Published:Updated:

இது உலக ஷாப்பிங் கொண்டாட்டம்!

இது உலக ஷாப்பிங் கொண்டாட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
இது உலக ஷாப்பிங் கொண்டாட்டம்!

துபாயிலிருந்து சுமிதா ரமேஷ்சுற்றுலா

இது உலக ஷாப்பிங் கொண்டாட்டம்!

துபாயிலிருந்து சுமிதா ரமேஷ்சுற்றுலா

Published:Updated:
இது உலக ஷாப்பிங் கொண்டாட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
இது உலக ஷாப்பிங் கொண்டாட்டம்!

டிவேலு சொன்ன `குறுக்குச்சந்தா... விவேகானந்தர் ரோடா...' என்பதெல்லாம் தாண்டி, வெறும் பாலைவனம் + உழைப்பு + திட்டமிடல் + பின்புலமாக உள்ள ஆயிலால் ‘ஆயுள்’ வளர்த்து, கம்பீரமாக நிற்கிறது துபாய். ஐக்கிய அரபு நாடுகள் (United Arab Emirates) என்கிற ஒருங்கிணைக்கப்பட்ட எமிரேட்டுகளின் வர்த்தக நகரம் துபாய். விண்ணைமுட்டும் கட்டடங்கள்,  உலகின் ஆகச் சிறந்த சிறப்பம்சங்கள், நள்ளிரவு சுதந்திரம் என அத்தனைக்கும் ஆசைப்படலாம்...  அனுபவிக்கலாம் துபாயில்!

அக்டோபரில் ஆரம்பிக்கும் லேசான  குளிர், டிசம்பரில் அதிகமாகி ஜனவரியில் குளிர்ந்து, மெள்ள மார்ச்சில் தன்னை விடுவித்துக்கொள்கிறது நகரம்.

மாலையில் கவிழும் பனியில் சாலையோரங் களில் மின்னும் குட்டி குட்டி விளக்குகள்; ஒவ்வொரு வருடமும் விளக்கொளியில் புதுப்புது உருவங்கள். அவற்றில் தேசிய விலங்கான ஒட்டகமும், பறவையான கழுகும் தவறாமல் இடம்பெறுபவை.

இது உலக ஷாப்பிங் கொண்டாட்டம்!

ஒவ்வொரு வருடமும் டிசம்பரில் ஆரம்பிக்கிற `துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல்' (DSF) ஒரு மாதம் தொடர்ந்து ஜனவரியில் முடிவுபெறுகிறது. இந்த ஒரு மாதத்தில் சொர்க்கத்தை ரசிக்கலாம் துபாயில். அப்படி என்னதான் ஸ்பெஷல் இந்த ஃபெஸ்டிவலில்?

உலகிலேயே மிகப்பெரிய ஷாப்பிங் மால் இருப்பது துபாயில்தான். உலகின் அத்தனை முக்கிய பிராண்டுகளும் முதலில் இங்குதான் தங்கள் பொருள்களைச் சந்தைப்படுத்த விரும்புகின்றன. வெளிப்படையான அரேபிய  மார்க்கெட் என்பதும் இந்த ‘ஷாப்பிங் ஃபெஸ்டிவல்’ பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கிறது.

1996 ஜனவரி 16 அன்று முதலில் துபாய் அரசால் ஒரு சில்லறை வணிகமாக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த விழா. அதுவே எதிர்பாராவிதமாக மூன்று கோடி சுற்றுலாப் பயணிகளை ஈர்த்ததால், இன்று உலகின் கவனத்துக்குரிய மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக மாறியிருக்கிறது துபாய். இந்த நாள்களில் தினமும் 90% தள்ளுபடி தரும் வியாபார நிறுவனங்கள் உண்டு. தினமும் கார்களை  குலுக்கல் (Raffles) முறையில் அள்ளித்தரும் நிறுவனங்களும் உண்டு.
இன்று உலகத் திருவிழாவாகவே உருப்பெற்று விட்ட இதில் அரசு என்னவெல்லாம் செய்கிறது?

திரைப்பட விழாக்களை நடத்துகிறது, இளைஞர்களுக்கான சிறப்புப் போட்டிகள், வீதி நாடகங்கள், உலகக் கலைஞர்களை வரவழைத்து அவர்களுக்கான மேடை அமைத்து மக்களை ரசிக்க வைக்கிறது. இவற்றோடு, இரவானால் குளிரை ரசித்தபடி வானில் வண்ணமயமாகப் பறந்து செல்லும் வாண வேடிக்கைகளை ரசிக்கலாம். இன்டர்நேஷனல் ஃபேஷன் ஷோ, அரேபிய கலாசாரம், உலகளாவிய பொழுதுபோக்கு அம்சங்களுக்கான களம் அமைத்துத் தருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது உலக ஷாப்பிங் கொண்டாட்டம்!

`குளோபல் வில்லேஜ்' என்கிற இடத்தில் பல நாட்டுப் பொருள்களை அவர்கள் மண்வாசத்துடன், கலாசார நெடியுடன் அவர்கள் கலையுடன் ஸ்டால் அமைக்க வழி செய்திருக்கிறார்கள். இப்படி ஓர் உலகம் ஒரே குடையின்கீழ் அமைய ஆரம்பித்தது இந்த DSF-ல்தான்!

இந்த ஆண்டு டிசம்பர் 28 முதல் ஜனவரி 26 வரை DSF நடைபெறுகிறது. இந்த நாள்களில் தினமும் ஒரு புது டிசைனில் ஜொலிக்கவிருக்கும் துபாயை ஜாலியாகச் சுற்றிப்பார்க்கலாம். ஷாப்பிங் பிரியர்களின் சொர்க்கம் என்பதால், தங்கத்தில் ஆரம்பித்து எலெக்ட்ரானிக் பொருள்கள் வரை மலிவாக வாங்கலாம். உலகின் மிகச்சிறந்த கலைஞர்களின் திறமைகளை ஒரே இடத்தில் கைதட்டி ரசிக்கலாம். உலகின் ஒவ்வொரு பகுதியின் சிறப்புகளையும் ஒட்டிவைத்த  அருமையான கொலாஜை துபாயில் பார்க்கலாம். இவை அத்தனையையும் இந்த ஷாப்பிங் ஃபெஸ்டிவல் சாத்தியமாக்கித் தருகிறது.

ஆண்டுக்கு ஆண்டு அதிகப்படியாகும் சுற்றுலா பயணிகளுடன் வெற்றிகரமான இந்த ஷாப்பிங் ஃபெஸ்டிவலுக்காக விசா, 320  துபாய் திராம்ஸ் (89 அமெரிக்க டாலர்கள்) கட்டணத்தில் மூன்று நாள்களில் பெறலாம். 7 நாள்கள், 14 நாள்கள், 30 நாள்கள் என  இந்தியாவிலிருந்தே எளிதாக விசா பெற்று  துபாய் ஷாப்பிங் உலகுக்குள் நுழையலாம்.’

ஹேப்பி நியூ இயர்... ஹேப்பி ஷாப்பிங்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism