Published:Updated:

பேர்ஃபூட் சாண்டல்ஸ் – ஃபேஷன் டிரெண்டின் லேட்டஸ்ட் ஈர்ப்பு!

பேர்ஃபூட் சாண்டல்ஸ் – ஃபேஷன் டிரெண்டின் லேட்டஸ்ட் ஈர்ப்பு!
பேர்ஃபூட் சாண்டல்ஸ் – ஃபேஷன் டிரெண்டின் லேட்டஸ்ட் ஈர்ப்பு!

ஃபேஷன் டிரெண்டின் லேட்டஸ்ட் ஈர்ப்பு `பேர்ஃபூட் சாண்டல்ஸ்’ என்றழைக்கப்படும் வெறுங்கால் செருப்புகளான இவை பீச் டெஸ்டினேஷன் திருமணங்களில், சிறந்த பிரைடல் ஆக்ஸசரி.

`வெறுங்கால் செருப்புகள்’ - இந்த வார்த்தைகளைக் கேட்க வித்தியாசமாக இருக்கிறதா? ஃபேஷன் டிரெண்டின் லேட்டஸ்ட் ஈர்ப்பு, `பேர்ஃபூட் சாண்டல்ஸ்’ என்று அழைக்கப்படும் வெறுங்கால் செருப்புகள்தான். மேற்கத்திய நாடுகளில் பிரபலமடைந்துவிட்ட இவை, இப்போது இந்தியாவுக்குள் அடியெடுத்து வைத்திருக்கின்றன. கால்களில் அணிந்துகொள்ளும் ஆக்சஸரிஸில் இவை கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதால், இளம்பெண்கள் இதை அணிந்துகொள்வதற்கு ஆர்வம் காட்டிவருகிறார்கள். அல்ட்ரா மாடர்ன் மற்றும் கலர்ஃபுல் பீச் உடைகளோடு இந்த சாண்டல்ஸை அணியும்போது, அழகையும் பர்சனாலிட்டியையும் வேறு லெவலுக்குக் கொண்டு செல்ல முடியும் என்பதுதான் இதிலிருக்கும் ஹைலைட். 

பேர்ஃபூட் சாண்டல்ஸ் – ஃபேஷன் டிரெண்டின் லேட்டஸ்ட் ஈர்ப்பு!

ஆடைகளின் நிறத்துக்கு மேட்சிங்காக, அழகிய மணிகளுடன்கூடிய இவற்றை அணிந்துகொண்டு கடற்கரையில் நடக்கும்போது, விசேஷமான உணர்வைப் பெறுவது நிச்சயம். வெள்ளி, விதவிதமான மணிகள், அழகான கயிறுகள், ரிப்பன், சணல் போன்ற பல மூலப்பொருள்களைக்கொண்டு வித்தியாசமான வடிவங்களில் இந்தச் சாண்டல்கள் தயாரிக்கப்படுகின்றன. ஓவியம் போன்ற கலைநயமிக்க வேலைப்பாடுகள்கொண்டு டிசைன் செய்யப்படுவதால், இவை ரம்மியமான தோற்றத்தை கால்களுக்கு அளிக்கின்றன. இரண்டு அடுக்குகளில் தொடங்கி, பல அடுக்குகள் வரை பேர்ஃபூட் சாண்டல் டிசைன்கள் உருவாக்கப்படுகின்றன. வெறும் கால்களிலும், வழக்கமான சாதாரண செருப்புகளை அணிந்துகொண்டும் இந்த பேர்ஃபூட் சாண்டல்களை அணிந்துகொள்ள முடியும். இவை பாதத்தின் மேற்பகுதிகளைக் கவர் செய்வதால், பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கும். 

பீச் டெஸ்டினேஷன் திருமணங்களில், சிறந்த பிரைடல் ஆக்ஸசரியாக பேர்ஃபூட் சாண்டல் இடம்பிடித்திருக்கிறது. மணமகளின் ஆடைக்கு ஏற்ற வகையில், அற்புதமான ஸ்டைல்களில் இவை வடிவமைக்கப்படுகின்றன. இந்தக் காலணிகளை அணிந்துகொண்டால், மணமகள் கூடுதல் அழகைப் பெறுவது நிச்சயம். திருமண நிகழ்வுகளில் மட்டுமல்லாமல், சம்மர் வெக்கேஷன்களில் அணிவதற்கும் இந்த வகை காலணிகளை ஃபேஷன் டிசைனர்கள் பரிந்துரைக்கிறார்கள். 

பேர்ஃபூட் சாண்டல்ஸ் – ஃபேஷன் டிரெண்டின் லேட்டஸ்ட் ஈர்ப்பு!

இன்றைய திருமண நிகழ்வுகளில், இன்ஷோல் மெஹெந்தி போட்டுக்கொள்வது பிரபலமாகியிருக்கிறது. போட்டோ ஷூட் செய்வதற்காகவே பாதங்களின் கீழ்ப்பகுதியில் மெஹெந்தி அணிந்துகொள்வார்கள். அந்த இடத்தை இப்போது பேர்ஃபூட் சாண்டல்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன. கேண்டிட் போட்டோகிராபி, போஸ்ட் வெட்டிங் போட்டோகிராபி எனத் தனித்தனியாக எடுப்பதுபோல, பேர்ஃபூட் சாண்டல்களை அணிந்த பிறகு, அதிலிருக்கும் அழகியலைப் பதிவுசெய்ய பிரத்யேகமாக போட்டோ ஷூட் எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. 

மணமகளின் திருமண ஆடைகளுக்கு ஏற்ற மாதிரி, இதை வடிவமைத்துக்கொள்ள முடியும் என்பதால், பேஷன் டிசைனர்கள், சிறந்த ரசனையுடன் இவற்றை டிசைன் செய்கிறார்கள். இதில் பழைமையுடன் புதுமையைப் புகுத்தி ஒரு மாயாஜாலத்தை அவர்கள் வழங்குவதால், எத்தகைய கால்களையும் அவை கணநேரத்தில் அழகின் எல்லைகளாக்கிவிடுகின்றன. திருமணம், திருவிழா போன்ற விசேஷ தினங்களில் மட்டுமல்லாமல், அலுவலகங்களுக்குத் தினமும் அணிந்து செல்வது மாதிரியான பேர்ஃபூட் சாண்டல்களும் வடிவமைக்கப்படுகின்றன. பெண் குழந்தைகளுக்கு என பிரத்யேகமாகவும் இந்தச் செருப்புகள் வடிவமைக்கப்படுகின்றன. 

தற்போதைய நிலையில் பேர்ஃபூட் சாண்டல்களை, அமேசான் போன்ற ஆன்லைன் ஸ்டோர்களில் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம். இன்னும் சில மாதங்கள் கழித்து இதற்காக என பிரத்யேகமான ரீடெயில் ஷாப்கள் திறந்தாலும் திறக்கப்படலாம். இன்றைய ஸ்டைலிஷ் நங்கைகளின் அடையாளமாக விளங்கும் அலங்காரப் பொருள்களில் பேர்ஃபூட் சாண்டலும் ஒன்றாகிவிட்டது.

ஒரு ஃபேஷன் புரட்சியைத் தொடங்க நினைப்பவர்கள், இப்போதே பேர்ஃபூட் சாண்டல்களை வாங்கி உங்களுடைய கால்களின் அழகுக்கு அழகு சேருங்கள்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு