியூட்டி வொர்க்ஷாப்!

அவள் விகடன் வொர்க்ஷாப்
அவள் விகடன் வொர்க்ஷாப்

எப்படி சருமத்தைப் பாதுகாத்துக்கொள்வது எனக் குழம்பிப்போய் இருப்பவர்களுக்குக் கைகொடுக்க வருகிறது அவள் விகடனின் இலவச ஆன்லைன் பயிற்சி.

'அதான் வெளியே எங்கேயும் செல்வதில்லையே, அப்புறம் எதற்கு அழகு சாதனப் பொருள்கள்' எனப் பலர் அவற்றை மூட்டைகட்டி வைத்திருப்பீர்கள். 'வொர்க் ஃப்ரம் ஹோம் செய்துகொண்டு வீட்டிலேயேதான் இருக்கிறோம், எதற்கு அழகு பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டும்' என்று நினைக்கலாம்.

Beauty
Beauty

ஆனால், வெளியே எங்கேயும் செல்லவில்லை என்றாலும், சருமப் பராமரிப்பு மிகவும் அவசியமானது. போதிய சூரிய ஒளி, ஈரப்பதம் போன்றவை உடலுக்குக் கிடைக்கவில்லை என்றால் ஏராளமான சருமப் பிரச்னைகள் ஏற்படும்.

'என்றாலும்... லாக்டௌன் என்பதால் பார்லர்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், எப்படி சருமத்தைப் பாதுகாத்துக்கொள்வது' எனக் குழம்பிப்போய் இருப்பவர்களுக்குக் கைகொடுக்க வருகிறது அவள் விகடனின் இலவச ஆன்லைன் பயிற்சி.

Aval Vikatan Workshop
Aval Vikatan Workshop

வீட்டிலேயே சருமப் பராமரிப்பு, கூந்தல் பாதுகாப்பு, ஹேர் ஆயில், ஹேர் பேக், ஹெர்பல் ஃபேஸ் பேக், ஹெர்பல் பிளீச் மற்றும் உங்கள் சந்தேகங்களுக்கான செய்முறை விளக்கம் அளிக்கவுள்ளார் பிரபல பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா.

வரும் சனிக்கிழமை, மே 23-ம் தேதி மாலை 3 மணி முதல் 5 மணி வரை, இந்த ஆன்லைன் பியூட்டி வொர்க்‌ஷாப் நடைபெறவுள்ளது.

அடர்த்தியான மீசை முதல் பளிச் கண்கள்வரை... டீன் ஏஜ் பாய்ஸுக்கு 12 பியூட்டி டிப்ஸ்!

இதில், அழகு, கூந்தல் மற்றும் சருமப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விதமான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதில் கலந்துகொள்ள விரும்புபவர்களை, இந்த லிங்க்கில் பதிவு செய்ய வரவேற்கிறோம். https://bit.ly/avalbeauty

அடுத்த கட்டுரைக்கு