பொதுவாக நகைகளை வாங்க கல்யாணம், காதுகுத்து, நிச்சயதார்த்தம் என்று ஒரு பெஸ்டிவல் மூடிலேயே நகைக்கடைக்குப் போவோம். அந்த நேரத்தில், வாங்குவது தரமான நகைதானா என்பதற்கான உத்தரவாதக் குறியீடுகளை செக் செய்ய மாட்டோம். கூடவே வாங்கிய நகைகளைப் பராமரிக்கும் முறைகளையும் கேட்க மறந்துவிடுவோம். வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம், முத்து மற்றும் கல்வைத்த நகைகளின் பராமரிப்பு பற்றியும் அதன் தரத்தை எப்படி செக் செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் சொல்லும் இந்தக் கட்டுரை உங்களுக்காக.

தங்கம்... பராமரிப்பு மற்றும் தரம்!

தங்க நகைகளை வைக்கும் வெல்வெட் பெட்டிகளில் இருக்கிற பசையில் மயில்துத்தம் போன்ற கெமிக்கல் இருப்பதால், அது தங்கத்துடன் ஏதாவது வேதிவினை புரியலாம். அதனால் இப்போது நகைக்கடைகளிலேயே பிளாஸ்டிக் நகைப்பெட்டியில் காட்டன் துணிக்குள்தான் நகைகளை வைத்துத் தருகிறார்கள். அதையே பின்பற்றலாம்.

நகைகளை ஆர்.ஓ வாட்டரில்தான் சுத்தம் செய்ய வேண்டும். குளோரின் கலந்த தண்ணீரிலும் உப்புத்தன்மை அதிகமாக இருக்கும் தண்ணீரிலும் சுத்தம் செய்யவே கூடாது. அதேபோல், சோப் வாட்டரில் நகைகளை ஊறவைத்தும் சுத்தமாக்கக் கூடாது.

தங்க நகைகளைப் பொறுத்தவரை, அதைச் செய்த ஆசாரியின் எண் அல்லது அவர் பெயரின் முதல் எழுத்து அல்லது அவருடைய அடையாளம்... அது தரமானது என்று சர்ட்டிபிகேட் தந்த நிறுவனத்தின் முதல் எழுத்து அல்லது சர்ட்டிபிகேட் செய்தவரின் லைசென்ஸ் குறியீட்டு எண் அல்லது அடையாளம்... அதை விற்பனை செய்பவருடைய நிறுவனத்தின் பெயர் ஆகியவை இருக்கும்; இருக்க வேண்டும். இந்த மூன்றும் இருந்தால்தான், நீங்கள் வாங்குகிற தங்க நகை தரமானது.

வெள்ளி... பராமரிப்பு மற்றும் தரம்!

வெள்ளி நகைகளை வெதுவெதுப்பான சோப்புத் தண்ணீரில் ஊறவைத்து, சுத்தம் செய்து, பிறகு காட்டன் துணியால் துடைக்கலாம். வெள்ளி நகைகளை காட்டன் துணியில் சுற்றி, பிளாஸ்டிக் பாக்ஸில் வையுங்கள். வெள்ளிக்கும் நோ வெல்வெட் பாக்ஸ்.

கல், மண் இல்லாத சுத்தமான விபூதியால்தான் வெள்ளிப் பொருள்களைச் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமில்லாத விபூதி வெள்ளிப் பொருள்களின் மேல் கீறல்களை ஏற்படுத்திவிடும்.

வெள்ளி நகைகளை இரும்பு பீரோவில் வைத்தால் சீக்கிரம் கறுத்துவிடும். ஆனால், இன்றைக்குப் பெரும்பாலானவர்களின் வீடுகளில் இரும்பு பீரோதான் இருக்கிறது என்பதால், காட்டன் துணியில் சுற்றி, மரப்பெட்டியில் வைத்து, இரும்பு பீரோவில் வைத்துவிடலாம்.

தரமான வெள்ளிக்கு ஹால்மார்க் முத்திரையைப் பார்த்து வாங்குங்கள்.

வைரம்... பராமரிப்பு மற்றும் தரம்!

வைரத்தையும் பிளாஸ்டிக் பாக்ஸில்தான் வைக்க வேண்டும். வெல்வெட் பாக்ஸில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால், பூஞ்சை வந்து வைரத்தின் நிறமே மாறலாம். அப்படி நிறம் மாறினால் வைரத்தின் தரமே குறைந்துவிடலாம்... கவனம்.

வைரத்தில் ஓப்பனிங் செட், குளோஸிங் செட் என இரண்டு வகைகள் இருக்கின்றன. ஓப்பனிங் செட்டில் வைரக்கல்லுக்குப் பின்னால் முழுதாக மூடப்பட்டிருக்காது. இதனால், சீக்கிரம் அழுக்காகி விடும். மூக்குத்தி, கம்மல் என இந்த வகை வைர நகைகளை வீட்டில் எப்போதும் அணிந்திருப்பவர்கள், அவற்றை வாரம் ஒருமுறை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து, டூத் பிரஷ்ஷால் சுத்தம் செய்துவிடுங்கள். குளோசிங் செட் என்றால், நகையின் பின்னால் முழுமையாக மூடப்பட்டிருக்கும். இந்த வகை நகைகளில் 5 முதல் 10 வருடங்களுக்குள் எண்ணெய் இறங்கிவிடும். அப்போது, நகையில் இருக்கிற வைரங்களை எடுத்துவிட்டு, வேறு நகையில் பதித்துத் தருவார்கள் (கல்வைத்த நகைகளையும் இந்த முறையில்தான் பராமரிக்க வேண்டும்).

வைரம் தூய்மையான வெள்ளை நிறத்தில் இருந்தால் அது முதல் தர வைரம். இளமஞ்சள் நிறத்தில் இருந்தால் இரண்டாம் தர வைரம்.

வைரத்தை தோஷம் பார்த்து வாங்க வேண்டும் என்பார்கள். அப்படியென்றால் என்ன தெரியுமா? வைரத்தில் வெற்றுக் கண்களுக்கு தெரியாத அளவுக்கு மிக மிகச் சிறிய கார்பன் துணுக்குகள் இருக்கும். இதைத்தான் தோஷம் என்பார்கள். தோஷமற்ற வைரம் வாங்க வேண்டுமென்றால் V V S1, V V S2 வைர நகைகள் வேண்டும் எனக் கேட்டு வாங்குங்கள்.

பிளாட்டினம் - பராமரிப்பு மற்றும் தரம்!

தங்கத்துக்கு 916 (91.6%) எப்படியோ, அப்படியே பிளாட்டினத்துக்கு 950 (95%). மீதம் 5 சதவிகிதத்துக்கு கோபால்ட் பெலினியம் சேர்ப்பார்கள்.

பிளாட்டின நகைகளை தங்கத்துடன் சேர்த்து அணிந்தால் கீறல் விழும்.

பிளாட்டின நகைகள் வாங்கும்போது தரப்படும் தரச் சான்றிதழில், நீங்கள் வாங்கிய நகையின் அடையாள எண் ஒன்று இருக்கும். அதே எண் நீங்கள் வாங்கிய நகையிலும் இருக்கும். உதாரணத்துக்கு, நீங்கள் வாங்கிய பிளாட்டினம் நகையின் எண் 515 என்று வைத்துக்கொள்வோம். இதே எண்ணில் வேறு பிளாட்டின நகையே கிடைக்காது.

முத்து... பராமரிப்பு மற்றும் தரம்!

முத்தை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யக் கூடாது. தோலுரிந்துவிடும். முத்துக்குக் குளிர்ந்த நீர்தான் சரி. மற்றபடி, மற்ற நகைகளைப் போலவே நோ வெல்வெட் பாக்ஸ்.

ஒரு காரட் 450 ரூபாயிலிருந்து 60,000 ரூபாய் வரைக்கும் முத்துகள் கிடைக்கின்றன. விலை குறைவான முத்துகள் அளவில் சிறியதாகவும், ஒரே வடிவத்திலும் இருக்கும். விலை அதிகமான முத்துகள் அளவில் பெரியதாகவும், விதவிதமான வடிவங்களிலும் இருக்கும்.

- ஆ.சாந்தி கணேஷ்