லைஃப்ஸ்டைல்
ஆசிரியர் பக்கம்
ஹெல்த்
என்டர்டெயின்மென்ட்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

சருமத்துக்கும் கூந்தலுக்கும் கற்றாழை செய்யும் மாயம்...

கற்றாழை
பிரீமியம் ஸ்டோரி
News
கற்றாழை

கற்றாழையைப் பயன்படுத்தி நாம் வீட்டிலேயே செய்துகொள்ளக் கூடிய அழகு சிகிச்சைக் குறிப்புகள்

சருமத்துக்கும் கூந்தலுக்கும் கற்றாழை செய்யும் மாயம்...
கற்றாழை... நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்தது. சருமத்தின் அழகை மீட்டெடுப்பதில் முதன்மையானது. கற்றாழையைப் பயன்படுத்தி நாம் வீட்டிலேயே செய்துகொள்ளக் கூடிய அழகு சிகிச்சைக் குறிப்புகளை வழங்குகிறார் அழகுக்கலை நிபுணர் வினோத் பாமா.
சருமத்துக்கும் கூந்தலுக்கும் கற்றாழை செய்யும் மாயம்...

ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் இரண்டு டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்துக் கலக்கவும். இதை இரவு படுக்கச் செல்லும்முன் கண் இமைகள் மற்றும் புருவங்களில் அப்ளை செய்யவும். புருவங்களும் கண் இமைகளும் அடர்த்தியாக வளரும்.

சருமத்துக்கும் கூந்தலுக்கும் கற்றாழை செய்யும் மாயம்...

விளக்கெண்ணெய் ஒரு டீஸ்பூன், வைட்டமின் `ஈ' எண்ணெய் இரண்டு டீஸ்பூன், கற்றாழை ஜெல் கால் கப் இவற்றை ஒன்றாகக் கலந்து ஸ்கால்ப் பகுதியில் அப்ளை செய்யவும். லேசாக மசாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து, மைல்டு ஷாம்பூ வால் கூந்தலை அலசவும். வாரம் ஒருமுறை செய்து வர தலைமுடி அடர்த்தியாக வளரும்.

சருமத்துக்கும் கூந்தலுக்கும் கற்றாழை செய்யும் மாயம்...

தேங்காய்ப்பால் கால் கப், கற்றாழை ஜெல் கால் கப் இரண்டையும் ஒன்றாக மிக்ஸ் செய்துகொள்ளவும். கூந்தலில் தேய்த்து 30 நிமிடங்கள் காத்திருக்கவும். பிறகு வெறும் தண்ணீர் கொண்டு கூந்தலை அலச வும். வாரம் இருமுறை செய்து வர, கூந்தல் பிளவு, வறட்சி போன்றவை நீங்கும்.

சருமத்துக்கும் கூந்தலுக்கும் கற்றாழை செய்யும் மாயம்...

கற்றாழை ஜெல் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு இரண்டையும் சம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, முகம், கழுத்து, கைகளில் அப்ளை செய்து மசாஜ் செய்யவும். வாரம் இருமுறை செய்து வர, தோல் சுருக்கங்கள் வராமல் எப்போதும் இளமையாக இருக்கலாம்.

சருமத்துக்கும் கூந்தலுக்கும் கற்றாழை செய்யும் மாயம்...

கற்றாழை ஜெல் ஒரு டீஸ்பூன், தேன் இரண்டு டீஸ்பூன், சர்க்கரை ஒரு டீஸ்பூன் மூன்றையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும். இதைச் சருமத்தில் அப்ளை செய்து ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இது இறந்த செல்களை நீக்கி சருமத்தை மிளிரச் செய்யும்.

சருமத்துக்கும் கூந்தலுக்கும் கற்றாழை செய்யும் மாயம்...

கற்றாழையின் தோலைச் சீவி, உள்ளிருக்கும் ஜெல்லை தனியே எடுக்க வேண்டும். பிறகு, அதிலிருக்கும் கொழகொழப்புத் தன்மை நீங்கும்வரை நன்றாகக் கழுவ வேண்டும். அதன்பின் ஜெல் போன்ற சதைப்பகுதியை எடுத்து தண்ணீர் பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்த கற்றாழை ஜெல் இரண்டு டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன், தேன் அரை டீஸ்பூன் சேர்த்து பேஸ்ட் பதத்துக்கு கலந்து கொள்ளவும். இதை முகத்தில் அப்ளை செய்து பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ முகம் பிரகாசமாக இருக்கும்.

சருமத்துக்கும் கூந்தலுக்கும் கற்றாழை செய்யும் மாயம்...

ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், சிறிதளவு எலுமிச்சைப்பழச்சாறு கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பரு மற்றும் வடுக்கள் குறையும்.

சருமத்துக்கும் கூந்தலுக்கும் கற்றாழை செய்யும் மாயம்...

கற்றாழை ஜெல் மூன்று டீஸ்பூன், வெந்தயப் பொடி இரண்டு டீஸ்பூன் எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து கூந்தலின் வேர்க்கால்களில் தடவி 20 நிமிடங்கள் கழித்து, குளித்து வந்தால் தலைமுடி நன்றாக வளரும். வறட்சி நீங்கும்.

சருமத்துக்கும் கூந்தலுக்கும் கற்றாழை செய்யும் மாயம்...

ஷேவ் செய்ய ரேஸரைப் பயன் படுத்துவதற்கு முன்பு கற்றாழை ஜெல்லை சருமத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். இது ரேஸரால் ஏற்படும் புடைப்புகளையும், எரிச்சல் உணர்வையும் தவிர்க்கும். ஷேவ் செய்த பிறகும் கற்றாழை ஜெல் அப்ளை செய்து கொள்ளலாம்.