Published:Updated:

வீட்டிலேயே தயாரிக்கலாம் இயற்கையான ஹேர் டை! #StayHome

ஹேர் டை
ஹேர் டை ( freepik )

வீட்டிலேயே தயாரித்து உபயோகிக்கும் வகையில் இயற்கையான ஹேர் டை தயாரிக்கும் முறை.

கருகரு கூந்தலுடன் வலம் வந்துகொண்டிருந்த பலர் இப்போது சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வீட்டில் இருக்கின்றனர். காரணம் கொரோனா லாக் டௌன். பியூட்டி சலூன்கள் இல்லாத இந்த நாள்களில், கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்தாமல் இருப்பது ஒரு வகையில் நல்லதுதான்.

Radhika (Beauty Expert)
Radhika (Beauty Expert)

என்றாலும், இளமை துள்ளல் லுக் மிஸ் ஆகிறதே என வருத்தப்படுபவர்களுக்காக, வீட்டிலேயே தயாரித்து உபயோகிக்கும் வகையில் இயற்கையான ஹேர் டை தயாரிக்கும் முறையை விளக்குகிறார், அழகுக்கலை நிபுணர் ராதிகா.

முதல் நாள்

அரை பீட்ரூட்டைத் துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைக்கவும். முக்கால்வாசி மசிந்ததும், அதில் 4 டேபிள்ஸ்பூன் ஹென்னா பவுடரைச் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.

அரைபடுவதற்கு பீட்ரூட்டிலில் இருக்கும் நீர்ச்சத்தே போதுமானது. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த கலவையை இரும்பு வாணலியில் போட்டு, காற்று புகாதவாறு மூடியிட்டு வைக்கவும். ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே ஊறவிடவேண்டும்.

இரண்டாம் நாள்

மறுநாள் காலை, இரும்பு வாணலியில் உள்ள ஹென்னா பவுடர், பீட்ரூட் கலவை நல்ல டார்க் நிற பர்கண்டி கலராக மாறியிருக்கும். இக்கலவையைத் தேவையான அளவு எடுத்து ஒரு சிறு கிண்ணத்தில் போட்டுக்கொள்ளவும்.

வாணலியில் மீதமுள்ள ஹென்னா - பீட்ரூட் கலவையை மறுபடி மூடிவைத்துவிடவும்.

Natural Hair Dye
Natural Hair Dye
freepik

பிறகு கூந்தலைச் சிக்கெடுத்து, சிறுசிறு பாகமாகப் பிரித்து, கிண்ணத்தில் உள்ள மருதாணிக் கலவையைச் சிறிது சிறிதாக எடுத்து கூந்தலின் வேர்ப்பகுதியிலிருந்து நுனிவரை தடவவும்.

30 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம்வரை தலையில் ஊறவைத்த பின்னர், ஷாம்பூ போடாமல் வெறும் தண்ணீரில் கூந்தலை அலசவும்.

மூன்றாம் நாள்

ஹென்னா - பீட்ரூட் கலவையால் நிறமேறியிருக்கும் கூந்தலை அப்படியேவிடாமல், தொடர்ந்து மூன்று நாள்களுக்கு இக்கலவையைக் கூந்தலில் தடவி அலச வேண்டும்.

இரும்பு வாணலியில் உள்ள ஹென்னா - பீட்ரூட் கலவை மூன்றாம் நாளில் நல்ல டார்க் பிரவுன் நிறமாக மாறியிருக்கும். இக்கலவையைத் தேவையான அளவு எடுத்து ஒரு சிறு கிண்ணத்தில் போட்டுக்கொள்ளவும்.

வாணலியில் மீதமுள்ள மருதாணிக் கலவையை மறுபடி மூடிவைக்கவும்.

பிறகு கூந்தலை சிக்கெடுத்து, சிறுசிறு பாகமாகப் பிரித்து, கிண்ணத்தில் உள்ள மருதாணிக் கலவையைச் சிறிது சிறிதாக எடுத்து கூந்தலின் வேர்ப்பகுதியிலிருந்து நுனிவரை தடவவும். 30 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம்வரை தலையில் ஊறவைத்த பின்னர், ஷாம்பூ போடாமல் வெறும் தண்ணீரில் கூந்தலை அலசவும்

நான்காம் நாள்

தேவையான அளவு தேங்காய் எண்ணெயை ஒரு சிறு கிண்ணத்தில் ஊற்றி மிதமாக சூடுபடுத்திக்கொள்ளவும். கூந்தலை வாரி சிக்கெடுத்துக்கொள்ளவும்.

சிறிதளவு பஞ்சை தேங்காய் எண்ணெயில் நனைத்து, தலையில் வகிடெடுத்து, பஞ்சின் மூலம் வகிட்டில் எண்ணெயைத் தேய்க்கவும்.

Oiling Hair
Oiling Hair
freepik

அதன் பிறகு அவ்வகிட்டின் அருகிலேயே வேறொரு வகிடெடுத்து பஞ்சில் எண்ணெயைத் தொட்டுத் தேய்க்கவும். இதுபோல் தலைமுழுவதும் செய்யவும். மீதமிருக்கும் எண்ணெயைக் கூந்தல் முழுவதும் தடவிவிடவும். 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

மூடிவைத்த வாணலியில் உள்ள ஹென்னா - பீட்ரூட் கலவை இன்று கறுப்பு நிறமாக மாறியிருக்கும். வாணலியில் மீதமுள்ள கலவை முழுவதையும் எடுத்து சிறு கிண்ணத்தில் போட்டுக்கொள்ளவும்.

பிறகு கூந்தலை சிறுசிறு பாகங்களாகப் பிரித்து, கிண்ணத்தில் உள்ள மருதாணிக் கலவையைச் சிறிது சிறிதாக எடுத்து கூந்தலின் வேர்ப்பகுதியிலிருந்து நுனிவரை தடவவும்.

தொடர்ந்து மருதாணிக்கலவையைக் கூந்தலுக்குத் தடவி வருவதால் கூந்தல் வறண்டுபோகாமல் இருப்பதற்காக, மூன்றாவது முறை கலவையைப் பயன்படுத்தும் முன்னர், கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்த பின் கலவையைத் தலையில் தடவவேண்டும். எண்ணெய் தேய்த்துள்ளதால் ஷாம்பூ போட்டு கூந்தலை அலசவேண்டும்.

வசீகர சருமம், பளபள கூந்தல், பிரகாச கண்கள்... WFH புத்துணர்வு ஆலோசனைகள்!

இந்த இயற்கை ஹேர்டையை முதன்முறைப் பயன்படுத்த ஆரம்பிப்பவர்கள், தினசரி பயன்படுத்தவும். 15 நாள்கள் கழித்து இரண்டு நாள்களுக்கு ஒரு முறை பயன்படுத்தினாலே போதும்.

எந்த கெமிக்கல் பொருள்களும் இல்லாமல், இயற்கைப் பொருள்களை வைத்தே கூந்தலுக்கு நிறமேற்ற முடியும். இது நிறத்தைக் கூட்டுவதுடன், கூந்தலை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.

Healthy Hair
Healthy Hair
freepik

குறிப்பு:

மூன்று நாள்கள் கலவையை முழுவதுமாகப் பயன்படுத்திய பின்னர், வாணலியைக் கழுவிவிடாதீர்கள்.

மறுபடியும் ஹென்னா பவுடர் மற்றும் பீட்ரூட்டை அரைத்து, அக்கலவையை வாணலியில் போட்டு மறுபடி மூடிவைக்கவும் (வாணலியை 15 நாள்களுக்கு ஒரு முறை கழுவினால் போதும். ஏனெனில் கலவை ஊற ஊறத்தான் நிறம் கறுப்பாக மாறிவரும்).

குழந்தைகளின் தலையில் பேன், ஈறு தொல்லையா? - நிரந்தரத் தீர்வு தரும் 4 வழிகள் #StayHome
அடுத்த கட்டுரைக்கு