Published:Updated:

ரசாயனங்களால் தயாரிக்கப்படும் நெயில்பாலிஷ்கள்... நகங்களைப் பாதுகாக்க, பராமரிக்க ஆலோசனைகள்!

இந்த ரசாயன நெயில் பாலிஷ்களைப் பயன்படுத்தும்போது, அதன் பாதிப்புகளை ஈடுகட்ட, நகங்களை முறையாகப் பராமரிக்காவிட்டால், நிச்சயம் நகங்களின் வேர் வலுவிழந்துவிடும்; நகத்தின் நிறம் மஞ்சளாக மாறக்கூடும்.

`நங்கை கொண்ட விரல்கள் அதிசயமே! நகம் என்ற கிரீடமும் அதிசயமே!'

என்று நகத்தைப் பற்றி நாம் எதிர்பார்க்காத வர்ணனையைத் தீட்டியிருப்பார், வைரமுத்து. கைகளால் காற்றில் வரைந்து பேசும் ஹாசினிகளாகட்டும், தரையில் கோலமிட்டுக்கொண்டே பேசும் நதியாக்களாகட்டும், ஒவ்வொருவருமே அழகுதான். அந்த அசைவுகளுக்கு வண்ணம் தீட்டும் விதமாக வந்ததுதான், 'நெயில் பாலிஷ்'.

Aishwarya Rai
Aishwarya Rai
Instagram

"வழக்கமாக நெயில் பாலிஷ் பயன்படுத்துபவர்கள், நகங்களைச் சரியான முறையில் பராமரிக்காமல் விட்டால், பல பிரச்னைகள் ஏற்படும்" என்று சொல்லும் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா, நகங்களைப் பாதுகாக்கும் மற்றும் பராமரிக்கும் வழிமுறைகளைப் பகிர்ந்தார்.

"முன்பெல்லாம், தண்ணீரை அடிப்படையாகக்கொண்டு நெயில் பாலிஷ் தயார் செய்யப்பட்டது. அதனால், நகங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், தற்போது மார்க்கெட்டில் கிடைக்கும் பெரும்பாலான நெயில் பாலிஷ்கள், ஆயில் அல்லது லேக்கர் (Lacquer) போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தயார் செய்யப்படுகின்றன. நீண்ட நாள்கள் அழியாமல் இருப்பதற்காக இவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கிறார்கள். மேலும், பெரும்பாலான நெயில் பாலிஷ்கள் டார்க் ஷேடுகளில்தான் கிடைக்கின்றன. அவை நிச்சயம் நகத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

Beautician Vasunthara
Beautician Vasunthara

இந்த ரசாயன நெயில் பாலிஷ்களைப் பயன்படுத்தும்போது, அதன் பாதிப்புகளை ஈடுகட்ட நகங்களுக்கு முறையான பராமரிப்பு கொடுக்கப்படவில்லை என்றால், நிச்சயம் நகங்களின் வேர் வலுவிழந்துவிடும்; நகத்தின் நிறம் மஞ்சளாக மாறும் வாய்ப்பிருக்கிறது. எனவே, தொடர்ந்து நெயில் பாலிஷ் உபயோகிப்பவர்கள், வாரத்திற்கு ஒருமுறையாவது நகங்களைச் சுத்தம்செய்து, ஒரு நாள் முழுவதும் எந்த பாலிஷும் இல்லாமல் காற்றோட்டமாக நகத்தை விட்டிருப்பது நல்லது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்ளை டிப்ஸ்:

Nail polish applying tips
Nail polish applying tips
Pixabay
Vikatan

எப்போதும் தரமான நெயில் பாலிஷையே உபயோகிக்கவும். நெயில் பாலிஷை நேரடியாக நகத்தில் அப்ளை செய்வதற்கு முன், 'பேஸ் கோட்', அதாவது நிறமற்ற ட்ரான்ஸ்பரென்ட் பாலிஷை அப்ளை செய்யவும். நெயில் பாலிஷ் போட்டபிறகும் இந்த நெயில் பேஸை அப்ளை செய்யலாம்.

மசாஜ்:

Finger Massage
Finger Massage
Pixabay

வாரத்திற்கு ஒரு முறை நெயில் பாலிஷை முற்றிலும் அகற்றிவிட்டு, சோப் கலந்த குளிர்ந்த நீரில் விரல்களை ஐந்து நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு, சாதாரண தண்ணீரில் நன்கு கழுவி, விரல்கள் நன்கு உலர்ந்தவுடன், ஒரு சொட்டு ஆலிவ் எண்ணெய் அல்லது க்யூடிகிள் க்ரீமை விரல்களில் அப்ளை செய்யவும். வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். இப்படிச் செய்வதால், நகங்கள் நன்கு சுவாசிப்பதுடன் க்யூட்டிகிள்களும் மென்மையாக மாறும். நகங்கள் உடையாமல் வலுவாக இருப்பதற்கும் இந்த மசாஜ் உதவும்.

பேக்:

Finger Pack
Finger Pack
Pixabay

அடிக்கடி நெயில் பாலிஷ் பயன்படுத்துபவர்கள், மசாஜ் மட்டுமல்லாமல், பேக் போட்டு பராமரிப்பதும் நல்லது. இதற்கு, இரண்டு டீஸ்பூன் முல்தானி மட்டி, 1/4 டீஸ்பூன் கடல் பாசியுடன் ரோஸ் வாட்டர் கலந்து, நகங்களின் மேல் அப்ளை செய்யவும். அரை மணி நேரம் கழித்து சுத்தமாகக் கழுவவும். இப்படிச் செய்வதால் நகங்கள் மட்டுமல்ல, அதைச் சுற்றியுள்ள சருமப் பகுதியும் ஆரோக்கியமாக இருக்கும்.

உணவுகள்:

Protein Rich food
Protein Rich food
Pixabay
காய்ச்சாத பால், சர்க்கரை ஸ்க்ரப்... மாசிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பது எப்படி? நிபுணரின் ஆலோசனை

பால், பனீர், பருப்பு போன்ற புரதச் சத்துகள் நிறைந்த உணவு வகைகள் நகத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. நகங்களுக்கு பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமினான பையோடின் மிகவும் அத்தியாவசியமானது. இது, சோயா மற்றும் முட்டையில் இயற்கையாகக் கிடைக்கும். அல்லது தனியே சப்ளிமென்ட்டாகவும் எடுத்துக்கொள்ளலாம். மேலும், நட்ஸ் மற்றும் கீரை வகைகளையும் உணவில் அதிகம் எடுத்துக்கொண்டால், ஆரோக்கியமான நகங்கள் 100% உறுதி."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு