Published:Updated:

ஏட்ரியானா ஃபேர்வெல்.. சோஃபியின் கிஸ்.. கலர்ஃபுல் விக்டோரியாஸ் சீக்ரெட் ஃபேஷன் ஷோ!

இந்த வருட ஃபேஷன் ஷோவில் யார் முதல்முதலில் ரன்வேயில் தோன்றப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்துவிட்டார் 22 வயதான அமெரிக்க மாடல்..

ஏட்ரியானா ஃபேர்வெல்.. சோஃபியின் கிஸ்.. கலர்ஃபுல் விக்டோரியாஸ் சீக்ரெட் ஃபேஷன் ஷோ!
ஏட்ரியானா ஃபேர்வெல்.. சோஃபியின் கிஸ்.. கலர்ஃபுல் விக்டோரியாஸ் சீக்ரெட் ஃபேஷன் ஷோ!

லகின் மாபெரும் ஃபேஷன் ஷோவான 'விக்டோரியாஸ் சீக்ரெட்' ஃபேஷன் ஷோ, நியூயார்க் நகரில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. மாடலிங் துறையில் இருக்கும் ஒவ்வொருவரின் மிகப்பெரிய கனவு, நிச்சயம் ஒருமுறையாவது விக்டோரியாஸ் சீக்ரெட் மாடலாக தேர்வாக வேண்டும் என்பதுதான். அந்த வகையில் இந்த ஆண்டின் ஃபேஷன் ஷோ பல சுவாரஸ்ய நினைவலைகளை சுமந்துள்ளது. ஒட்டுமொத்த ஷோ டிசம்பர் 2-ம் தேதிதான் ஒளிபரப்பப்படும் என்றாலும், அவற்றில் சில லவ்லி பைட்ஸ் இங்கே..

இந்த வருட ஃபேஷன் ஷோவில் யார் முதல்முதலில் ரன்வேயில் தோன்றப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்துவிட்டார் 22 வயதான அமெரிக்க மாடல் 'டெய்லர் ஹில்'. இவர் கடந்த ஏழு ஆண்டுகளாக விக்டோரியாவின் தேவதையாக வலம்வந்துகொண்டிருப்பவர். 

இந்த வருட ஃபேஷன் ஷோவில் ஏராளமான 'முதல் தடங்கள்' பதிந்தன. விக்ட்டோரியா சீக்ரெட் ஃபேஷன் ஷோவிற்கென 'உடலமைப்பு' விதிமுறைகள் ஏராளம். ஆனால், உடல் மட்டும் அழகல்ல, தன்னம்பிக்கையும் அழகுதான் என்றபடி, 'விட்டிலைகோ' எனும் நீண்டகால சரும நோயால் பாதிக்கப்பட்ட 'வின்னி ஹார்லோ' தன் முதல் தடத்தை இந்த வருட ஃபேஷன் ஷோவில் பதித்துள்ளார். இதன்மூலம், தன்னம்பிக்கை இருந்தால் எதையும் எந்தத் துறையிலும் சாதிக்க முடியும் என்ற விதையை விதைத்திருக்கிறார் வின்னி. ஹாட்ஸாஃப் ஹார்லோ!

விக்ட்டோரியாவிற்காக பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மாடலான 'கெல்சி மெர்ரிட்', பூனைநடையிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவருக்கு ஏராளமான 'லைக்ஸ்' குவிந்துள்ளதாக கூடுதல் இன்ஃபோ. தொடர்ந்து சூப்பர்மாடல்களான ஜீஜி ஹாடிட், பெல்லா ஹாடிட், கெண்டல் ஜென்னர் உள்ளிட்டோர் விதவிதமான வண்ணங்கள் மற்றும் பேட்டர்ன்களிலான ஆடைகளை அணிந்து அசத்தினர்.

இந்த விழாவின் இன்னொரு ஹைலைட் ஹங்கேரியன் ஹாட் மாடல் பார்பரா பல்வினுக்காக அவரின் காதலன் டைலன் ஸ்பரவுஸ் கொடுத்த சர்ப்ரைஸ். விழா ஆரம்பிப்பதற்கு முன்பே அந்நாட்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பல்வின், தன்னுடைய காதலன் தனக்காக 'ஸ்நாக்ஸ்' கொண்டு வருவார் என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார். பதிலுக்கு டைலனிடம் தன் காதலி ரன்வேயில் நடக்கபோவதைப்பற்றி கேட்டதற்கு, "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவள் வரும்போது நான் அவள் பெயரை கத்தி கூறுவேன். என்னைப் பார்க்கச் சொல்லி நச்சரிப்பேன். அவளை மேடையிலேயே வெட்கப்பட வைப்பேன்" என்று கூறியுள்ளார். சரி அப்படி என்னதான் ஸ்நாக்ஸ் என்று கேட்டதற்கு, ஒரு பெரிய பை முழுக்க 'பர்கரை' காட்டினார்! அவர் சொன்னதுபோலவே பார்பராவை மேடையில் வெட்கப்படவும் வைத்துள்ளார்.

முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு 'பிரபலங்களின் ஸ்பெஷல் ஷோ' மேலும் எக்ஸ்ட்ரா ஸ்பெஷலானது. பிரபல அமெரிக்க பாடகி ஹால்ஸி, பேபி ரெக்ஸா, கெல்ஸ் பெல்லெரினி, ரீட்டா ஓரா, கனடியன் பாடலாசிரியர் மற்றும் பாடகருமான ஷான் மெண்டெஸ், அமெரிக்க DJ டுவோ 'தி செயின்ஸ்மோக்கர்ஸ்', ராக் பேண்ட் - 'தி ஸ்ட்ரட்ஸ்' உள்ளிட்ட மொத்தம் ஏழு பிரபலங்களின் என்டர்டெய்ன்மென்ட் நிகழ்ச்சிகள் இந்த வருடம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றன.

பிரபலங்களின் இசை நிகழ்ச்சி ஒருபக்கம் தெறிக்க, மாடல்களின் அணிவகுப்பு மறுபக்கம் விறுவிறுவென நடைபெற்றிருந்தது. ஷான் மெண்டெஸ் தன் ஹிட் பாடலான 'லாஸ்ட் இன் ஜப்பான்' பாடல் ஒலிக்கும்போது, பூனைநடையிட்ட மாடல் சோஃபி கிரேஸ், மெண்டெஸுக்கு 'பறக்கும் முத்தத்தை' பரிசாக வழங்கினார். அதை ஏற்றுக்கொண்ட ஷானின் கியூட் ரியாக்ஷனுக்கு கூடுதல் 'க்ளாப்ஸ்'.

கலகலவென நகர்ந்துகொண்டிருந்த இந்த விழாவில், மிகவும் எமோஷனல் டிராக்காக அமைந்தது 'சூப்பர்மாடல் ஏட்ரியானா லீமாவின்' ஃபேர்வெல் மொமென்ட். விக்டோரியாஸ் சீக்ரெட் வரலாற்றில் அதிகமுறை ரன்வேயில் ராம்ப் வாக்கிட்ட தேவதை, பிரேசிலைச் சேர்ந்த ஏட்ரியானா லீமா. 2018-ம் ஆண்டு ரன்வே இவருக்கு பதினெட்டாவது மட்டுமல்ல இறுதி ஷோவும்கூட. வெள்ளை நிற இறகுகள் அமைத்த உடையில் மெல்ல நடந்து வந்த லீமாவிற்காக, சிறப்பு காணொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. காணொளியின் இறுதியில், 'லீமாதான் மிகச் சிறந்த தேவதை' என்ற கேப்ஷனோடு நிறைவுபெற்றது. விழிகளில் நீரோடு, தன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு விடைபெற்றார் லீமா. குட்பை லீமா!