Published:Updated:

நகத்தில் முகம் பார்க்கலாம்!

நகத்தில் முகம் பார்க்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
நகத்தில் முகம் பார்க்கலாம்! ( Pixabay )

கைகால்களின் சுத்தத்தையும் நகங்களையும் வைத்தே உங்கள் ஆரோக்கியத்தைக் கணித்துவிட முடியும்.

நகத்தில் முகம் பார்க்கலாம்!

கைகால்களின் சுத்தத்தையும் நகங்களையும் வைத்தே உங்கள் ஆரோக்கியத்தைக் கணித்துவிட முடியும்.

Published:Updated:
நகத்தில் முகம் பார்க்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
நகத்தில் முகம் பார்க்கலாம்! ( Pixabay )
  ரதி ராதிகா
ரதி ராதிகா

முகத்தை பளிச்சென்று வைத்துக்கொள்ள எவ்வளவோ மெனக்கெடுகிறோம்... அதே அக்கறையை கைகால்களைப் பராமரிப்பதில் காட்டுகிறோமா? கைகால்களின் சுத்தத்தையும் நகங்களையும் வைத்தே உங்கள் ஆரோக்கியத்தைக் கணித்துவிட முடியும். நக அழகு மற்றும் ஆரோக்கியத்துக்கான வழிமுறைகளை விளக்குகிறார் பியூட்டீஷியன் ரதி ராதிகா.

நகத்தில் முகம் பார்க்கலாம்!

ஸ்டெப் - 1: உங்கள் கைகளின் நகங் களைச் சுற்றி முதலில் பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவவும்.

நகத்தில் முகம் பார்க்கலாம்!

ஸ்டெப் - 2: க்யூட்டிகிள் புஷ்ஷர் (Cuticle Pusher) பயன்படுத்தி நகத்தின் மேல் லேசாகச் சுரண்டவும். இதனால் இறந்த செல்கள் உதிர்ந்து, புதிய செல்கள் உருவாகும். அதன் பின் நகத்தைச் சுற்றியிருக்கும் சதைப்பகுதியை புஷ்ஷர் பயன் படுத்தி அழுத்தி விடவும்.

நகத்தில் முகம் பார்க்கலாம்!

ஸ்டெப் - 3: க்யூட்டிகிள் கட்டர் பயன்படுத்தி நகத்தைச் சுற்றி வளர்ந்திருக்கும் தேவையில்லாத சதைகளை மெதுவாக வெட்டி எடுக்கவும்.

நகத்தில் முகம் பார்க்கலாம்!

ஸ்டெப் - 4: ஒரு கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் கோதுமை மாவுடன் இரண்டு டீஸ்பூன் பால் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.

நகத்தில் முகம் பார்க்கலாம்!

ஸ்டெப் - 5: இதை கைகளின் மேல்பகுதியில் படத்தில் காட்டி யிருப்பதுபோல் தடவி, 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இதனால் நிற மாற்றம், சரும வறட்சி போன்றவை நீங்கும்.

நகத்தில் முகம் பார்க்கலாம்!

ஸ்டெப் - 6: டூத் பிரஷ்ஷில் சிறிதளவு பேஸ்ட்டை எடுத்து நகங்களின் மீது தடவி, பிரஷ்ஷால் மெதுவாகத் தேய்க்கவும்.

நகத்தில் முகம் பார்க்கலாம்!

ஸ்டெப் - 7: ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீர் எடுத்துக்கொள்ளவும். அதில் ஒரு எலுமிச்சைப்பழத்தை வெட்டிப் போடவும். அந்த நீரில் விரல்களை 10 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு, நீரில் இருக்கும் எலுமிச்சைப்பழத்தை எடுத்து விரல்களில் தேய்க்கவும்.

நகத்தில் முகம் பார்க்கலாம்!

ஸ்டெப் - 8: ஆலிவ் எண்ணெய் மற்றும் விளக்கெண் ணெயை சமஅளவில் கலந்துகொள்ளவும்.

நகத்தில் முகம் பார்க்கலாம்!

ஸ்டெப் - 9: எண்ணெய்க் கலவையை லேசாக சூடு செய்து நகங்களின் மேல் பூசி மசாஜ் செய்யவும்.

நகத்தில் முகம் பார்க்கலாம்!

ஸ்டெப் - 10: நெயில் பேஸ் (Nail Base) அப்ளை செய்து அதன்பின் விருப்பமான நிறத்தில் நெயில் பாலிஷ் அப்ளை செய்யவும்.

நகத்தில் முகம் பார்க்கலாம்!

ஸ்டெப் - 11: மேற்குறிப்பிட்ட விஷயங்களை 15 நாள்களுக்கு ஒருமுறை செய்து வந்தால் நகங்கள் அழகாகவும் ஆரோக்கியமாகவும் மாறும்.

டிப்ஸ்:

சில துளிகள் எலுமிச்சைச் சாற்றை நகங்களின் மீது தினமும் தடவி வரவும். இப்படிச் செய்வதால் நகங்கள் உடையாமல் இருக்கும்.

சில சொட்டு விளக் கெண்ணெயை, நகத்தைச் சுற்றி தடவி மசாஜ் செய்து வர, நகம் பளபளக்கும்.

கிரீன் டீ டிகாக்‌ஷனில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் விரல்களை

சில நொடிகள் வைத்திருந்தால் நகங்கள் வேகமாக வளரும்.