பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

பரிந்துரை... இந்த வாரம்... ஃபேஷன்

பரிந்துரை... இந்த வாரம்... ஃபேஷன்
பிரீமியம் ஸ்டோரி
News
பரிந்துரை... இந்த வாரம்... ஃபேஷன்

பரிந்துரை... இந்த வாரம்... ஃபேஷன்

‘ஆனந்த விகடன்’ வாசகர்களுக்காக வாரந்தோறும் ஒவ்வொரு விஷயத்தைப் பரிந்துரைக்கிறார்கள் பிரபலங்கள்.  இந்த வாரம் ஃபேஷன் குறித்துச் சொல்பவர், ஆடை வடிவமைப்பாளர் சுபஸ்ரீ கார்த்திக்விஜய்.

பரிந்துரை... இந்த வாரம்... ஃபேஷன்

த்தனை ஆடைகள் வாங்கினாலும், புதுமையைத்தான் என்றைக்குமே மனம் விரும்பும். அவை புதிய ஆடைகளாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பட்ஜெட்டுக்குள் புதிய ஆடைகளை வாங்குவதைவிட, நம்மிடம் இருக்கும் ஆடைகளையே வித்தியாசமாக உடுத்தினால், புதுமையான தோற்றத்தை எளிதில் பெறலாம். பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, ஷாப்பிங் பிரியர்கள் நிச்சயம் ஏராளமான ஆடைகளை வாங்கி அலமாரி முழுவதும் குவித்து வைத்திருப்பார்கள். உபயோகப்படுத்தாத நல்ல உடைகளை மீண்டும் புதுப்பித்து அணிய சில வழிமுறைகள் உள்ளன.

பிறந்தநாள் விழாவோ, கோயில் திருவிழாவோ... உடைகளில் பாரம்பர்யத்தையும் புதுமையையும் இணைக்க விரும்புபவர்களின் சரியான தேர்வு, நம் அம்மாவின் பழைய புடவைகள்தாம்.
அவற்றை இந்தக் காலத்து டிரெண்டிற்கு ஏற்றதுபோல வடிவமைத்து அணிவதனால், குறைந்த செலவில் டிரெண்டி தோற்றத்தைப்  பெறலாம்.

இரண்டு வெவ்வேறு பழைய புடவைகளை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு புடவையில்,  முழுநீளக்கை, வித்தியாசக் கழுத்து பேட்டர்னுடன் மேல்சட்டை அல்லது பிளவுஸ் தைத்து அதை மற்றொரு புடவையுடன் இணைத்து அணிந்தால் ‘இண்டோ-வெஸ்டர்ன்’ (Indo Western) தோற்றம் ரெடி. அல்லது வீட்டில் இருக்கும் வெள்ளை அல்லது கறுப்புச் சட்டையுடன், பழைய புடவையை இணைத்து அணியலாம். எப்போதும் உடுத்தும் முறையில்லாமல், அணியும் ஸ்டைலில் சிறிதளவு மாற்றத்தைக் கொண்டு வந்தாலே தோற்றம் மாறுபடும். காஞ்சிபுரம் புடவையைவிட பனாரஸ் புடவை வகை என்றால் நல்ல ரிச்லுக் கொடுக்கும்.இதற்காகப் புதிதாக எதையும் வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை.

பரிந்துரை... இந்த வாரம்... ஃபேஷன்

சென்னை பாரிமுனை மற்றும் எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள சிறிய மொத்த வியாபாரக் கடைகளில் விற்கும் அதிக வேலைப்பாடுகள் கொண்ட துணிகளை ‘மீட்டரில்’ வாங்கி, அவற்றைப் புடவையாய் மாற்றி உபயோகப்படுத்தலாம். ‘ரெடிமேடு’ வியாபாரம் வந்ததும், டெய்லர் கடைகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஆனால், டெய்லர் கடைகளில் கொடுத்துத் தைப்பது நிச்சயம் ரெடிமேடு வாங்குவதற்கு ஆகும் செலவைவிடக் குறைவுதான்.

புதுமையான டிசைன், டிரெண்டி துணிவகை எது என்பதை அறிந்து, அவற்றை மீட்டர் கணக்கில் வாங்கி, டெய்லரிடம் கொடுத்துத் தைத்துக்கொள்ளலாம். பிராண்டட் கடைகளைவிடவும், சிறிய கடைகளில் டிசைன் முதல் சாய்ஸ் வரை ஏராளமாக இருக்கின்றன. குறைந்த செலவில் அழகான ஆடைகளை இதுபோன்ற சிறிய கடைகளிலிருந்தும் வாங்கலாம்.

ஆண்கள் இப்பொழுதெல்லாம் வெவ்வேறு வண்ணங்களில் வேட்டி உடுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் கேஷுவல் சட்டையுடன் பிரின்டட் துணிவகையில் ‘லுங்கி’ வடிவமைத்து அணியலாம். இது முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தைக் கொடுக்கும். டிரெண்டி தோற்றம் பெறுவதற்கு அவர்கள் அணியும் ஷார்ட்ஸ், காலணி போன்றவற்றில் சிறிதளவு மாற்றம் செய்தாலே போதும். செம ஸ்டைல் லுக் கிடைக்கும்!

- கானப்ரியா