Published:Updated:

பயணத்தின்போதும் பளிச் லுக்... அழகான சருமத்துக்கு அவசிய டிப்ஸ்!

Travel time Skincare tips
Travel time Skincare tips

குளிர்ப்பிரதேசம் ஒருவித சோம்பலைத் தரும், அதிகம் வியர்க்காது என்பதால் சிலர் குளியலைத் தவிர்ப்பார்கள். ஆனால்..

பல புத்தகங்கள் கற்பிக்கும் பாடங்களை ஒரு நீண்ட பயணம் நமக்கு உணர்த்திவிடும். வேலைப் பளுவிலிருந்து விடுபடச் சிறிய பிரேக், நண்பர்களோடு ஓர் உற்சாகப் பயணம், குடும்பத்தினருடன் மினி பிக்னிக் பிளான் என ஒவ்வொரு பயணமும் நமக்கு பலவித அனுபவங்களைத் தருகிறது. அதே சமயம் உணவு ஒவ்வாமை, உடல்நிலை மாற்றம் எனச் சமாளிக்க வேண்டிய சவால்களுக்கும் குறைவில்லை.

Skincare tips
Skincare tips

பயண நேரம் மற்றும் தங்கும் இடங்களில் `ஸ்கின் ரொம்ப டேன் ஆயிடுச்சு' ,`ஸ்கின் ட்ரைனஸ் அதிகமாயிடுச்சு'ன்னு பலவிதமான சருமப் பிரச்னைகள் சந்திப்பீர்கள். அவற்றை எவ்வாறு சமாளிப்பது எனும் சமாளிக்கும் வழிமுறைகளைச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சரும நிபுணர் சிவகுமார்.

சரும பராமரிப்புக்கான டிராவல் கிட்

பயணத்துக்கான முன்னேற்பாட்டில் உடை மற்றும் உணவுப் பொருள்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை சருமப் பராமரிப்புக்கும் கொடுக்க வேண்டும். உங்களுக்கு சென்சிடிவ் சருமம் எனில் பயணத்துக்கு முன்பே சரும நிருபரை அணுகி நீங்கள் செல்லவிருக்கும் இடம், அது குளிர் அல்லது வெயில் பிரதேசமா என்பது போன்ற விஷயங்களைக் கூறினால், உங்கள் சருமத்துக்கேற்ற பராமரிப்பு வழிமுறைகளை அறிவுறுத்துவார். இதனால் சென்சிடிவ் சருமத்தினர் பாதிப்பிலிருந்து தப்பலாம்.

Skincare products
Skincare products

பயணத்துக்கான முன்னேற்பாட்டில் `மெடிக்கல் கிட் ' இருப்பதுபோல சருமப் பராமரிப்புக்கான `டிராவல் கிட்' இருப்பதும் அவசியம். அவரவர் சருமத்துக்கேற்ற ஃபேஸ் வாஷ், மாய்ஸ்ச்சரைஸர், சன்ஸ்க்ரீன், லிப்-பாம் போன்ற விஷயங்களுடன் சானிடைசர், வெட் டிஷ்யூ, ரெஃப்ரெஷிங் ஸ்ப்ரே போன்றவற்றை எடுத்துக்கொள்ளவும்.

பயணநேரத்திலும் பராமரிப்பு அவசியம்

வாகனப் பயணத்தின்போது எந்தவித ஒப்பனைகளும் இல்லாமல் இருப்பது சிறப்பு. குறிப்பாக ஃபவுண்டேஷன் க்ரீம், காம்பேக்ட் பவுடர் போன்ற விஷயங்கள் சருமத் துவாரங்களை அடைத்து, சரும சுவாசத்தை தடை செய்கிறது. இதனால், முகப்பரு, ராஷஸ் போன்ற சரும ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

வறண்ட சருமத்தை தேவைப்படும் நேரத்தில் கழுவிவிட்டு மாய்ஸ்ச்சரைஸர் தடவ வேண்டும். எண்ணெய் சருமத்தை சரியான ஃபேஸ் வாஷ் உபயோகித்து அவ்வப்போது கழுவி அதிகப்படியாக வழியும் எண்ணெயை வெளியேற்றவேண்டும். மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை உதடுகளை கழுவிவிட்டு, லிப் -பாம் தடவினால், உதடுகள் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் இருக்கும்.

Travel
Travel

எண்ணைய் பிசுக்கு சருமம் உடையவர்கள் முகத்தை தரமான ஃபேஸ் வாஷ் கொண்டு கழுவியபின் வாட்டர் பேஸ்டு சன் ஸ்க்ரீன் (Water Based Sunscreen) அப்ளை செய்ய வேண்டும். மாறாக க்ரீம் பேஸ்டு சன் ஸ்க்ரீனை (Cream based Sunscreen) உபயோகித்தால் சருமத் துவாரங்கள் அடைத்து, சருமத்தில் அதிக அளவு எண்ணைய் பிசுக்கு ஏற்பட்டு முகப்பரு மற்றும் மங்கு உருவாக காரணமாகிவிடும். முகம் மட்டும் இல்லாமல் வெயில் படும் பகுதிகளான கை, கால், கழுத்துப் பகுதி என அனைத்துப் பகுதிகளிலும் சன் ஸ்க்ரீன் லோஷனை அப்ளை செய்வது நலம்.

பருவநிலை மாற்றமும் பராமரிப்பும்

குளிர் அல்லது வெயில் பிரதேசத்தைப் பொறுத்து வறண்ட சருமத்துக்கு ஈரப்பதத்தை அளிப்பதும் எண்ணைய் பிசுக்கு சருமத்துக்கு புத்துணர்வு கொடுப்பதும்தான் அடிப்படையான விஷயங்கள்.

வெயில் பிரதேசத்துக்குப் பயணம் மேற்கொள்ளும்போது, வெயிலின் தாக்கத்தால் சருமம் கறுத்துப்போவது, ரேஷஸ் போன்ற சருமப் பிரச்னைகள் வரும். அதனால் முன்னெச்சரிக்கை அவசியம்.

தங்கியிருக்கும் விடுதியில் உள்ள நீச்சல் குளம் அல்லது நீங்கள் சென்றிருக்கும் இடத்தில் உள்ள ஆறு, ஏரி, கடற்கரையில் குளிப்பதற்கு முன்னர் ஆன்டி - டேன் க்ரீமை அப்ளை செய்துகொண்டு குளிக்கும் பட்சத்தில் சருமம் கறுத்துப் போவதை தவிர்க்க முடியும்.

Traveller
Traveller

தினம் தினம் சுற்றுலாத் தலங்களில் அலைந்து திரிந்துவிட்டு, தங்கியிருக்கும் விடுதிக்குத் திரும்பியபின் குளித்துவிடவும். அதன்பின் முல்தானிமட்டியில் சிறிது எலுமிச்சை சாறு அல்லது தக்காளிச் சாறு அல்லது தயிர் கலந்த பேக்கை முகம் மற்றும் வெயிலில் பாதிக்கப்பட்ட கை, கால், கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து இருபது நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும். இதன் மூலம், வெயிலில் சன் டேன் ஆன சருமப் பகுதியின் கறுமையை அன்றைய தினமே நீக்கிவிடலாம். அளவுக்கு மீறிய வியர்வையினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தப்பிக்க ஆன்டி - பெர்ஸ்பிரேஷன் (Anti-perspiration) கிரீம் பயன்படுத்தலாம்.

வெப்பம் அதிகமுள்ள இடத்தில் வறண்ட சருமம் அதிகமாக வறண்டுபோகும். அதனால், மூன்று முதல் நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை முகத்தைக் கழுவி `க்ரீம் பேஸ்டு மாய்ஸ்ச்சரைஸரை (Cream based moisturiser) அப்ளை செய்யவும். அதே போல் உதடுகளுக்கு லிப் பாம் உபயோகிக்கவும். வறண்ட சருமம் உடையவர்கள் வைட்டமின் C கிரீம்களைப் பயன்படுத்தினால் சரும பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.

Skincare tips
Skincare tips

குளிர்ப்பிரதேசத்துக்குப் பயணம் மேற்கொள்ளும்போது, மாய்ஸ்ச்சரைஸர் அவசியம். தேவையான நேரத்தில் பெப்டைட் சீரத்தை (Peptide serum) முகத்தில் தடவலாம். இது சருத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு, சருமத்தில் ஊடுருவிச் சென்று வறண்ட சருமத்தின் முக்கிய பிரச்னையான சருமச் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும். அதிகப்படியான குளிர்ச்சி, முகத்திலுள்ள நரம்புகளைப் பாதிக்கும் என்பதால், காதுகளை மறைத்தவாறு உல்லன் தொப்பி, ஸ்கார்ஃப், காதுகளிலில் பஞ்சு போன்றவற்றைப் பயன்படுத்துவது அவசியம்.

``நான் மாடலிங் செஞ்சப்ப ரியாக்‌ஷன் வேற‌‌‌... ஆனா, இப்ப..?!'' - அண்ணன் கெளதம் மேனன் பற்றி உத்ரா மேனன்

குளிர்ப்பிரதேசம் ஒருவித சோம்பலைத் தரும் என்பதாலும், அதிகம் வியர்க்காது என்பதால் சிலர் குளியலைத் தவிர்ப்பார்கள். ஆனால் வெதுவெதுப்பான நீரில் குளித்து சருமத்தைச் சுத்தமாக வைத்திருந்தால் சரும ஒவ்வாமையைத் தவிர்க்கலாம்." எனும் சிவகுமார், இறுதியாக "அடிக்கடி தண்ணீர் குடிப்பதுடன். உறங்கும் முன் முகத்தை க்ளென்சிங் மில்க் கொண்டு சுத்தம் செய்தபின், வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி துடைத்துவிட்டு, முகம், கைகள், கால்களில் தரமான மாய்ஸ்ச்சரைசரை அப்ளை செய்துகொண்டு படுத்தால் சரும வறட்சியிலிருந்து தப்பிக்கலாம்." என்றார்.

அடுத்த கட்டுரைக்கு