Published:Updated:

கடற்கன்னி மாதுரிதீட்சித்,பட்டாம்பூச்சி டாப்ஸி பன்னு, பார்பி டால் அனன்யா பாண்டே-ஃபிலிம்ஃபேர் லுக்ஸ்!

ஃபிலிம்ஃபேர்
News
ஃபிலிம்ஃபேர் ( instagram )

ஃபிலிம்ஃபேர் நிகழ்ச்சியில் , கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ணம் உடையணிந்து வந்த நடிகைகள்.

ஃபிலிம் ஃபேர் நிறுவனம், இம்மாதம் 2-ம் தேதி மும்பையில் நடத்திய `கர்டெய்ன் ரைஸர்' (Curtain Raiser) நிகழ்ச்சியின்போது, 2020 - ம் ஆண்டு ஃபிலிம் ஃபேர் விருது விழாவுக்கான சிறப்பு தலைப்புகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்களை வெளியிட்டது.

filmfare
filmfare
instagram

அதைத் தொடர்ந்து, கடந்த 15 -ம் தேதி ஃபிலிம் ஃபேர் விருது விழா முதல் முறையாக அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்றது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எப்போதும் ஃபிலிம் ஃபேர் விருதுவிழாவில் 'யார் யார் என்னென்ன விருதுகளைத் தட்டிச்செல்லவிருக்கிறார்கள்' என எதிர்பார்த்துக் காத்திருக்கும் கூட்டத்துக்கு இணையாக, `எந்தெந்தப் பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போகிறார்களோ' என்ற மனநிலையில் காத்துக்கொண்டிருக்கும் கூட்டமும் இருக்கும்.

நுஷ்ரத்பருச்சா
நுஷ்ரத்பருச்சா
instagram

இதைத்தாண்டி, இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் விருதுபெறவும், வரும் பிரபலங்களின் `ரெட் கார்பெட்' தோற்றத்தைக் காணவும் ரசிக்கவும் ஒரு கூட்டம் இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் விதமாக பிரபலங்களும் கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ணம் உடையலங்காரம் செய்துவந்து அசத்தினார்கள். அவர்களில் சிலரின் ஸ்டைல் உங்கள் பார்வைக்கு...

அலியா பட்

டிரேப்பிங், தை ஹை ஸ்லிட் (Thigh High Slit) என வடிவமைக்கப்பட்டுள்ள, பேஸ்டல் பிங்க் மற்றும் பேல் யெல்லோ நிற கவுனில் மினிமல் மேக்கப்பிலும் ஜொலித்த அலியா பட்.

டாப்ஸி பன்னு

டிரமாட்டிக் ஐ மேக்கப்புடன் மல்ட்டி கலர் ஒன் ஷோல்டர் டிரெஸ் அணிந்து பட்டாம்பூச்சியாய்ப் படபடத்த `தப்பட்' பொண்ணு டாப்ஸி பன்னு.

மாதுரி தீட்சித்

ஆஃப் ஷோல்டரில் கடற்கன்னியின் உடலமைப்பைப் போன்ற மெர்மெய்டு ஃபிட் டிரெஸ்ஸில் ஜொலித்த பாலிவுட்டின் கனவுக்கன்னி மாதுரி தீட்சித்.

அனன்யா பாண்டே

ஃப்ளோரசன்ட் க்ரீனில் வடிவமைக்கப்பட்ட டூல் (Tulle) ஸ்கர்ட்டுக்கு கான்ட்ராஸ்ட்டாக கறுப்பு நிற பஸ்ட்டியர் (Bustier Crop Top) க்ராப் டாப்பில் இருந்த க்யூட் பார்பி டால் அனன்யா பாண்டே.

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே
instagram

தை ஹை ஸ்லிட் (Thigh High Slit) மற்றும் டீப் V நெக் டிசைனில் வெள்ளை நிற உடையில் தேவதைபோல் ஜொலித்த பூஜா ஹெக்டே.