
ஹேண்ட் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட மெட்டீரியல்கள் விலை அதிகம். மெஷினில் வடிவமைக்கப்பட்ட சிக்கன்காரி மெட்டீரியல்கள் விலை குறைவாகக் கிடைக்கும்.

சிக்கன்காரி... சினிமா ஹீரோயின்கள் முதல் சாமானிய பெண்கள்வரை இதுதான் இப்போது டிரெண்ட். துணி முழுவதும் ஒரே நிறத்தால் செய்யப்படுகிற எம்ப்ராய்டரி டிசைன்தான் சிக்கன்காரி (Chikankari). இதை அவரவர் உடல்வாகு மற்றும் ஃபேஷனுக்கு தகுந்தாற்போல் ஸ்டைலிங் செய்து கொள்வதற்கான டிப்ஸை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனர் நந்திதா.

டிரெண்டி லுக்: சிக்கன்காரி டிசைன் செய்த மெட்டீரியலில் கிராப் டாப் தயார்செய்து அதை பலாஸோ பேன்ட் அல்லது ஃப்ரீ ஃபிட் பேன்ட்டுடன் மிக்ஸ் மேட்ச் செய்யலாம்.

கேஷுவல் லுக்: எல்லா மெட்டீரியலிலும் சிக்கன்காரி எம்ப்ராய்டரி செய்யலாம். சிக்கன்காரி எம்ப்ராய்டரி செய்த மெட்டீரியலில் குர்தி டிசைன் செய்து பட்டியாலா அல்லது ஸ்கர்ட்டுடன் மிக்ஸ் மேட்ச் செய்யலாம். த்ரீ ஃபோர்த் பேன்ட் கூல் லுக் கொடுக்கும்.

எத்னிக் லுக்: லாங் கவுன் அல்லது அம்ப்ரெல்லா டைப் டாப் அணிய விரும்புவோர், மார்பு வரை, ஷிஃபான், ரேயான், ஆர்கன்ஸா போன்ற மெட்டீரியல்கள் வைத்து டிசைன் செய்யலாம். மார்புக்கு கீழே நீங்கள் விரும்பும் நீளத்துக்கு, விரும்பும் நிறத்தில் சிக்கன்காரி டிசைன் கொண்ட மெட்டீரியலில் உடை அணியலாம். மார்புப்பகுதியில் நீங்கள் வைத்துத் தைத்திருக்கும் துணியின் நிறத் தில் துப்பட்டா அணிவது சூப்பர் ஸ்டைல்.
நீளமான உடைகளை விரும்பாத பெண்கள், காட்டன் அல்லது ரா சில்க் மெட்டீரியலில் சிக்கன் காரி டிசைனுடன் குர்தி அணியலாம். லெகின்ஸ் அல்லது ஃப்ரீ ஃபிட் பேன்ட்டுடன் இதை மேட்ச் செய்து, பனாரஸி அல்லது நெட்டடு துப்பட்டா அணியலாம்.

ஃப்யூஷன் லுக்: புடவை பிரியைகளுக்கும் இருக் கிறது சூப்பர் சாய்ஸ். புடவையின் நீள அகலத்தில் சிக்கன்காரி மெட்டீரியலை உங்களுக்குப் பிடித்த நிறத்தில் தேர்வுசெய்து கொள்ளுங்கள். புடவையில் பார்டர் வரும் பகுதிகளில் காஞ்சிபுரம் பட்டின் பார்டர் வைத்து அணிந்தால் ஃப்யூஷன் லுக் கிடைக்கும்.
நீங்கள் தேர்வு செய்துள்ள சிக்கன்காரி டிசைன் மெட்டீரியலுக்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் பார்டரை தேர்வு செய்தால் அசத்தலாக இருக்கும்.
டிப்ஸ்: ஹேண்ட் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட மெட்டீரியல்கள் விலை அதிகம். மெஷினில் வடிவமைக்கப்பட்ட சிக்கன்காரி மெட்டீரியல்கள் விலை குறைவாகக் கிடைக்கும். சிக்கன்காரி எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஆடைகளை கைகளால் துவைத்து நிழலில் காயவைத்துப் பயன்படுத்துங்கள்.