Published:Updated:

How to: சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பது, பயன்படுத்துவது எப்படி? | How to select and use Sunscreen?

How To Choose The Best Sunscreen?
News
How To Choose The Best Sunscreen?

நம் சருமத்தின் தன்மையின் அடிப்படையில் சன்ஸ்கிரீனை தேர்வு செய்திட வேண்டும். வறண்ட சருமம் உள்ளவர்கள் எண்ணெய் கலந்த சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம். எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் ஜெல், அல்லது மேட் ஃபினிஷில் கிடைக்கக்கூடிய சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும்.

Published:Updated:

How to: சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பது, பயன்படுத்துவது எப்படி? | How to select and use Sunscreen?

நம் சருமத்தின் தன்மையின் அடிப்படையில் சன்ஸ்கிரீனை தேர்வு செய்திட வேண்டும். வறண்ட சருமம் உள்ளவர்கள் எண்ணெய் கலந்த சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம். எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் ஜெல், அல்லது மேட் ஃபினிஷில் கிடைக்கக்கூடிய சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும்.

How To Choose The Best Sunscreen?
News
How To Choose The Best Sunscreen?

கோடைக்காலத்தில் சருமப் பராமரிப்பு சவாலான விஷயம்தான். அதிலும் குறிப்பாக பணிக்குச் சென்று வருபவர்கள் சருமப் பராமரிப்பில் தனி கவனம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும், கோடைக்காலத்தில் மட்டும் இல்லாமல் எல்லா காலங்களிலுமே சூரியனிடமிருந்து வரும் அல்ட்ரா வயலெட் கதிர்கள் நம் சருமத்தில் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அவற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது சிறந்தது. நம் சருமத்தை பாதுகாக்கக்கூடிய சன்ஸ்க்ரீனை தேர்ந்தெடுப்பதில் இருந்து பயன்படுத்துவது வரை வழிகாட்டல்கள் தருகிறார், பிரபல பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா.

வசுந்தரா
வசுந்தரா

* கோடைக்காலத்தில் சூரியனிடமிருந்து வெளியேறும் அல்ட்ரா வயலட் கதிர்கள், மற்ற பருவ காலங்களைவிட அதிகமாக நம் சருமத்தை பாதிக்கக் கூடும். சூரியன் வெளியிடும் அல்ட்ரா வயலட் (Ultra Violet) கதிர்களில் ஏ, பி, சி (UVA, UVB, UVC) என மூன்று விதமான கதிர்கள் உள்ளன. இதில் அல்ட்ரா வயலட் ஏ மற்றும் பி சருமத்தை அதிகமாகவே பாதிக்கும். ஏ கதிர்கள் தாக்கும்போது மிக அதிகமான சருமப் பிரச்னைகள் ஏற்படும்; வயதானது போன்ற சரும சுருக்கங்களை ஏற்படுத்தும். பி-யும் மிக அதிகமான சருமப் பிரச்னைகளை ஏற்படுத்தும். காலை 10 மணியில் இருந்து மாலை 4 மணி வரை இருக்கும் வெயிலில் காணப்படும் இந்தக் கதிர்கள் நம் உடலினுள் ஊடுருவும் என்பதால் அந்த நேரத்தில் சன்ஸ்க்ரீனை சருமத்தில் அப்ளை செய்துகொள்வது நல்ல பலனை தரும்.

* சன்ஸ்கிரீன் பல வகைகளில் நமக்குக் கிடைக்கிறது. இதனை தேர்வு செய்வதில் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். குறிப்பாக, நம் சருமத்தின் தன்மையின் அடிப்படையில் சன்ஸ்கிரீனை தேர்வு செய்திட வேண்டும்.

Skin Care
Skin Care

* சன்ஸ்கிரீனை தேர்வு செய்யும் முன், குறிப்பிட்ட அந்த அந்த சன்ஸ்கிரீன் எவ்வளவு நேரம் நம் சருமத்திற்குப் பாதுகாப்பைத் தரும் என்பதை கவனிக்க வேண்டும். சன்ஸ்கிரீனை வாங்கும்போது, அதில் SPF 10 (Sun Protection Factor SPF) என்று இருந்தால், 10 * 5 நிமிடங்கள் எனக் கணக்கிட வேண்டும். அதாவது, 10*5=50. அந்த சன்ஸ்கிரீன் 50 நிமிடங்களுக்கு அவர்களின் சருமத்தை பாதுகாக்கும் என்று அர்த்தம். இதே போல் அடுத்தடுத்த SPF எண்களைக் கவனித்து, பாதுகாப்புக் கொடுக்ககூடிய நிமிடங்களை கவனித்து, தேவைக்கேற்ப வாங்க வேண்டும்.

அடுத்ததாக, சன்ஸ்கிரீனில் SPF PA +++ என்று குறிப்பிட்டிருந்தால், இது அல்ட்ரா வயலட் கதிர் 'ஏ'-ல் இருந்து பாதுகாப்பைக் கொடுக்கும்.

* சன் ஸ்கிரீனை தேர்ந்தெடுக்கும் முன் நம் சருமத்தின் தன்மையை அறிய வேண்டும். வறண்ட சருமம் உள்ளவர்கள் எண்ணெய் கலந்த SPF பயன்படுத்தலாம். எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் ஜெல், அல்லது மேட் ஃபினிஷில் கிடைக்கக்கூடிய சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும். கிரீம், லோஷன், ஃபவுண்டேஷன் கலந்தும்கூட சன்ஸ்கிரீன் கிடைக்கிறது. தேவை, விருப்பத்தை பொறுத்து வாங்கிக்கொள்ளலாம்.

* சன்ஸ்கிரீனை அப்ளை செய்தவுடன் உடனே வெயிலில் செல்லக் கூடாது. குறைந்தபட்சம் வெயிலில் செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக அதை அப்ளை செய்திட வேண்டும்.

* முகம், கை, கால் என சருமத்தில் வெயிலால் அதிகம் பாதிப்படைய வாய்ப்புள்ள பகுதிகளில் சன்ஸ்கிரீனை அப்ளை செய்திட வேண்டும். நன்றாக முகம் கழுவிய பின், சருமத்தில் முழுவதும், குறிப்பாக நெற்றி, காது, மூக்கு, கழுத்து, கண்களின் கீழ்ப்பகுதி போன்ற பகுதிகளில், மிகவும் மென்மையாக, வட்ட வடிவில் மசாஜ் போன்று செய்துகொண்டே அப்ளை செய்திட வேண்டும். இதற்கு மேல் பவுடர், ஃபவுண்டேஷன்கூட அப்ளை செய்து கொள்ளலாம். உடனே அப்ளை செய்யாமல் 10 நிமிடங்களுக்குப் பின் அப்ளை செய்யவும்.

* காலையில் அப்ளை செய்த சன்ஸ்கிரீனை மாலை வரை அப்படியே விடக்கூடாது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் சன்ஸ்கிரீன் அதிகபட்ச பாதுகாப்பு தரும் நேரத்துக்குப் பின்னரோ, மதிய நேரத்திலோ, முகத்தை அலசி மீண்டும் சன்ஸ்கிரீனை அப்ளை செய்வது நல்ல பலனை தரும்.

மொத்தத்தில், எந்த வகை சருமம், நிறம் என்றாலும் அனைவருமே சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது.