Published:Updated:

`மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்டு 2019' வென்றார் சென்னைப் பெண் அக்‌ஷரா ரெட்டி!

மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்டு 2019
News
மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்டு 2019

`மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்டு 2019' டைட்டிலை வென்றார் சென்னைப் பெண் அக்‌ஷரா ரெட்டி

Published:Updated:

`மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்டு 2019' வென்றார் சென்னைப் பெண் அக்‌ஷரா ரெட்டி!

`மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்டு 2019' டைட்டிலை வென்றார் சென்னைப் பெண் அக்‌ஷரா ரெட்டி

மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்டு 2019
News
மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்டு 2019

கடந்த மே மாதம் கேரளாவில் நடந்த `மிஸ் சூப்பர் க்ளோப் இந்தியா 2019' டைட்டிலை வென்ற சென்னைப் பெண்ணான அக்‌ஷரா ரெட்டி, அதன் இறுதிக்கட்டமாக கடந்த வாரம் துபாயில் நடைபெற்ற `மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்டு 2019' போட்டியிலும் டைட்டிலை வென்று சென்னை திரும்பியுள்ளார். அவரிடம் பேசினோம்.

மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்டு 2019
மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்டு 2019

``துபாயில் நடந்த போட்டியில், ரஷ்யா, கென்யா, ஸ்வீடன் என மொத்தம் 22 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 22 போட்டியாளர்களைச் சந்தித்தேன்.

ஒரு வாரம் முழுக்கத் தூக்கமில்லாமல் பல பயிற்சிகளை மேற்கொண்டோம். தினசரி போட்டோஷூட், நடைப்பயிற்சி, வெற்றி பெற்றால் எப்படி மைக்கைப் பிடிக்க வேண்டும், எப்படி நிற்க வேண்டும், அமர வேண்டும் என்பதுவரை பலவித பயிற்சிகள் கொடுத்தார்கள்.

அக்‌ஷரா ரெட்டி
அக்‌ஷரா ரெட்டி

`உங்களுக்கு எவ்வளவு தைரியம், நீங்கள் என்னுடைய கனவுகளைத் திருடிவிட்டீர்கள். உங்கள் வெற்று வார்த்தைகளால் என் குழந்தைப் பருவம் காலியாக உள்ளது' என உலகத் தலைவர்களை நோக்கி கேள்வி எழுப்பினார் 16 வயது பெண். ஏன்?' - டாப் 6-க்குத் தேர்வான எங்களிடம் பொதுவாக வைக்கப்பட்ட கேள்விதான் இது.

கிரேட்டா தன்பெர்க்கின் பேச்சை நான் வீடியோவில் பார்த்திருக்கிறேன். `கிரேட்டா, சமகாலத்தில் உலகத்தையே கவனிக்கவைத்து வரும் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர். புவி வெப்பமயமாதலை தடுக்கக் கோரி இயங்கிக்கொண்டிருக்கும் இவர், நம் அனைவருக்கும் முன்மாதிரி' என்றேன்" என்கிறார் அக்‌ஷரா.

அக்‌ஷரா ரெட்டி
அக்‌ஷரா ரெட்டி

பொது அறிவு, தனித் திறமை என அனைத்திலும் சிறப்பாக பங்காற்றிய அக்‌ஷரா, டைட்டில் மட்டுமல்லாமல் `மிஸ் பியூட்டிஃபுல் ஸ்மைல்' மற்றும் `மிஸ் குளோயிங் ஸ்கின்' டைட்டில்களையும் சேர்த்து அள்ளி வந்திருக்கிறார்.