Published:Updated:

பியூட்டி: மாஸ்க் அணிவதால் மேக்கப் தவிர்க்க வேண்டுமா?

பியூட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
பியூட்டி

ப்ளஷ்ஷர் உபயோகிப்பதானால் மேட் ஃபினிஷ் சிறந்தது

மேக்கப்புடன் வாழ்ந்து பழகிய பெண்கள் இப்போது மாஸ்க்குடன் வாழப் பழகிக்கொண்டிருக்கிறார்கள். மாஸ்க் அணியும்போது கவனிக்க வேண்டிய மேக்கப் நுணுக்கங்களை விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் மேனகா ராம்குமார்.

 மேனகா ராம்குமார்
மேனகா ராம்குமார்

* மாஸ்க் மூடுமிடத்தில் க்ரீம் வடிவ ஃபவுண்டேஷனைத் தவிர்ப்பது நல்லது. மைல்டான மாயிஸ்ச்சரைசர் உபயோகித்த பிறகே மேக்கப்பை ஆரம்பிக்க வேண்டும். ஃபவுண்டேஷன் உபயோகிப்பதற்கு முன் கன்சீலர் உபயோகிக்கலாம். அது திக்காக இருப்பதால் மேக்கப் சீராகப் பரவும். அதன்மேல் லாங் லாஸ்ட்டிங் மற்றும் வாட்டர் ப்ரூஃப் ஃபவுண்டேஷன் உபயோகிக்க வேண்டும். அடுத்து மேக்கப் ஸ்பான்ஜை ஈரப்படுத்தி முகத்தில் ஒற்றியெடுத்து, அதன் மேல் ட்ரான்ஸ்லுசென்ட் பவுடர் உபயோகிக்கலாம்.

* ப்ளஷ்ஷர் உபயோகிப்பதானால் மேட் ஃபினிஷ் சிறந்தது.

* மாஸ்க்கில் லிப்ஸ்டிக் ஒட்டுகிற பிரச்னையை பல பெண்களும் சந்திக்கிறார்கள். இதைத் தவிர்க்க முதலில் உதடுகளில் லிப் பாம் தடவவும். அதன்மேல் ட்ரான்ஸ்லுசென்ட் பவுடர் தடவி, அதற்கும் மேல் லிப் பென்சிலால் அவுட்லைன் வரைந்து, மேட் ஃபினிஷ் லிப்ஸ்டிக் உபயோகிக்கவும்.

* வெளியே கிளம்புவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக மேக்கப் போட வேண்டும். அப்போதுதான் மேக்கப் செட் ஆகி, மாஸ்க் அணியும்போது ஒட்டாமலிருக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பியூட்டி: மாஸ்க் அணிவதால் மேக்கப் தவிர்க்க வேண்டுமா?

* இந்த நாள்களில் ஃபவுண்டேஷன், ட்ரான்ஸ்லுசென்ட் பவுடர், லிப்ஸ்டிக் போன்றவற்றைக் குறைத்து உபயோகித்து, ஐ மேக்கப்பை பிரைட்டாக செய்யலாம். மேக்கப் மாஸ்க்கில் ஒட்டுவது அசௌகர்யமானது மட்டுமல்ல, ஆரோக்கியமற்றதும்கூட.

* தினமும் மேக்கப் போடுவோர், மாஸ்க்கைத் துவைக்காமல் பயன்படுத்தாதீர்கள். முடிந்தவரை டிஸ்போசபிள் மாஸ்க் சிறந்தது. அழகைவிட முக்கியம் ஆரோக்கியம்.