Published:Updated:

பழைய புடவை... புது டிரஸ்! - தீபா நடராஜன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பழைய புடவை... புது டிரஸ்! - தீபா நடராஜன்
பழைய புடவை... புது டிரஸ்! - தீபா நடராஜன்

வார்ட்ரோப்படங்கள் : சந்தோஷ் ரவி

பிரீமியம் ஸ்டோரி

“பெண்களுக்கு என்னதான் புதுப்புது உடைகளால் வார்ட்ரோப் நிறைந்தாலும், அம்மாவின் புடவை மேல எப்பவுமே ஒரு கண்ணுதான். குறிப்பா, அந்தக் காலத்துப் பட்டுப்புடவைகளின் அழகே தனி. ஆனால், ஒருகட்டத்துக்கு மேல் அதைக் கட்டமுடியாதபடி சில இடங்கள்ல நூல்கள் பிரிந்திருக்கும். அல்லது ஜரிகை மங்கியிருக்கும். அதற்காக சென்டிமென்ட் வேல்யூ உள்ள அந்தப் புடவையை வேண்டாம் என விடவும் முடியாதே. அதுபோன்ற புடவைகளுக்கு உயிர் கொடுக்கும், ‘சாரி டிரான்ஸ்ஃபர்மேஷன் கான்செப்ட்’. இதுக்கு இப்போ நல்ல வரவேற்பு இருக்கு” என்கிறார் சென்னை அசோக் நகரில் உள்ள ‘வஸ்த்ரா டிரஸ் யுவர் மூவ்ஸ்’ பொட்டீக்கின் உரிமையாளர் தீபா நடராஜன்.

பழைய புடவை... புது டிரஸ்! - தீபா நடராஜன்

‘`என் அம்மாவின் புடவை ஒண்ணு கண்ணை உறுத்த, எடுத்துக் கட்டலாம்னு பார்த்தா, பார்டர்ல கொஞ்சம் நூல் பிரிஞ்சிருந்தது. `சரி, இதுலேயே வேற ஏதாச்சும் டிரஸ் டிசைன் பண்ணலாம்’னு கூகுள்ல டிசைன்களைப் பார்த்து டெய்லர்கிட்ட கொடுத்து  ஓர் அனார்கலி சுடிதார் தைத்து வாங்கினேன். என் ஃப்ரெண்ட் கல்யாணத்துக்கு அதைப் போட்டுட்டுப் போக, ‘இதை எங்க வாங்கின?’னு எல்லோரும் ஆர்வமா கேட்டாங்க. எனக்கு டிரஸ் டிசைனிங்கில் ஆர்வம் வந்தது அப்போதான். பெங்களூருல பார்த்துட்டிருந்த ஹெச்.ஆர் வேலையை விட்டுட்டு, டிசைனிங் துறைக்குத் தேவையான விஷயங்களைக் கத்துக்கிட்டு, பொட்டீக் ஆரம்பிச்சுட்டேன். இப்போ நிறைய ஆர்டர்கள், பட்டுப்புடவை டிரான்ஸ்ஃபர்மேஷனுக்குதான் வருது.

பழைய புடவை... புது டிரஸ்! - தீபா நடராஜன்

பட்டுப்புடவை டிசைனிங்கில் ரெண்டு வகைகள் இருக்கு. ஒண்ணு, என்ன டிரஸ் வேண்டுமோ அந்த டிசைனில் தைப்பது. ரெண்டாவது, கிழிந்து ஜரிகை மங்கி, நூல் பிரிந்து என டேமேஜ் ஆகியிருக்கும் பகுதியை மட்டும் நீக்கிட்டு, புடவையின் கலருக்கு ஏற்ற மாதிரி டிஷ்யூ, ஆர்கன்ஸா, சாட்டின் போன்ற ஃபேன்ஸி மெட்டீரியலை இணைத்துப் புதுவிதமா டிசைன் செய்வது. கூடுதலா, சிம்பிளான ஆரி வேலைப்பாடும் செய்து போட்டுக்கிட்டா டிசைனர் டிரஸ் அளவுக்கு பளிச்சுன்னு தெரியும். இதில் அனார்கலி, பலாசோ, கிராப் டாப்,  ஸ்கர்ட், பட்டியாலானு எந்த டிரஸ்ஸையும் டிசைன் பண்ணலாம்.

பழைய புடவை... புது டிரஸ்! - தீபா நடராஜன்

புதுசா மெட்டீரியல் வாங்கி டிரஸ் டிசைன் பண்ணும்போது, நமக்குப் பிடித்த கலர், மெட்டீரியல், டிசைன்னு எல்லாமே சாத்தியம். ஆனா, ‘சாரி டிரான்ஃபர்மேஷனை’ப் பொறுத்தவரை கையில் இருக்கும் மெட்டீரியல், அதன் டிசைனுக்கு ஏத்தமாதிரி வொர்க் பண்ணணும். அதனால இதுக்குக் கூடுதல் க்ரியேட்டிவிட்டியும் ஸ்மார்ட்னஸ்ஸும் அவசியம்!’’ என்கிறார் தீபா.

- சு.கற்பகம்

மேக்கப் : ஆயிஷா அப்துல்
அக்சஸரீஸ் உதவி : தி கோல்டன்லீஃப்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு