Published:Updated:

தங்கத்துக்கு ஏன் மவுசு குறைவதேயில்லை? Exclusive Deal

தங்கத்துக்கு ஏன் மவுசு குறைவதேயில்லை? Exclusive Deal
தங்கத்துக்கு ஏன் மவுசு குறைவதேயில்லை? Exclusive Deal

விளையாட்டில் வெல்லும் வீரர்களுக்கு தங்கப் பதக்கம் அளிக்கப்படுகிறது. சிறப்பாக செயலாற்றும் கலைஞர்களுக்கு தங்கத்தால் ஆன விருதுகள் வழங்கப்படுகின்றன. காதலர்கள், காதலிகளுக்காக - 'தங்கமே தங்கம் அணிந்துள்ளதே, ஆச்சரியக்குறி' போன்ற கவிதைகளை வடிக்கின்றனர். இந்திய மக்கள் அக்ஷ்ய திரிதியையில் தங்கம் வாங்க வரிசைகளில் முந்தியடிக்கின்றனர். அரசாங்கம் பொருளாதாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள தங்கத்தை சேமிப்பில் வைத்துக்கொள்கிறது. அரசாங்கத்துக்கு நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என இந்தியப் பெண்களும், நாட்டின் முக்கிய நிகழ்வான திருமண ரிஸெப்ஷன்களுக்கெனவே குறைந்தபட்சம் ஆளுக்கு அரை டஜன் தங்க நகைகளையாவது வைத்துள்ளனர்.

தங்கத்துக்கு ஏன் மவுசு குறைவதேயில்லை? Exclusive Deal

தங்கம்! ஏன் தங்கத்தின் மேல் மட்டும் இந்த மோகம்? மாறாக இந்த அலுமினியத்தை நாம் விரும்பக்கூடாதா? பறக்கும் விமானம் செய்வதில் அலுமினியத்தின் பங்கு அளப்பரியது தெரியுமா? அலுமினியம் மிகச் சிறந்த மின்கடத்தி. சூடான சப்பாத்திகளை எடுத்துவர அலுமினியம் ஃபாயில் எப்படி உறுதுணையாய் இருக்கிறது என்பதை டெலிவரி பாயிடம் கேட்டுப் பாருங்கள். அதுசரி, 1850-களில் பிரெஞ்சு அரசனான மூன்றாம் நெப்போலியன் தான் உண்ணுவதற்கு அலுமினியத் தட்டை உபயோகித்ததாகவும், பிறருக்குத் தங்கத் தட்டில் உணவளித்ததாகவும் ஒரு கதையுண்டு தெரியுமா? ஆனால், 1880களின் முடிவில் அலுமினியத்தை சுலபமாக அதன் உலோகத் தாதுவில் இருந்து பிரித்துவிடலாம் என ஒரு போடு போட்டனர் ஆய்வாளர்கள். தொடர்ந்து அலுமினியத்தின் மார்க்கெட் குத்துப்பாடல்கள்களுக்கு ஆடும் ஹீரோயின்கள் போல சர்ரென வீழ்ந்தது. இன்று அலுமினியத் தாது உலகெங்கிலும் சுலபமாகக் கிடைக்கிறது, அவற்றிலிருந்து அலுமினியத்தை சுலபமாக உற்பத்தி செய்யவும் முடிகிறது...

அலுமினியம் உதாரணம்தான், மற்ற எந்த உலோகத்தைக் காட்டிலும் வயதானாலும் மவுசு குறையாத ஒரு மாஸ் ஹீரோ போல ஜொலிக்கிறதே தங்கம்! எப்படி? எந்த உலோகத்தை எடுத்துக்கொண்டாலும் ஆபரணம் செய்வதற்கு ஏற்ற உலோகங்களாக இயற்கையாகத் தேர்வாவன தங்கமும் வெள்ளியும்தான். (ஒப்பீட்டுக்காக) பிளாட்டினத்தின் உருகும் புள்ளி 1,768 டிகிரி செல்ஸியஸ், அதைவிட குறைந்த சூட்டில் த-வையும் வெ-யையும் சுலபமாக உருக்கிவிடலாம். சிறு சிறு பாகங்களைத் தட்டித் தட்டி ஒட்டவைத்து ஒன்றாக்கி ஆபரணங்கள் செய்ய இவை இலகுவாக இருக்கின்றன. இருந்தாலும், இதில் வெள்ளி சீக்கிரம் கறுத்துப்போகக்கூடியது. எனவே, 'லாஸ்ட் மேன் ஸ்டேண்டிங்' தங்கம்தான். ஆயிரம் வருடத்துக்கு முன் தங்கத்தில் செய்த சிலைகள் இன்றும் ஜொலிப்புடன் சிரித்துக்கொண்டிருக்கும், காரணம் தங்கம் பிற இரசாயனங்களுடன் குறைவாகவே ரியாக்ட் செய்கிறது. மேலும், இதன் நிறம் நெருப்பு/சூரியன் போல பிரகாசமாக இருப்பதால், மனிதர்களுக்கு இதன்பால் ஈர்ப்பு அதிகமாகவே இருக்கிறது என சுலபமாகக் கூறி நகரலாம்.

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல, இதனால்தான் தங்கத்தை தங்கம் போல பாவித்துள்ளனர். அதிகமாகவும் அல்ல, குறைவாகவும் அல்ல, வசீகரமான நிறம், நகை செய்வதற்கு ஏற்ற தன்மை, அன்பு போல நிலைக்கும் இயற்கை - தங்கம் காலத்தைக் கடந்து நிற்க காரணமாகிவிட்டன...

சரி, தங்கம் வாங்குவது எப்படி?

"ஷோ ரூம்களில் நகைகள் வாங்கும்போது, செய்கூலி, சேதாரம் ஆகிய இரண்டு கட்டணங்களைச் சேர்த்து நகையின் விலையைக் கூட்டி கடைக்காரர்கள் விற்கின்றனர். வேலையாட்கள் சம்பளம், வரி, பராமரிப்பு செலவு இவற்றை ஈடுகட்டத்தான் இந்த விலை அதிகரிப்பு என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். இந்தக் கட்டணங்கள் இல்லாமல் குறைந்த விலையில் தங்கம் வாங்க வேண்டும் என்றால் மொத்த வியாபாரம் செய்யும் நகைக் கடைகளை நாடலாம். இவ்வகையிலான மொத்த நகைக் கடைகள்  துல்லியமான வடிவமைப்பு கொண்ட, தரமான தங்க நகைகளை மெஷின் மூலம் தயாரிக்கின்றனர். எனவே, மிக மிகக் குறைவான செய்கூலி மற்றும் சேதாரக் கட்டணத்தில் மலிவான விலையில் நகைகளை இக்கடைகள் வழங்கமுடிகிறது," என்கிறார் சென்னை வேப்பேரியில் உள்ள 'ப்ரில்ல்யன்ட் கட்' கோல்டு அண்ட் டைமண்ட் ஜுவெல்லர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராகுல் சோவாத்தியா.

"ப்ரில்லியன்ட் கட்-இல் இவ்வாறான மொத்த வியாபாரத்துடன் சேர்த்து சில்லறையாகவும், பல ஆண்டுகளாக நகைகளை விற்பனை செய்துவருகிறோம். எங்களிடம் நகை விலை குறைவாகக் கிடைப்பதால் தரம் குறையுமோ என்ற சந்தேகத்துக்கு இடமில்லை. ஏனெனில், இங்கு விற்கப்படும் அனைத்து தங்க மற்றும் வைர நகைகளும் BIS ஹால்மார்க் ஆபரணங்களாகும். சர்வதேச தர நிர்ணய அமைப்புகளின் விதிப்படி வைர மற்றும் பிற இரத்தினக் கற்கள் பதித்த நகைகளையும் விற்பனை செய்கிறோம். வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்தும் அவர்களுக்கு ஏற்ற நகைகளைச் செய்து வாங்கிக்கொள்ளலாம்!"

"பொதுவாக பழைய நகைகளை மக்கள் விற்க நினைக்கும்போது, பல கடைக்காரர்கள் நாம் வாங்கிய விலையில் இருந்து, 15-20% வரை கணிசமான தொகையைப் பிடித்துக்கொண்டு மீதி பணத்தையே தருகின்றனர். ஆனால், பிரில்லியன்ட் கட்-இல் பழைய நகையை விற்று 100% அன்றைய தங்க விலையைப் பெற்றுக்கொள்ளலாம்!" - ராகுல் சோவாத்தியா (மொபைல் எண்: 98402 29990).

ப்ரில்லியன்ட் கட் விகடன் வாசகர்களுக்கு சிறப்பு சலுகை வழங்குகிறது. சலுகையைப் பெற கீழே உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்யவும்...

1). Name *

2). Contact *

3). State *