ழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் தினமும் கொஞ்சம் நேரம் செலவிட்டாலே போதும்... உச்சி முதல் உள்ளங்கால் வரை நம் உடலைச் சிறப்பாகப் பராமரிக்க முடியும். நம் வீட்டிலேயே கிடைக்கக்கூடிய பொருள்களைக்கொண்டு அழகில் மிளிரும் வகையிலான அழகுக் குறிப்புகள் இவை...  

பளபளக்கும் கூந்தலுக்கு...

அரை கப் கரிசலாங்கண்ணிச் சாற்றுடன் நான்கு ஸ்பூன் வெந்தயத்தூள் சேர்த்துக் கலக்கி, தலைமுடியில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

பியூட்டி
பியூட்டி

இளநரை இருந்தாலும், கரிசலாங் கண்ணிச்சாறு தடவுவதால் நரையின் நிறம் மறைந்து கருமையாகக் காட்டும். இதை வாரம் ஒருமுறை தொடர்ந்து செய்யலாம்.

அடர்த்தியான புருவத்துக்கு...

புருவம் அடர்த்தியாக வளர ஆலிவ் எண்ணெய் துணைபுரியும். உடல் வெப்பம், மன அழுத்தம், வயது முதிர்வு காரணமாகப் புருவ முடிகள் உதிரக்கூடும். அதனால் தூங்குவதற்கு முன்பாகத் தினமும் காதைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் பட்ஸ் மூலம் ஆலிவ் எண்ணெயைப் புருவத்தில் தேய்த்து, அதே பட்ஸால் நன்கு மசாஜ்போல செய்துவிடவும். பிறகு, ஐபுரோ பென்சிலால் எண்ணெயைத் தொட்டுப் புருவத்தின் வடிவத்துக்கு பென்சிலால் வரைந்துகொள்ளவும்.இப்படிச் செய்வதால் வலுவிழந்த புருவ முடிகள் வளரும். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கறையில்லாத பற்களுக்கு...

புதினா, எலுமிச்சைச்சாறு, பச்சைக் கற்பூரம் இரண்டு சிட்டிகை, சர்க்கரை, லவங்கம், உப்பு... இவற்றை மொத்தமாகக் கலந்து அரைத்துவைத்துக்கொள்ளவும். இதை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொப்பளிப்பதன் மூலம் வாய் துர்நாற்றம் நீங்கிப் புத்துணர்ச்சிக் கிடைக்கும். அரைத்த விழுதைப் பற்பசையைப் போல உபயோகப்படுத்திப் பற்களைத் தேய்க்கும்போது மஞ்சள் கறை நீங்கி பற்கள் பளபளப்பாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு