Published:Updated:

வாட்டர்ப்ரூஃப் மேக்கப், அடர் நிற உடைகள், வெளிர் நிற ஹேண்ட்பேக், கிரிப்பர் செருப்புகள்... மழைக்கால டிப்ஸ்!

நிச்சயம் லெதர் மற்றும் மென்மையான 'லைட் வெயிட்' காலணிகளையும் தவிர்க்க வேண்டும். செருப்புக்கு அடியில் 'கிரிப்பர் (Gripper)' இருக்கும் பிளாட்ஸ் முதல் ஹீல்ஸ் வரை... மழைக்கால பியூட்டி டிப்ஸ்!

நீண்ட நாள்களுக்குப் பிறகு வெப்பத்துக்கு ஓய்வு கொடுத்திருக்கிறது மழை. மண்வாசனை, பசுமையான மரங்கள், குளுமையான காற்று என்ற ரசனை ஒரு பக்கமென்றால், அதிகப்படியான ஈரப்பதத்தால் ஏற்படும் சருமப் பிரச்னைகள் மறுபக்கம். மழைக்காலங்களில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் ஸ்மார்ட்டான தோற்றம் பெறவும் எளிமையான கைடன்ஸ் கொடுக்கிறார் அழகுக்கலை நிபுணர் சங்கீதா.

அடர் நிறம், பளபளப்பு, வறண்ட உதடு, நீடித்த நேரம்... யார் யாருக்கு என்ன வகையான லிப்ஸ்டிக்?!
2
Say 'No' to Dryer ( pixabay )

தலை:

வறண்ட கேசமோ, எண்ணெய்ப்பசை அதிகமுள்ள கேசமோ... மழைக்காலத்தில் எல்லோருக்குமே முடிஉதிர்வு அதிகமாக இருக்கும். தலை நனைவதற்கான வாய்ப்புகளும் அதிகம். சிலர் தலையைக் காயவைப்பதோடு நிறுத்திவிடுவார்கள். மழைநீர் சுத்தமான நீர்தான். ஆனால், நம் தலைமுடிக்கு நல்லதல்ல. நம் கேசம், நாம் வழக்கமாக உபயோகிக்கும் தண்ணீருக்குத்தான் பழகிப்போயிருக்கும். மழைநீர் தலையில் பட நேர்ந்தால், முடி உதிர்வுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, ஒருவேளை தலை நனைய நேர்ந்தால், வீடு திரும்பியதும் ஒருமுறை தலைக்குக் குளித்துவிடுவது நல்லது.

Beautician Sangeetha

வாரத்தில் மூன்று நாள்கள் நிச்சயமாகக் குளிர்ந்த நீரில் தலைக்குக் குளிக்க வேண்டும். அதீத குளிர் எனில், சிறிதளவு வெந்நீர் கலந்துகொள்ளலாம். கண்டிஷனர் உபயோகிப்பவர்கள் தாராளமாக அதைப் பயன்படுத்தலாம். சீகைக்காய் உபயோகிப்பவர்கள், சிறிதளவு எண்ணெய் தேய்த்துக் குளித்தால் நிச்சயம் கேசம் வறண்டு போகாது.

Messy Hair

மழைக்காலத்தில் கேசத்தைக் காயவைப்பது கடினம்தான். ஆனால், அதற்காக டிரையர் (Dryer) உபயோகிப்பது நல்லதல்ல. அது மேலும் தலைமுடியை வறட்சியாக்கும்.

இறுக்கமான கொண்டை, போனி டெயில் போன்ற ஹேர்ஸ்டைலை தவிர்ப்பது சிறந்தது. ஹேர் ஸ்ப்ரே போன்றவற்றையும் தவிர்க்கலாம்.

3
Face and Body ( Pixabay )

முகம் மற்றும் உடலுக்கு

மழைக்காலத்தில் வாட்டர் ப்ரூஃப் மேக்கப் அயிட்டங்களைப் பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக, காஜல் வகைகள் தண்ணீர் பட்டால் அழிந்து, கண்களைச் சுற்றி எளிதில் நீக்க முடியாத கறுமையாகப் படர்ந்துவிடும் என்பதால், வாட்டர் ப்ரூஃப்பை லைனர், மஸ்காரா போன்றவற்றைப் பயன்படுத்தலாம். மேலும், வாட்டர் ப்ரூஃப் ஃபவுண்டேஷனை முகத்தில் அப்ளை செய்தபின் பவுடர் உபயோகிக்கலாம்.

க்ரீமி மற்றும் க்ளாசி லிப்ஸ்டிக்கை உபயோகிக்கலாம். மேட் லிப்ஸ்டிக் பயன்படுத்துபவர்கள் இரண்டு முதல் மூன்று கோட்டிங் லிப் பாம் அப்ளை செய்தபின் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.

பார்ட்டி போன்ற நிகழ்வுகளுக்கு, பளபளக்கும் பிளிங் (Bling) மேக்கப் பக்கா சாய்ஸ். கண்டிப்பாக மேட் ஃபினிஷ் மேக்கப்பைத் தவிர்க்கவும்.

Moisturiser ( pixabay )

மழைக்காலங்களில் சருமம் அதிகம் வறண்டுபோகும் என்பதால், கை, கால்களில் மாய்ஸ்ச்சரைசர் அல்லது பாடி பட்டர் (Body Butter) உபயோகிப்பது மிகவும் நல்லது. சாதாரண மாய்ஸ்ச்சரைசரைவிட பாடி பட்டர் நீண்ட நேரம் ஈரப்பதத்தை உடலில் தக்கவைத்துக்கொள்ள உதவும். மிகவும் ஆய்லி ஸ்கின் உடையவர்கள், வாட்டர் பேஸ்டு மாய்ஸ்ச்சரைசரை (Water Based Moisturiser) உபயோகிக்கலாம். வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை ஸ்டீம் அல்லது ஆவி பிடிப்பது நல்லது. நார்மல், டிரை ஸ்கின் உள்ளவர்கள் ஏதாவதொரு எசென்ஷியல் ஆயில் இரண்டு சொட்டுகள் எடுத்து, முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து, பின்னர் கழுவலாம். அவற்றில் குங்குமாதி தைலம் சிறந்தது.

முகத்துக்கு வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டி-ஆக்ஸிடென்ட்ஸ் நிறைந்துள்ள பொருள்களை உபயோகிக்கலாம். அந்த வகையில் மாதுளை மற்றும் வாழைப்பழம் ஃபேஸ் பேக்குகள் நன்மை தரும்.

Pomagranate ( pixabay )

மாதுளை பேக்:

தேவையான அளவு மாதுளை ஜூஸ் மற்றும் ஓட் மீல்ஸை (Oat Meals) வெதுவெதுப்பான நீரில் கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 - 20 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம். இது நிச்சயம் மழைக்காலத்தில் சருமத்தை ஹெல்தியாக வைத்துக்கொள்ள உதவும்.

வாழைப்பழம் ஃபேஸ் பேக்:

வாழைப்பழத்தை நன்கு மசித்து, முகத்தில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும். வாழைப்பழத்திலுள்ள ஈரப்பதம் போகும்வரை மசாஜ் செய்யலாம். தினமும் இரவு தூங்குவதற்கு முன் இப்படிச் செய்துவர, இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு முகம் புத்துணர்வு பெரும்.

இதுபோன்ற பழங்களை ஃபேஸ் பேக்காகப் பயன்படுத்துவதைவிட, பழமாகச் சாப்பிடுவது மேலும் சிறந்தது. இது, 95% சிறந்த ரிசல்ட் கொடுக்கும்.

4
Handbags ( pixabay )

ஹேண்ட்பேக்:

ஹேண்ட்பேக்ஸ், க்ளட்ச் இப்படி எந்த வகைப் பையாக இருந்தாலும், ஜூட், லெதர் போன்ற மெட்டீரியல்களை மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டும். அதேபோல, அதிகளவு வண்ணங்கள் நிரம்பியிருக்கும் பைகளையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், ஈரப்பதம் அதிகம் இருக்கும் காரணத்தால், பையிலிருக்கும் சாயம் கசிந்து ஆடைகளில் ஒட்டிக்கொள்வதற்கான சாத்தியம் அதிகம். எனவே, மழை தினங்களில் மார்க்கெட்டில் பரவலாகக் கிடைக்கும் வெளிர் வண்ண வாட்டர்ப்ரூஃப் பேக்குகளை உபயோகிக்கலாம்.

5
Costumes ( pixabay )

ஆடைகள்:

மழைக்காலம் என்றாலே மந்தமான நிலைதான். இந்நாள்களில் வைப்ரன்ட் அல்லது பிரைட் நிறங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், புத்துணர்வான தோற்றதைப் பெறலாம். மழையில் நனைய நேர்ந்தால், லைட் கலர் அசௌகர்யமான தோற்றம் தரும் என்பதால் தவிர்த்து அடர் நிறங்களைத் தேர்ந்தெடுக்கலாம். அதேபோல சேறு, சகதியிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காகவும், லைட் அல்லது வெளிர் நிறங்களைத் தவிர்ப்பது பெட்டர். காற்று சுழற்சி அதிகமுள்ள காட்டன் மெட்டீரியலை நிச்சயம் உபயோகிக்கக் கூடாது. காற்று சுழற்சி அதிகமில்லாத, அதே சமயம் உடுத்துவதற்கு எளிமையாக இருக்கும் சிந்தடிக், சாட்டின், ஜீன்ஸ் போன்ற மெட்டூரியல்களைத் தேர்வு செய்யலாம்.

6
அக்சஸரீஸ் ( freepik )

அக்சஸரீஸ்:

நம் தேவையைப் பொருத்து மழைக்காலங்களில் சிம்பிள் மற்றும் ஹெவி ஜுவல்லரி இரண்டுமே உபயோகிக்கலாம். மழையில் நனைய நேர்ந்தால், குவிலிங் (Quilling) மற்றும் த்ரெடு (Thread) வேலைப்பாடுகள் நிறைந்த அக்சஸரீஸ் வீணாகும் வாய்ப்பு அதிகம். இதைத் தவிர்ப்பது நல்லது. முடிந்தளவு லைட் மற்றும் டார்க் நிறங்களைத் தவிர்த்து பளிச் நிறங்களைத் தேர்ந்தெடுங்கள்.

7
Footwear ( pixabay )

காலணிகள்:

Vikatan

மழை நேரங்களில் ரப்பர் செருப்புகளை நிச்சயமாகத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், நடக்கும்போது அது கால்களின் பின்னால் சேற்றை வாரியடிக்கும். நிச்சயம் லெதர் மற்றும் மென்மையான 'லைட் வெயிட்' காலணிகளையும் தவிர்க்கவேண்டும். செருப்புக்கு அடியில் 'கிரிப்பர் (Gripper)' இருக்கும் ஃபிளாட்ஸ் முதல் ஹீல்ஸ் வரை எந்தவிதமான செருப்பு வகைகளையும் பயன்படுத்தலாம். பக்குள்ஸ் வைத்த செருப்புகள் மழைக்காலங்களில் கைகொடுக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு