Published:Updated:

ஆடைக்கு அளவு கொடுத்த பின் எடைக் குறைப்பைத் தவிருங்கள்

திருமண ஆடை
பிரீமியம் ஸ்டோரி
திருமண ஆடை

திருமண ஆடைகளைக் கூடுமானவரை ஆன்லைனில் ஆர்டர் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

ஆடைக்கு அளவு கொடுத்த பின் எடைக் குறைப்பைத் தவிருங்கள்

திருமண ஆடைகளைக் கூடுமானவரை ஆன்லைனில் ஆர்டர் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

Published:Updated:
திருமண ஆடை
பிரீமியம் ஸ்டோரி
திருமண ஆடை

ன்றைய மணப்பெண்கள் திருமணத்துக்கு ரொம்ப ஸ்பெஷலாக உடுத்த விரும்புகிறார்கள். அந்த வகையில் லெஹெங்கா, கவுன், சராரா, மேக்ஸி, கேன் கேன் ஸ்கர்ட் போன்றவையெல்லாம் இப்போது பிரைடல் வேர் டிரெண்டில் டாப். அந்த ஆர்வத்துக்கு ஈடுகொடுத்து தன் வாடிக்கையாளர்களுக்கு சங்கீத், முகூர்த்தம், ரிசப்ஷன், மெஹந்தி என ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனித்துவமான ஆடைகளை வடிவமைத்துக்கொடுத்து வெடிங் காஸ்ட்யூம்களில் கலக்கிக்கொண்டிருக்கிறார், சென்னை, ‘ஸ்டூடியோ V7 பொட்டீக்’கின் உரிமையாளர் வின்யா ஏழுமலை. இன்ஜினீயரான இவர் டிசைனிங் துறைக்கு வந்தது பற்றியும் டிரெண்டில் உள்ள அப்டேட்கள் பற்றியும் நம்மிடம் பகிர்கிறார்.

ஆடைக்கு அளவு கொடுத்த பின் எடைக் குறைப்பைத் தவிருங்கள்

“நான் படிச்சது எலெக்ட்ரிக்கல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங். ஆனா, சின்ன வயசிலிருந்தே எனக்கு ஃபேஷன் சார்ந்த விஷயங்கள் மீதுதான் ஈர்ப்பு அதிகம். ஸ்கூல் படிக்கும்போதிலிருந்தே என்னோட ஒவ்வோர் ஆடையையும் தனித்துவமாகக் காட்ட நிறைய மெனக்கெடுவேன். ஸ்டோன் வேலைப்பாடுகள், எம்ப்ராய்டரினு ஏதாவது ஒரு சிறப்பம்சம் என் ஆடைகள்ல இருக்கிற மாதிரி பார்த்துக்குவேன். ஸ்கூல் முடிச்சதும் வீட்டுல சொன்னாங்கன்னு பி.இ படிச்சேன். காலேஜுக்கு நான் போட்டுட்டுப் போற ஒவ்வோர் ஆடைக்கும் பாசிட்டிவ் கமென்ட்ஸ் குவியும். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் டிரஸ்ஸிங் தொடர்பான ஐடியாக்களை என்கிட்டதான் கேட்பாங்க. புதுசா என்ன டிரெண்ட் வந்திருக்குனு ஆன்லைனில் பார்த்து, அதை என் உடல் அமைப்புக்குத் தகுந்த மாதிரி வடிவமைத்துப் போடுவேன். டிரஸ்ஸிங்கைப் பொறுத்தவரை டிசைன் யுனீக்கா இருக்கணும் அல்லது நிறத்தேர்வு வித்தியாசமா இருக்கணும். இது இரண்டில் ஏதாவது ஒன்றை நாம சரியா தேர்வு செய்துட்டாலே போதும்... நாமதான் டிரெண்ட் செட்டர்” என்று சொல்லும் வின்யா, டிசைனிங் துறைக்கு வந்தது பற்றித் தொடர்ந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஆடைக்கு அளவு கொடுத்த பின் எடைக் குறைப்பைத் தவிருங்கள்

“படிப்பு முடிஞ்சதும் என் துறை சார்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்துட்டிருந்தேன். பின் திருமணம், குழந்தைன்னு ஒரு குடும்பத்தலைவியா வாழ ஆரம்பிச்சுட்டேன். அப்போவெல்லாம் என்னை நானே தொலைத்த ஒரு மனநிலை அடிக்கடி வந்து போகும். குழந்தையை விட்டுட்டு வேலைக்குப் போகவும் மனசில்ல. என்ன பண்ணலாம்னு யோசிச்சப்போதான், ‘உனக்குதான் காஸ்ட்யூம்ஸ்ல நல்ல இன்ட்ரஸ்ட் இருக்கே... ஒரு பொட்டீக் திறக்கலாமே’னு என் கணவர் ஐடியா கொடுத்தார். நான் டிசைனிங்கில் ஜெயிக்க முடியும்னு எனக்கும் நம்பிக்கை இருந்தது. ஆரம்பத்தில் ஒரு டிரஸ்ஸிங் ஸ்டூடியோ ஆரம்பிச்சப்போ, அதற்கான முதலீட்டை என் கணவரும் அப்பாவும் கொடுத்தாங்க.

ஆடைக்கு அளவு கொடுத்த பின் எடைக் குறைப்பைத் தவிருங்கள்

ஸ்டூடியோவுக்கான இடத்தேர்வில் இருந்து துணிகள் தேர்வு வரை ஒவ்வொண்ணையும் தேடித் தேடி, அலைந்து திரிந்து பண்ணினேன். ஒரு பெண்ணாக நிறைய சவால்களையும் எதிர்கொண்டேன். மெட்டீரியல்களைப் பொறுத்தவரை அதை நெய்யும் இடத்திலேயே வாங்கினால் விலை குறைவாக இருக்கும் என்பதால் டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப்னு பல இடங்களிலிருந்தும் கொள்முதல் செய்தேன். ஸ்டூடியோ ஆரம்பித்த புதிதில் என் ஃப்ரெண்ட்ஸ், உறவினர்களிடமிருந்து ஆர்டர்கள் கிடைச்சது. பொதுவா டிசைனர் ஆடைகள் என்றாலே விலை அதிகமா இருக்கும்னு நினைப்பாங்க. ஆனா, என்னுடைய பிராண்டின் மூலம் நடுத்தரப் பெண்களும் டிசைனர் ஆடைகளை அணியணும்னு ஆசைப்பட்டேன். அதனால வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ப டிசைனிங் செய்ய ஆரம்பிச்சேன். ஆரம்பகாலத்துல கிடைச்சதெல்லாம் பட்ஜெட் வாய்ப்புகள்தாம். ஆனாலும் அதில் என்னை நிரூபிச்சு அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெறணும்னு நிறைய மெனக்கெட்டேன். குறைந்த பட்ஜெட், யூனிக்கான டிசைன் என்பதால் என்னுடைய வாடிக்கையாளர்களுக்கு என் டிசைனிங் ரொம்பவே பிடிச்சுப்போக, அவங்களே என் பிராண்டுக்கு வாய்வழியா விளம்பரம் செய்ய ஆரம்பிச்சாங்க. அடுத்தடுத்து ஆர்டர்கள் வரத்தொடங்கின. நிறைய வாய்ப்புகள் வந்த ஒரு தருணத்துல, ‘இப்போ நாம ரெடி’னு நம்பிக்கை வர, பொட்டீக்கை ஆரம்பிச்சேன்.

ஹோம்லி லுக், மாடர்ன் லுக்னு ரெண்டு ஸ்டைல்களை விரும்பும் பெண்களுக்கும் இந்த ஆடைகள் பொருத்தமாயிருக்கும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆடைக்கு அளவு கொடுத்த பின் எடைக் குறைப்பைத் தவிருங்கள்

என்கிட்ட ஆர்டர் கொடுக்க வர்றவங்ககிட்ட அவங்களோட விருப்பம், பட்ஜெட் என்ன என்பதை முதலில் கேட்டுப்பேன். அதன்பின் அவங்க உடல்வாகுக்கு அதை எப்படி டிசைன் பண்ணினா நல்லாயிருக்குமோ அதுக்குத் தகுந்த மாதிரி என்னோட ஐடியாக்களை கொடுப்பேன். ஒவ்வொரு பெண்ணுக்கும் தன்னோட திருமண ஆடைகளைப் பற்றி ஆயிரம் கனவுகள் இருக்கும். அதனால அதில் சின்ன குறைகூட வரக் கூடாது என்பதில் ரொம்ப கவனமாயிருப்பேன். ஒரு மணப்பெண்ணுக்கான டிரஸ்ஸை டிசைன் பண்ண ஆரம்பிக்கும் முன் அவங்க என்ன வகையான ஜுவல்ஸ் தேர்வு செய்யப்போறாங்க, அவங்க பார்ட்னர் என்ன நிற ஆடை அணியப் போறாங்க, ஸ்டேஜ் டெக்கார் என்ன என்பதையெல்லாம் கேட்டுட்டுதான் முடிவெடுப்பேன். முக்கியமா, பெண்ணோட ஸ்கின் டோனுக்கு என்ன கலர் தேர்வு செய்யலாம்னு சொல்லுவேன். சிலர் ஆன்லைன்ல பார்த்துட்டு வந்து ‘இந்த மாதிரியே வேணும்’னு சொல்லுவாங்க. அதில் உள்ள ப்ளஸ், மைனஸ் பற்றி எடுத்துச் சொல்லுவேன். அவங்க காம்ப்ரமைஸ் ஆகாத பட்சத்தில் அவங்களுக்கு எங்களால் என்ன பெஸ்ட்டா கொடுக்க முடியுமோ அதைச் செய்து கொடுப்பேன். ஒரு டிரஸ் டிசைன் பண்ண குறைந்தது பத்து நாள்களாவது ஆகும். சிலர் திருமணத்துக்கு இரண்டு நாள்கள் முன்னாடி வந்து டிசைன் பண்ணித்தரச் சொல்லிக் கேட்பாங்க. கடைசி நேர ஆர்டர்களில் நம் தனித்துவத்தைக் காட்ட முடியாது என்பதால் கூடுமானவரை அதுபோன்ற ஆர்டர்களைத் தவிர்த்துவிடுவேன்.

ஆடைக்கு அளவு கொடுத்த பின் எடைக் குறைப்பைத் தவிருங்கள்

டிசைனர் ஆடைகளில் டிரெடிஷனல் டச் கொடுப்பதுதான் என்னுடைய ஸ்பெஷல். அதனால பட்டு, சுங்குடி, காட்டன் போன்ற மெட்டீரியல்களில் லெஹெங்கா, கவுன், அனார்கலி ஆடைகளை வடிவமைத்தேன். நிறைய பெண்கள் இந்த டிரடி - டிரெண்டி (Tradi Trendy) கான்செப்ட்டை விரும்ப ஆரம்பிச்சாங்க. ஹோம்லி லுக், மாடர்ன் லுக்னு ரெண்டு ஸ்டைல்களை விரும்பும் பெண்களுக்கும் இந்த ஆடைகள் பொருத்தமாயிருக்கும். டிரெண்டி லுக்தான் வேண்டும் என்பவர்களுக்கு நெட்டட், பனாரஸி போன்ற மெட்டீரியல்களில் வடிவமைத்துக் கொடுப்பேன். திருமணத்துக்காக டிரஸ் டிசைனிங் செய்துகொள்ள வரும் பெண்களுக்கு சங்கீத்துக்கு சராரா, லெஹங்கா, மெஹந்திக்கு கிராப் டாப்-ஸ்கர்ட், ரிசப்ஷனுக்கு கவுன், முகூர்த்தத்துக்குப் பட்டுப்புடவை - டிசைனர் பிளவுஸ்னு, இப்படி அவங்களோட பட்ஜெட்டுக்கு ஏற்ப பேக்கேஜ் ஆகவும் டிசைனிங் செய்து கொடுக்கிறேன்’’ என்ற வின்யா, பிரைடல் ஆடைகளில் இப்போது என்ன டிரெண்ட், அதை எப்படித் தேர்வு செய்ய வேண்டும் என்பது பற்றி விளக்கினார்.

ஆடைக்கு அளவு கொடுத்த பின் எடைக் குறைப்பைத் தவிருங்கள்

‘`உங்களுடைய சாய்ஸ் டிரெடிஷனல் புடவையெனில் ஹை நெக், பெல்ட் பிளவுஸ், பட்டர்ஃப்ளை ஸ்லீவ் போன்றவற்றைத் தேர்வு செய்யலாம். ரிசப்ஷனுக்கான ஆடையெனில் கேன் கேன் ஸ்கர்ட் அண்ட் கிராப் டாப் தேர்வு உங்களை யுனீக்காகக் காட்டும். மெஹெந்தி நிகழ்ச்சிக்கு எனில் பனாரஸி ஸ்கர்ட், டிசைனர் கிராப் டாப்களை மேட்ச் செய்து அணியலாம்’’ என்ற வின்யா திருமணத்துக்கு ஆடைகளைத் தேர்வு செய்யும் முன் மணப்பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பகிர்கிறார்...

ஆடைக்கு அளவு கொடுத்த பின் எடைக் குறைப்பைத் தவிருங்கள்
  • திருமணத்துக்காக எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட நினைப்பவர்கள், உங்களுடைய ஆடைக்கு அளவு கொடுத்த பின் அதைத் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில், திருமண ஆடை சரியான ஃபிட்டிங்கில் இருக்காது.

  • டிரெண்ட் என்ன என்பதைப் பார்த்து திருமண ஆடையைத் தேர்வு செய்யாமல், உங்களுக்கு எது பொருந்தும் என்பதைப் பார்த்து தேர்வு செய்ய வேண்டும்.

  • ஆடைக்கு ஏற்ற காலணிகளையும் தேர்வு செய்து அணிய வேண்டும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

  • திருமண ஆடை தயாரானதும் ட்ரெயல் பார்த்து, தேவைப்பட்டால் ஃபிட்டிங்கை ஆல்டர் செய்துகொள்ள வேண்டும். ‘பரவாயில்ல, மேனேஜ் பண்ணிக்கலாம்’ என்று நினைக்கக் கூடாது. பின் திருமண நாளில் ஆடை உங்களுக்கு அசௌகர்யத்தைத் தரும்.

  • திருமண ஆடைகளைக் கூடுமானவரை ஆன்லைனில் ஆர்டர் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism