Published:Updated:

பாலிவுட்டின் பேஷன் ஐகான்... இந்தியாவின் டிரெண்ட்செட்டர்! #HBDRanveerSingh

பாலிவுட்டின் பேஷன் ஐகான்... இந்தியாவின் டிரெண்ட்செட்டர்! #HBDRanveerSingh
பாலிவுட்டின் பேஷன் ஐகான்... இந்தியாவின் டிரெண்ட்செட்டர்! #HBDRanveerSingh

பாலிவுட்டின் பேஷன் ஐகான்... இந்தியாவின் டிரெண்ட்செட்டர்! #HBDRanveerSingh

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ரு முறையாவது பத்மாவத்தை பார்த்துவிட வேண்டும் என்ற தவிப்பை, தன் மிரட்டலான கண்களில்... 'வேற லெவல் வில்லனிஸம்' என்று கூறும் அளவிற்கு தன் துல்லியமான நடிப்பால் இந்திய மக்களின் மனதைத் திருடியவர் கில்ஜி எனும் 'ரன்வீர் சிங்' (Ranveer Singh). எந்தவித முன் அனுபவமோ, கலைத்துறையினர்களின் பரிந்துரைகளோ இல்லாமல், தன் சொந்த முயற்சியில் திரைப்பயணத்தை ஆரம்பித்து, 8 ஆண்டுகள்தான் ஆகிறது. ஆனால், அதற்குள் பாலிவுட் இயக்குநர்களின் 'ஃபேவரைட் கதாநாயகன்' என்ற அந்தஸ்து பெற்றுவிட்டார்.

'பாலிவுட்டின் மிகவும் துடிப்பான பையன் ரன்வீர்' என்று சொல்லாத திரைக்கலைஞர்களே இல்லை. துறுதுறுவென ஏதாவது செய்துகொண்டே இருப்பது அனைவரையும் ரசிக்க வைக்கும் விதமாக இருக்குமே தவிர யாரையும் துன்புறுத்தாது. 8 வருடங்கள், 13 திரைப்படங்கள், வசூல் சாதனைகள் என்று ரன்வீரின் வளர்ச்சி மிகவும் வியக்கத்தக்கது. இன்றும்கூட அவரின் வெற்றி அவரால் நம்ப முடியாத ஒன்று என்று அடிக்கடி ஊடகங்களில் சொல்லுவார். 

2010-ம் ஆண்டு, 'பாண்ட் பாஜா பாரத்' எனும் படத்தின்மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். முதல் படமே 'லவ்வர்பாய்' கதாபாத்திரம். 3 ஆண்டுகள் தேடல்களுக்கு பிறகு கிடைத்த அறிய வாய்ப்பு இது. 'பார்ப்பதற்கு சுமாரா இருக்கான், எப்படி நடிப்பானே தெரியலையே' என்று அந்தப் படத்தின் குழுவினர் முணுமுணுத்துக்கொண்டே இருந்தார்கள். அப்பொழுது, ரன்வீரின் குரு ஆதித்யா சோப்ரா அவரிடம், "மக்களுக்கு உன்னை பிடிக்க வேண்டுமென்றால், நீ நன்றாக நடிக்க வேண்டும்" என்றாராம். தந்தையின் ஊக்குவிக்கும் வார்த்தைகள், ஆதித்யா சோப்ராவின் நம்பிக்கை, ரன்வீரின் கடின உழைப்பு அனைத்தும், 'தோல்வி அடைந்துவிடுமோ!' என்ற படக்குழுவினரின் அச்சத்தை உடைத்தெறிந்தது. 'பிட்டு' கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ரன்வீர் சிங் எனும் நடிகன் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டார். பிறகு உற்சாகமாய் தன் பயணத்தை தொடரவும் செய்தார்.

அப்போது நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ரன்வீர், "ரன்பீர் கபூர் நிராகரித்த படம்தான் இந்த `பாண்ட் பாஜா பாரத்’. அவர் நிராகரித்ததால் புதுமுகம் வேண்டும் என்ற நான் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தது. மூன்றாண்டு காலம், எந்த விதமான மாடலிங் போட்டோஷூட், மியூசிக் ஆல்பம் போன்றவற்றை பண்ணாமல் இருந்ததற்கு பலனும் கிடைத்துவிட்டது என்று சந்தோஷப்பட்டேன். வளர்ந்து வரும் நடிகை அனுஷ்கா ஷர்மாவோடு இணைந்து நடித்தது பெருமையாக இருக்கிறது. தினமும் காலையில் எழும்போது கனவுலகில் வாழ்வதுபோல்தான் உணர்கிறேன். ஹிந்தி படங்களை பார்த்து ரசித்து வளர்ந்தவன், இன்று நான் நடித்த படத்தை பார்க்கிறேன். கடின உழைப்பு வீண் போவதில்லை என்பதை உணர்கிறேன். அதிர்ஷ்டசாலின்னுதான் சொல்லனும்" என்றுகூறி புன்னகைத்தார்.

அதன்பின், 'லேடிஸ் VS ரிக்கி பால்', 'பாம்பே டாக்கீஸ்', 'லூதேரா', 'ராம் லீலா', 'குண்டே', 'பாஜிராவ் மஸ்தானி', 'பத்மாவத்' உள்ளிட்ட பிளாக்பஸ்டர்களை தந்துள்ளார். திரையில் மட்டுமல்ல, அன்றாட வாழ்விலும் 'கலர்ஃபுல் கேரக்டர்'. வித்தியாசங்களை விரும்பும் இளைஞர்களுக்கு ரன்வீர் சிங் என்றுமே டாப் ஐகான். "புதுமையான உடைகளை முயற்சிப்பதற்கு என்றுமே தயங்காத ஒரே மனிதர் ரன்வீர். நியான் கலர், ஆண்கள் ஸ்கர்ட், பேபி பிங்க் டீ-ஷர்ட் என்று அத்தனையையும் மறுவார்த்தை சொல்லாமல் உடுத்திக்கொள்வார். ரன்வீர் ஒரு ட்ரெண்ட்செட்டர் என்பதில் எந்த ஒரு கருத்துவேறுபாடும் இல்லை. உடைகளில் மட்டுமல்ல, ஹேர்ஸ்டைல், தாடி, மீசை என்று எல்லாவற்றிலும் பல புதுமைகளை செய்து, மற்றவர்களை பின்பற்றவும் செய்தவர் ரன்வீர். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், அவர்களுக்கு பிடிக்குமா என்பதைவிட, தனக்கு பிடித்தவற்றை எந்தவித தயக்கமுமின்றி உடுத்துவார்" என்று ரன்வீர் சிங்கின் ஸ்டைலிஸ்ட் நிடாஷா பத்திரிகையாளர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இணையதளத்தில் ஏகப்பட்ட கேலி கிண்டல்கள் ரன்வீரை பற்றி வந்தாலும், ஒருபோதும் அதற்காக வருத்தப்படவுமில்லை, தன் ஆடை வடிவமைப்பாளர்களையும் விட்டுக்கொடுத்ததுமில்லை. மற்றவர்களை புண்படுத்தாமல் முடிந்தளவுக்கு வாழ்க்கையை ரசித்து வாழும் ரன்வீர் சிங்கிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு