Published:Updated:

வார்ட்ரோப் ரசனை ஆளுமையை மேம்படுத்தும்! - கௌரி சாஹா

வார்ட்ரோப் ரசனை ஆளுமையை மேம்படுத்தும்! - கௌரி சாஹா
பிரீமியம் ஸ்டோரி
வார்ட்ரோப் ரசனை ஆளுமையை மேம்படுத்தும்! - கௌரி சாஹா

ஓர் ஐடியா உங்களை மாற்றிடுமே!

வார்ட்ரோப் ரசனை ஆளுமையை மேம்படுத்தும்! - கௌரி சாஹா

ஓர் ஐடியா உங்களை மாற்றிடுமே!

Published:Updated:
வார்ட்ரோப் ரசனை ஆளுமையை மேம்படுத்தும்! - கௌரி சாஹா
பிரீமியம் ஸ்டோரி
வார்ட்ரோப் ரசனை ஆளுமையை மேம்படுத்தும்! - கௌரி சாஹா

“என் புடவை பிராண்டு விளம்பரத்துக்கு மாடல்களைப் பயன்படுத்துவதில்லை. என் வாடிக்கையாளர்கள் என்னிடம் வாங்கிய புடவைகளை உடுத்திய புகைப்படங்களையே என் விளம்பரமாகப் பயன்படுத்துகிறேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது’’ என்கிறார் கௌரி சாஹா. ‘Naksh’ என்ற பெயரில் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களைத் தொடங்கி, இமயம் முதல் குமரி வரை உள்ள பாரம்பர்யப் புடவை ரகங்களில் தன் கற்பனை வளத்தைக் கலந்து, முற்றிலும் வித்தியாசமான டிசைன்களை உருவாக்கி, பல பெண்களையும் வசீகரித்திருப்பவர். மும்பையில் வசிக்கும் கௌரியிடம் பேசினோம்.

‘`கொல்கத்தாவில் கல்லூரிப் படிப்பை முடித்த பின், மும்பை ஐஐடி-யில் மேற்படிப்புக்காகச் சேர்ந்தேன். இது என் வாழ்வில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த பல மாணவர்கள் எனக்கு நண்பர்களானார்கள். அவர்களிடமிருந்து பல மாநிலக் கலாசாரங் களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. என்னுள் புதைந்துகிடந்த புகைப்படம் எடுக்கும் ஆர்வம் மற்றும் ஓவியம் தீட்டும் எண்ணத்துக்கும் செயல் வடிவம் கொடுக்க முடிந்தது.

வார்ட்ரோப் ரசனை ஆளுமையை மேம்படுத்தும்! - கௌரி சாஹா

பிஹெச்.டி படித்தபோது டெக்ஸ்டைல் மற்றும் கார்மென்ட் டிசைன் இரண்டையும் தேர்ந்த கலைஞர்களிடம் முறைப்படி கற்றேன். 2016-ம் ஆண்டு, ‘நான் புடவை டிசைனராக விரும்புகிறேன்’ என்று என் குடும்பத்தில் சொன்னேன். அதை உடனடியாகச் செயல்படுத்தும்படி என் அண்ணன் சொன்னதுடன், அதற்காக ‘Naksh’ என்ற பெயரில் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களைத் தொடங்கி, ஆர்டர்களைப் பெற்று விற்பனை செய்யலாம் என யோசனைகளையும் சொன்னார். அன்றிலிருந்து இன்றுவரை என் தொழிலில் எல்லா நிர்வாக வேலைகளையும் என் அண்ணன் கவனித்துக்கொள்கிறார். நான் துணிகளின் தரம், நேர்த்தி, நவீன, லேட்டஸ்ட் டிசைன்களில் கவனம் செலுத்துகிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வார்ட்ரோப் ரசனை ஆளுமையை மேம்படுத்தும்! - கௌரி சாஹா

கிரியேட்டிவிட்டி என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாகக்கொண்டது என் வியாபாரம். ஒருவரின் வார்ட்ரோப் ரசனை, அவரின் ஆளுமையை மேம்படுத்தும். அழகுக்கு மட்டுமல்ல, கம்பீரத்துக்கும் புடவையைப் போன்றதோர் உடை இல்லை. எனவே, இன்றைய தலைமுறைப் பெண்களுக்குப் பிடிக்கும் வகையிலான புடவை டிசைன்களை உருவாக்கி, ஸ்பெஷல் நாள்களுக்கு மட்டுமே என்றில்லாமல், அவர்களை தினசரிப் பயன்பாட்டுக்கும் இயல்பாகப் புடவை அணியவைப்பதே என் நோக்கம்.

வார்ட்ரோப் ரசனை ஆளுமையை மேம்படுத்தும்! - கௌரி சாஹா

என்னிடம் புடவை வாங்கும் வாடிக்கை யாளர்களே என் மாடல்கள். அவர்களை என் பிராண்டு புடவைகளை உடுத்தி, புகைப்படம் எடுத்து, என் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிடுகிறேன். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

வார்ட்ரோப் ரசனை ஆளுமையை மேம்படுத்தும்! - கௌரி சாஹா

ஒவ்வொரு நாளும் இதில் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிவதுடன், பலருக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தர முடிவது நிறைவைத் தருகிறது. இந்தியாவின் பல நகரங்களில் புடவைக் கண்காட்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளேன். நெசவாளர்கள், பிளாக் ஆர்டிஸ்ட், தையல் கலைஞர்கள், எம்ப்ராய்டரி வேலை மற்றும் சாயம் தீட்டும் பணியாளர்கள் உள்ளடக்கிய குழுவை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஏற்படுத்தி, வாடிக்கையாளர்கள் விரும்பும் டிசைனில் அவர்கள் கண்ணெதிரில் புடவை தயாரித்துக்கொடுக்கும் ஷோரூம்களை நிறுவ முயன்றுவருகிறேன்’’ என்று தன் புதுமையான ஐடியாவைச் சொல்கிறார் கௌரி சாஹா.

- ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism