Published:Updated:

குறைந்த விலையில் நகை வாங்கமுடியுமா? Exclusive Deal

குறைந்த விலையில் நகை வாங்கமுடியுமா? Exclusive Deal
குறைந்த விலையில் நகை வாங்கமுடியுமா? Exclusive Deal

தங்க நகையின் மவுசு எப்போதும் நம் நாட்டில் குறையப்போவதில்லை. மொத்த இந்திய வீடுகளில் இருக்கும் தங்கத்தின் கையிருப்பு எவ்வளவு தெரியுமா? இந்திய ரூபாய் மதிப்பில் ஐம்பத்து நான்காயிரத்து நூற்றி எட்டு கோடியாகும் - ₹ 5,41,08,00,00,000! இந்தியர்களுக்கு தங்கத்தின் மேல் இவ்வளவு மோகம் வரக்காரணம் மூன்று - தங்கம் அந்தஸ்த்தை பறைசாற்றுகிறது, அணிபவரை ஆடம்பரமாய் மிடுக்காய்க் காட்டுகிறது முக்கியமாக தங்கத்தை ஒரு அவசரகால சேமிப்பாக பார்க்கப்படுகிறது. 2008 இல் உலகமே கடும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியபோது, இந்தியர்கள் அந்த நெருக்கடியை அவ்வளவாக உணரவில்லை, காரணம் நடுத்தர வர்க்கத்தின் சேமிப்பு, இதில் தங்கத்துக்கு நிச்சயம் பெரிய பங்குண்டு.

குறைந்த விலையில் நகை வாங்கமுடியுமா? Exclusive Deal

சமீப காலமாக தங்கத்தின் விலை கணிசமாக அதிகரிக்கவில்லையே, தங்கத்தை வாங்கிவைத்தால் அது பின்னாளில் பலன் தருமா? என்ற சந்தேகம் இருந்தாலும் தங்கத்தின் விலை சிறுகச் சிறுக உயர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த போக்கு நீண்டகால அடிப்படையில் தங்கத்தின் விலை அதிகரித்தே தீரும் எனக் காட்டுகிறது. அதனால், தங்க விலை மிதமிஞ்சாமல் சீராக இருக்கும்போதே திருமணம் போன்ற குடும்ப நிகழ்வுகளுக்கு தங்க நகைகளை வாங்கி வைத்துக்கொள்வது சிறந்தது.

நம்பிக்கையான நகைக்கடையில் 916 ஹால் மார்க் நகைகளை வாங்குவதையே இந்திய தர நிர்ணய ஆணையம் (BIS) வலியுறுத்துகிறது. தூய தங்கத்தை வைத்து நகைகள் செய்ய முடியாது, தங்கத்தோடு செம்பு போன்ற உலோகம் கலந்தே நகைகள் தயாரிக்கப்படுகின்றன. இதில் 916 ஹால் மார்க் என்பது நகையில் 91.6 சதவீதம் தங்கம் உள்ளது என்பதைக் குறிக்கிறது. மீதி 8.4 சதவீதம் வேறு உலோகமாக இருக்கும், பெருவாரியான கடைகளில் இப்போதெல்லாம் இந்த 916 நகைகளே விற்கப்படுகின்றன. அதனால் நகை வாங்கயில், இந்த முத்திரை உள்ளதா, அன்றைய நாளில் 916 தங்கத்தின் மதிப்பு என்ன எனத்தெரிந்தே நகையை வாங்கவேண்டும்! இதனால் ஏமாறாமல் இருக்கலாம். 

விலை குறைவாக விற்கும் இடத்தில் நகைகளை ​வாங்குவதால் பல ஆயிரம் ரூபாய் வரை பணத்தை மிச்சப்படுத்தலாம். இதற்கு மொத்த

குறைந்த விலையில் நகை வாங்கமுடியுமா? Exclusive Deal

வியாபாரம் செய்யும் நகைக்கடைகளை நாடுவது சிறப்பு. நகை வாங்கவேண்டுமென்றால் பிரதானமான ஒருசில கடைகளையே நமக்குத் தெரியும். சிறிய கடைகளில் நகை வாங்குவதால், தங்கத்தின் மதிப்பு எப்படியிருக்குமோ? எனத் தயங்கி அங்கே நகைகளை வாங்காமல் இருந்துவிடுவோம். ஆனால், அரசு அனுமதியுடன் BIS விதிகளின்படி நகைகளை விற்கும் சிறிய கடைகளும் இருக்கவே செய்கின்றன. இங்கு நகைகள் பல காரணங்களால் குறைந்தவிலையில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

மொத்த வியாபாரிகளுக்கு பெரிய ஷோ ரூம்கள் இருப்பதில்லை, இதனால் வேலை செய்யும் ஊழியர்களின் கட்டணம் மற்றும் ஷோ ரூம் பராமரிப்புக்கு ஆகும் செலவு குறைகிறது. இவர்கள் மெஷின்மெட் நகைகளை மொத்தமாகத் தயாரித்து வழங்குகின்றனர். கைவினை நகைகள் பிரபலமானவைதான், ஆனால் செய்ய நேரம் அதிகமாகப் பிடிக்கும், நகை ஆசாரி வாங்கும் கட்டணமும் இதனால் கூடுகிறது - இது செய்கூலி. மெஷினில் கணினி உதவியுடன் செய்யப்படும் நகைகளை விரைவாக, துல்லியமாக வடிவமைத்துவிட முடியும். இதுவும் மொத்த வியாபாரிகளின் பிளஸ். அடுத்து முக்கியம் சேதாரம், நகை செய்யும்போது தங்கத்துகள் சில மில்லிகிராம் அளவு இழக்கப்படுகிறது. இது நகை அளவைப் பொறுத்து மாறுபடும், பெரிய நகைக்கு அதிக சேதாரம். மெஷின்மேட் நகைகள் கணிசமாக சேதாரத்தைக் குறைக்கின்றன, இதனால் சேதாரக் கட்டணமும் மொத்த வியாபாரிகளிடம் சொர்ப்பமாகும்.

தங்க & வைர நகைகள் விற்பனையைச் செய்துவருகிறது வேப்பேரி பிரில்லியண்ட் கட் கோல்ட் அண்ட் டைமண்ட் ஜூவல்லர்ஸ். மொத்த வியாபாரிகளான இவர்களிடம் சில்லறையாகவும் நாம் நகைகளை வாங்கலாம். மேற்சொன்ன முறைப்படி இவர்கள் நகைகளை வடிவமைத்து வழங்குவதால் 25-30% சந்தை விலையைவிட குறைவாக நகைகள் இங்கு கிடைக்கிறது, ஆனால் தரம், அதே தரம். வைர நகைகளுக்கு பெயர்பெற்று விளங்கும் இவர்கள் சர்வதேச தர நிர்ணய அமைப்புகளின் விதிப்படி வைர மற்றும் பிற இரத்தினக் கற்கள் பதித்த நகைகளை விற்பனை செய்கின்றனர். ஆர்டர் செய்தும் நமக்குப் பிடித்த, நமக்கு ஏற்ற நகைகளை செய்து வாங்கிக்கொள்ளலாம்! பழைய நகைகளுக்கு அன்றைய விலையிலிருந்து 1% மட்டும் பிடித்தம்போக மீதி பணம் முழுவதும் கொடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

விகடன் வாசகர்களுக்கு சிறப்பு சலுகையும்  உண்டு. சலுகையைப் பெற கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்...

1). Name *

2). Contact *

3). State *