Published:Updated:

வயசானாலும் உங்க அழகும் இளமையும் உங்களைவிட்டுப் போகாமலிருக்க... இதை ட்ரை பண்ணுங்க! #Beauty #Video

அழகுக்கலை நிபுணர் வசுந்தரா பரிந்துரைக்கும் இயற்கை ஃபேஸ் பேக்.

 ஃபேஸ் பேக்
ஃபேஸ் பேக்

ஐம்பதைத் தாண்டிய பிறகும்கூட, `என்றும் பதினாறு' லுக்கில் இருக்க வேண்டுமென்ற ஆசை நம் எல்லோருக்கும் இருக்கிறது. வயதாகும்போது ஏற்படும் மிக முக்கியமான அசௌகர்யம் சருமத்தளர்ச்சிதான். அதை இயற்கையாகத் தடுக்கவும், சருமத்தை இறுக்கமாக்கவும் எளிமையான ஃபேஸ் பேக்கைப் பரிந்துரைக்கிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

அழகுக்கலை நிபுணர் வசுந்தரா
அழகுக்கலை நிபுணர் வசுந்தரா

``தேவையான பொருள்கள்:

* பாதாம் - 3 (நன்கு ஊறவைத்து, அரைத்தது)

* பாலில் ஊறவைத்த 4 டீஸ்பூன் ஓட்ஸ்

* பாலில் ஊறவைத்த ஒரு சிட்டிகை குங்குமப்பூ

* கடலைமாவு - 2 டீஸ்பூன்

தினமும் பால் உபயோகித்து முகத்தை கிளென்ஸ் செய்வது நல்லது!
அழகுக்கலை நிபுணர் வசுந்தரா

ஃபேஸ் பேக் தயாரிப்பு :

பாதாம் விழுதில், பாலில் ஊறவைத்த ஓட்ஸ் மற்றும் குங்குமப்பூவை கலந்துகொள்ளவும். இதனுடன் கடலைமாவு சேர்த்து குழைத்துக்கொள்ளவும். சில நிமிடங்கள் ஊறவைத்தால், ஃபேஸ் பேக் ரெடி!

ஃபேஸ் பேக்
ஃபேஸ் பேக்

அப்ளை செய்யும் முறை :

* ஃபேஸ் பேக்கை அப்ளை செய்வதற்கு முன், பால் வைத்து முகத்தை நன்கு சுத்தப்படுத்த வேண்டும். காய்ச்சாத பாலில்தான் ஏடு இருக்காது என்பதால், அதையே உபயோகிக்கவும். முகத்தில் பால் தடவிவிட்டு, பஞ்சினால் துடைத்து எடுக்கவும். பாலிலுள்ள லாக்டிக் அமிலம், சருமத்தை மிருதுவாகவும் பளிச்சென்றும் ஆக்கும். பழைய மேக்கப்பின் மிச்சம் இருந்தாலும் நீங்கிவிடும். சருமத்திலுள்ள இறந்த செல்கள் நீங்கிவிடும். எனவே, வாய்ப்பிருப்பவர்கள், தினமும்கூட பால் உபயோகித்து முகத்தை கிளென்ஸ் செய்யலாம்.

* ஃபேஸ் காஸ் (Gauze) எனப்படும் மெல்லிய துணியை முகத்தின் மேல் பொருத்திவிட்டு, தயாராக உள்ள ஃபேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் முழுக்க அப்ளை செய்யவும்.

ஃபேஸ் பேக்
ஃபேஸ் பேக்

* சில நிமிடங்கள் கழித்து, ஃபேஸ் காஸை நீக்கினால் போதும். முகம் தளர்ச்சியின்றி, பளிச்சென மாறியிருக்கும்.

* ஒரு வாரத்தில், அதிகபட்சமாக இரண்டு நாள்கள் இந்த ஃபேஸ் பேக்கை முயலலாம்.

Vikatan

நன்மை:

* பாதாம் மற்றும் ஓட்ஸில் உள்ள வைட்டமின் பி, புரதம் போன்றவை சருமத்தைப் பொலிவாக வைத்துக்கொள்ள உதவும்"

இந்த ஃபேஸ் பேக் செய்முறையை, வீடியோ வடிவில் காண கீழ்க்காணும் லிங்க்கை க்ளிக் செய்யவும்!

வயசானாலும் உங்க அழகும் இளமையும் உங்களைவிட்டுப் போகாமலிருக்க.... இதை ட்ரை பண்ணுங்க! #BeautyTips

Posted by Vikatan EMagazine on Friday, December 20, 2019