தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

மனசுக்குப் பிடிச்சதை மட்டும் செய்யணும்! - சஞ்சனா நடராஜன்

மனசுக்குப் பிடிச்சதை மட்டும் செய்யணும்! - சஞ்சனா நடராஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
மனசுக்குப் பிடிச்சதை மட்டும் செய்யணும்! - சஞ்சனா நடராஜன்

மாடல் மங்கைகள்

செல்லமாக சஞ்சு. அமேசான், ஸ்ரீகுமரன் சில்க்ஸ் விளம்பரங்களின் அழகு முகம். எம்.பி.ஏ பட்டதாரிக்கு இப்போது ஏறுமுகம். இருவரைப் பற்றி மினி லெக்சர் கொடுத்துவிட்டுத்தான் தன்னைப் பற்றிப் பேசுகிறார் சஞ்சனா. `அஸ் ஐயம் சஃபரிங் ஃப்ரம் காதல்' பொண்ணுக்கு இப்போது `2.0' காய்ச்சல்.

``ரஜினி சாருடைய கோடானுகோடி ரசிகர்களில் நானும் ஒருத்தி. அவர் படங்களை ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்கிற எனக்கு `2.0' படத்துல அவர்கூடவே ஸ்கிரீன் ஸ்பேஸ் ஷேர் பண்ணிக்கிற வாய்ப்பு அமைஞ்சதை இன்னும்கூட நம்ப முடியலை. சின்ன கேரக்டர்தான். ஆனாலும், அவர்கூடவே வருவேன். என்னைப் பத்தி நிறைய விசாரிச்சார்'' - ரஜினி ரசனையிலிருந்து மீளாதவர், விஜய் தேவரகொண்டா வியப்பிலிருந்தும் வெளியே வரவில்லை. `நோட்டா' படத்தின் மூலம் கோடம்பாக்கத்தில் வலதுகால் வைத்திருக்கிறார் சஞ்சனா.

மனசுக்குப் பிடிச்சதை மட்டும் செய்யணும்! - சஞ்சனா நடராஜன்

``விஜய் தேவரகொண்டா, ரொம்ப ஸ்மார்ட்; நிறைய படிக்கிறவர்; தன்னடக்கம் அதிகம். அவர் நடிக்கிறதைப் பார்க்கிறதே அவ்வளவு நல்லா இருக்கும்'' - கோலிவுட் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கக் காத்திருக்கிறார் சஞ்சனா.

``நான் சென்னைப் பொண்ணு. விஸ்காம் படிச்சிட்டிருந்தேன். படிப்பு சம்பந்தமா ஃபேஷன் இண்டஸ்ட்ரியையும் மீடியாவையும் சேர்ந்த மக்களை அடிக்கடி சந்திக்கவேண்டியிருந்தது. அதுதான் என்னை மாடலிங் ஃபீல்டுக்குள்ள இழுத்துட்டு வந்தது. இதைத் தாண்டி நான் பெருமையா சொல்லிக்க இன்னொரு விஷயம் இருக்கு. அது என் தமிழ். எனக்கு சூப்பரா தமிழ் எழுதவும் படிக்கவும் பேசவும் தெரியும். ராஜ் டிவி-யில `தமிழ் பேசும் கதாநாயகிகள்' ஷோவின் டைட்டில் வின்னர் நான். அதுதான் மீடியாவுல எனக்கான இடத்தை ஏற்படுத்தித் தந்தது. பட வாய்ப்புகள் வரவும், மாடலிங்ல நான் பிஸியாகவும் அதுதான் காரணம்.

மனசுக்குப் பிடிச்சதை மட்டும் செய்யணும்! - சஞ்சனா நடராஜன்


நடிக்கணும்கிற ஆசை இருந்ததில்லை. வாழ்க்கையில நாம எதிர்பார்க்கிற விஷயங்கள் நடக்கிறதுபோலவே எதிர் பார்க்காதவையும் நடக்குமில்லையா? நான் நடிகையானதும் அப்படித்தான்.

கோ-ஆப்டெக்ஸ் விளம்பரம் பண்ணினேன். அடுத்து `அஸ் ஐம் சஃபரிங் ஃப்ரம் காதல்' வெப் சீரிஸ், ஓவர்நைட்ல என்னைப் பிரபலமாக்கிடுச்சு. இப்போ படங்கள் வர ஆரம்பிச்சிருக்கு. அடுத்து என்னங்கிற தேடல் எதுவும் எனக்கில்லை. என் படங்கள்தான் என் எதிர்காலத்தை முடிவு பண்ணணும்'' - அமேசான் அழகிக்கு, பெருங்கனவுகளோ... பேராசைகளோ இல்லையாம்.

``மனசுக்குப் பிடிச்சதை மட்டும் செய்யணும். வாழ்க்கையை அதன் போக்குல வாழப் பழகணும். நாம யாரு, நம்முடைய லிமிட்ஸ் என்னங்கிற தெளிவு வேணும். லைஃப்ல ஜெயிச்சுடலாம் ஈஸியா'' - சஞ்சலமில்லாத வார்த்தைகளில் ஈர்க்கிறார் சஞ்சனா.

- ஆர்.வைதேகி