லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

மறக்க மனம் கூடுதில்லையே... பட்டை மறந்த பெண்களுக்கு மறுமலர்ச்சி பட்டுப்புடவைகள்

மறுமலர்ச்சி பட்டுப்புடவைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
மறுமலர்ச்சி பட்டுப்புடவைகள்

இந்தியா முழுவதுமுள்ள பல அருங்காட்சியங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பட்டுப்புடவைகளின் டிசைன்கள், அவை உருவான விதம் குறித்த தகவல்களைச் சேகரித்தோம்.

தமிழகத்தை ஆட்சிசெய்த அரசர்கள் சரிகைகள் மற்றும் பட்டு நூல்களால் நெய்யப்பட்ட புடவைகளை தங்களின் மேலாடைகளாக அணிந்தார்கள் என்கின்றன வரலாற்று சான்றுகள். அதன்பின், புடவை என்பது பெண்களின் உடையாக மாறிப்போனது.

நம் வாழ்வியலோடு ஒன்றிணைந்த புடவைகளில் பட்டுப்புடவைகளுக்குத் தனிச்சிறப்பு உண்டு. பட்டுப் புடவைகளின் பார்டர்களும் நிறங்களும் நம் கலாசாரத்தின் பிரதிபலிப்பாக இருந்திருக்கின்றன. காலப்போக்கில் டிரெண்ட் என்ற பெயரில் அந்த அடையாளங்கள் மெள்ள மெள்ள மாறத் தொடங்கின.

பட்டின் பாரம்பர்யத்தை மீட்டெடுக்கும்விதமாக ஆரெம்கேவி நிறுவனம் ‘மறுமலர்ச்சி’ பட்டுப்புடவைகளை அறிமுகம் செய்திருக்கிறது. இயற்கை சாயங்களால் மெருகேற்றப்பட்டு, பாரம்பர்ய டிசைன்களுடன் நெய்யப் பட்டிருக்கும் இந்தப் புடவைகளின் சிறப்புகளை விவரிக் கிறார்கள், ஆரெம்கேவி நிறுவனத்தின் இயக்குநர்கள் சங்கர் குமாரசாமி மற்றும் பிரணவ் குமாரசாமி.

“99 ஆண்டுகளாக பட்டுப்புடவைகள் தயாரிப்பில் இருக்கிறோம். காலத்துக்கேற்ப, வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப, பட்டு நெசவில் எத்தனையோ மாற்றங் களைச் செய்திருக்கிறோம். வியாபார நோக்கத்துக்காக டிரெண்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் பட்டின் பாரம்பர்யத்தைக் காக்கும் கடமையும் எங்களுக்கு இருக் கிறது. அதனால் அடிக்கடி பட்டு குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோம். அப்படித்தான் இயற்கை சாயங்கள் பற்றி தெரிந்துகொண்டோம்.

 பிரணவ் குமாரசாமி,  சங்கர் குமாரசாமி
பிரணவ் குமாரசாமி, சங்கர் குமாரசாமி

குஜராத்திலிருந்து வந்த நபர் மஞ்சள், பூ, பழம் போன்ற வற்றில் இருந்து வண்ணங்கள் எடுத்து, 25 வகையான நிறங்களை உருவாக்கும் ஃபார்முலாவை கற்றுக் கொடுத் தார். அதை அடிப்படையாக வைத்து நூறு நிறங்களை உருவாக்கியிருக்கிறோம்” என்று சங்கர் குமாரசாமி நிறுத்த, பிரணவ் குமாரசாமி தொடர்ந்தார்...

“பட்டு உடுத்தும் பெண்களின் எண்ணிக்கை இன்று குறைந்துவருகிறது. அவர்களையெல்லாம் மீண்டும் பாரம் பர்யத்தை நோக்கி இழுக்கும் முயற்சியாகவே இந்த ‘மறுமலர்ச்சி' பட்டுப்புடவைகளை உருவாக்கினோம்.

இந்தியா முழுவதுமுள்ள பல அருங்காட்சியங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பட்டுப்புடவைகளின் டிசைன்கள், அவை உருவான விதம் குறித்த தகவல்களைச் சேகரித்தோம்.

அந்தக் காலத்தில் அரச குடும்பத்தினருக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட தனித்துவமான அந்த டிசைன்களை எல்லா மக்களும் பயன்படுத்தும் நோக்கத்தில் இந்த மறுமலர்ச்சி பட்டுப்புடவைகளை உருவாக்கினோம்.

இந்தப் புடவைகளை இயற்கை சாயங்களால் உருவாக்கியிருக்கிறோம். புதுமையான இந்த முயற்சிக்கு மக்களிடம் இருந்து வரவேற்பு கிடைக்கும்பட்சத்தில் இன்னும் அதிக டிசைன்களை மீட்டுருவாக்கம் செய்யத் தயாராக இருக்கிறோம்” என்றார்.

மலரட்டும்!