Published:Updated:

ஃபேஷன் ஷோவில் கலக்கிய மாற்றுத்திறனாளிகள்! - மகிழ்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஷாலினி

ஃபேஷன் ஷோவில் கலக்கிய மாற்றுத்திறனாளிகள்! - மகிழ்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஷாலினி
ஃபேஷன் ஷோவில் கலக்கிய மாற்றுத்திறனாளிகள்! - மகிழ்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஷாலினி

மீபத்தில், கின்னஸ் ரெக்கார்ட் படைப்பதற்கான ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி,  230 மாடல்களுடன்  சென்னை மகாபலிபுரத்தில் நடந்தது. இதில் 11 மாற்றுத்திறனாளி மாடல்கள், டிரெண்டியான ஆடைகள் அணிந்து ரேம்ப் வாக் செய்த நிகழ்ச்சி, ஃபேஷன் துறையில் இருக்கும் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. இது தொடர்பாக மாற்றுத்திறனாளி  மாடல்களுக்கு ஆடைகள் வடிவமைத்த ஆடை வடிவமைப்பாளரான ஷாலினியிடம் பேசினோம்.

"கின்னஸ் ரெக்கார்டுக்கான ஃபேஷன் ஷோவுக்காக, இந்தியா முழுவதும் உள்ள ஆடை வடிவமைப்பாளர்களை அணுகினர் . ஆண், பெண் , திருநங்கைகள் என மொத்தம் 230 மாடல்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளையும் ரேம்ப் வாக்கில் ஈடுபடுத்தலாம் என்ற என்னுடைய கருத்துக்கு, மற்ற டிசைனர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே ஆறு பெண்கள், ஐந்து ஆண்கள் என மொத்தம் 11 மாற்றுத்திறனாளி மாடல்களுக்கு நான் ஆடை வடிவமைத்தேன். அதில் ரெடிமேட் புடவை, டோத்தி புடவை, இண்டோ வெஸ்டர்ன் ஆடைகள் என புது விதமாக நான் வடிவமைத்த ஆடைகளுக்கு எனக்கு பாராட்டுகள்  குவிந்தன.

 நார்மல் மாடல்களுக்கு ஆடைகள் வடிவமைக்கும்போது, ட்ரெண்டுக்கு ஏற்ப வடிவமைத்தால் போதுமானது. ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கான ஃபேஷன் ஆடையில் அவர்களுக்கான வசதி முக்கியம். வசதியுடன் ட்ரெண்டியான ஆடைகளையும் வடிவமைப்பதற்காக இரண்டு மாதம் உழைத்தேன். மேலும், அவர்களுக்கு ரேம்ப் வாக்கிற்கான பயிற்சி, ஆட்டிடியூட் பயிற்சி என நிகழ்ச்சி அன்று தன்னம்பிக்கையுடன் செயல்பட, முன்னரே பயிற்சிகள் வழங்கினேன். ஆரம்பத்தில் தன்னம்பிக்கையே இல்லாமல் இருந்த என்னுடைய மாடல்கள், ரேம்ப் வாக் செய்த தருணத்தில் கிடைத்த கைதட்டல்களே  அவர்களை அதிக தன்னம்பிக்கையுடன் செயல்பட வைத்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதை அவர்களுக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்த்தார்கள் மாற்றுத்திறனாளிகள். இது எனக்கு இன்னும் அதிக ஊக்கத்தை அளித்துள்ளது. அடுத்தடுத்த புது முயற்சிகளில் மாற்றுத்திறனாளி நண்பர்களுடன் கை கோத்துச்  செயல்பட உள்ளேன்'' என்கிறார் மகிழ்ச்சியாக.