Published:Updated:

How to series: பொலிவான முகத்துக்கு இயற்கையான வழிகள் என்னென்ன? | How to get glowing skin naturally?

glowing skin
News
glowing skin

எப்போதும் சருமம் ஃபிரெஷ்ஷாக இருந்தால் எப்படி இருக்கும்?! அதற்கு நம் தினசரி வாழ்வியல் முறைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தால் போதும் என்று சொல்லும் செலிப்ரிட்டி டயட்டீஷியன் ஷைனி, சருமப் பொலிவுக்கான லைஃப்ஸ்டைல் ஆலோசனைகள் பற்றி இங்கு பகிர்கிறார்.

முகம் பொலிவுடன் இருக்க வேண்டும் என்பது பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரும்பும் விஷயம். இதற்காக க்ரீம்கள், மேக்கப் என்று சில வழிமுறைகளைச் செய்துகொண்டாலும், அதற்கான பலன் சில நாள்கள் மட்டுமே இருக்கும். ஆனால், எப்போதும் சருமம் ஃபிரெஷ்ஷாக இருந்தால் எப்படி இருக்கும்?! அதற்கு நம் தினசரி வாழ்வியல் முறைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தால் போதும் என்று சொல்லும் செலிப்ரிட்டி டயட்டீஷியன் ஷைனி, சருமப் பொலிவுக்கான லைஃப்ஸ்டைல் ஆலோசனைகள் பற்றி இங்கு பகிர்கிறார்.

ஷைனி
ஷைனி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உறக்கம்

``ஒரு நாளைக்கு கண்டிப்பாக எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். உறக்கம் மிகவும் அவசியமானது. நம் சருமத்தில் இருந்து இறந்த செல்கள் நீங்க நல்ல உறக்கம் அவசியம். முகமும் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். இரவு 10 மணிக்குத் தூங்கச் சென்று காலை 5 அல்லது 6 மணிக்கு எழுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.

தண்ணீர்

தினமும் என்ன விதமான வானிலை இருந்தாலும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். இதனால் உடலில் உள்ள கழிவுகள் நன்றாக வெளியேறும். சருமமும் பளபளவென அழகாகக் காட்சியளிக்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கொழுப்பு

கொழுப்பு என்றாலே நம்மில் பலருக்கு பயம் ஏற்படும், உடலுக்கு ரொம்பவே கெடுதல் தரக்கூடியது என்று அதை ஒதுக்கி வைத்துவிடுவோம். ஆனால், நல்ல கொழுப்பு உடலுக்கு ரொம்பவே முக்கியமான ஒன்று. அந்த நல்ல கொழுப்பு பருப்பு வகைகளான பாதாம், முந்திரி, அக்ரூட் போன்றவற்றில் உள்ளது. இவற்றை தினமும் மூன்று அல்லது நான்கு என்ற எண்ணிக்கையில் எடுத்துக்கொள்ளலாம். கூடவே நெய் அல்லது வெண்ணெய் எடுத்துக்கொள்ளலாம். பஜ்ஜி, போண்டா, சமோசா போன்ற கெட்ட கொழுப்பை உணவு வகைகளை ஒதுக்கிவிட வேண்டும் என்பதும் அவசியம்.

பழங்கள் | Fruits
பழங்கள் | Fruits
Image by silviarita from Pixabay

காய்கறிகள், பழங்கள்

கேரட், பீட்ரூட், குடைமிளகாய் என வண்ண வண்ண நிறங்களில் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் சருமத்துக்குத் தேவையான சத்துகள் முழுமையாகக் கிடைக்கும்.

ABC ஜூஸ்

ஆப்பிள், பீட்ரூட், கேரட் என மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து, மிக்ஸியில் ஜூஸாக அரைத்து, தேவைப்பட்டால் அதில் வெள்ளம் அல்லது தேன் கலந்து குடிக்கலாம். இதைத் தினமும் இரண்டு வாரம் தொடர்ந்து பருகி வர, சருமம் ஜொலிக்க ஆரம்பிப்பதை கண்கூடாகப் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முளைகட்டிய பயறு வகைகள்

தினமும் இரண்டு டீஸ்பூன் முளைகட்டிய பயறு சாப்பிட்டு வர, உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் கிடைக்கும். இதனால் சருமம் சூப்பர் பொலிவுடன் காணப்படும்.

மீன்

அசைவப் பிரியர்கள் எனில், வாரத்தில் மூன்று நாள்கள் மீன் எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் சரும ஜொலிப்பில் பெரிய வித்தியாசத்தை உணர முடியும். கடலோரப் பகுதிகளில் இருக்கும் மக்களின் சரும பொலிவுக்கு இந்த மீன் உணவு முக்கியக் காரணம்.

தேங்காய்
தேங்காயை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் நல்ல கொழுப்பே உள்ளதால் பயமில்லாமல் தினமும் எடுத்துக் கொள்ளலாம். சருமப் பொலிவுக்குக் கைகொடுக்கும்.

இப்படி, நமது அன்றாட உணவின் மூலமாக உடலுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தினால் கண்டிப்பாக சருமத்தில் அது பிரதிபலிக்கும் . உடற்பயிற்சி செய்வதன் மூலமாகவும் சருமப் பொலிவு பெறலாம்" என்றார்.