Published:Updated:

தேவதையாக மிளிரவைக்கும் மேக்கப்!

தேவதையாக மிளிரவைக்கும் மேக்கப்
பிரீமியம் ஸ்டோரி
தேவதையாக மிளிரவைக்கும் மேக்கப்

சவுத் இண்டியன் பிரைடல் மேக்கப்பை மையமாகக்கொண்டு மூணு வருஷங்களுக்கு முன்னால ஆரம்பிச்சதுதான் ‘ப்ரீத்தி மேக்கப் ஆர்ட்டிஸ்ட்ரி’ யூடியூப் சேனல்.

தேவதையாக மிளிரவைக்கும் மேக்கப்!

சவுத் இண்டியன் பிரைடல் மேக்கப்பை மையமாகக்கொண்டு மூணு வருஷங்களுக்கு முன்னால ஆரம்பிச்சதுதான் ‘ப்ரீத்தி மேக்கப் ஆர்ட்டிஸ்ட்ரி’ யூடியூப் சேனல்.

Published:Updated:
தேவதையாக மிளிரவைக்கும் மேக்கப்
பிரீமியம் ஸ்டோரி
தேவதையாக மிளிரவைக்கும் மேக்கப்

மேக்கப்பில் அடிப்படை லெவலிலிருந்து அட்வான்ஸ்டு லெவல் வரை கற்றுக்கொடுக்கும் பல வீடியோக்களை யூடியூப்பில் காண முடிகிறது. புரொஃபஷனல் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டுகள் பலர்கூட, இதுபோன்ற வீடியோக்களைப் பார்த்து தங்களை அப்டேட் செய்துகொள்கிறார்கள். அப்படி, ‘டார்க் ஸ்கின்னுக்கான சவுத் இண்டியன் மேக்கப்’ என தான் வெளியிட்ட வீடியோ மூலம் பல ஃபாலோயர்களைப் பெற்றவர், சென்னை ‘ப்ரீத்தி ஆர்ட்டிஸ்ட்ரி’யின் உரிமையாளர் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ப்ரீத்தி. தன் மேக்கப் துறை பயணத்தைப் பகிர்ந்துகொள்கிறார் ப்ரீத்தி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ப்ரீத்தி பி.இ, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆனது எப்படி?

டைம்பாஸுக்காக யூடியூபில் மேக்கப் வீடியோக்களைப் பார்க்க ஆரம்பிச்சேன். அதில் என்னை மிகவும் ஈர்த்தவை, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் தமன்னா ரோஷனின் வீடியோக்கள். ஒரு கட்டத்துல அந்த வீடியோக்கள் மேக்கப் கலையின் மீது ஆர்வம் ஏற்படுத்த, நாமும் ஏன் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆகக் கூடாதுன்னு மனசுக்குள்ள கேள்வி எழுந்துட்டே இருந்துச்சு. ஆனா, வீட்ல என்ன சொல்லுவாங்களோன்னு யோசனையும் இருந்துச்சு. அம்மா, அப்பா, அண்ணன்கள் எல்லாருமே குடும்ப பிசினஸைக் கவனிச்சிட்டிருக்கிறவங்க. பி.டெக்., ஐ.டி முடிச்ச நான் அவங்ககிட்ட போய் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆகப்போறேன்னு சொன்னதில் யாருக்குமே விருப்பம் இல்ல. ஆனா, இதில்தான் என் சந்தோஷமும் எதிர்காலமும் இருக்குன்னு அவங்களுக்குப் புரியவெச்சு சம்மதம் வாங்கினேன்.

தேவதையாக மிளிரவைக்கும் மேக்கப்!

முதல் ஆறு மாசம் நிறைய தேடி, இன்டர்நேஷனல் லெவல்ல அட்வான்ஸ் மேக்கப் கோர்ஸ் நடத்தறவங்களோட பயிற்சி வகுப்புகளில் சேர்ந்தேன். பின்னர், சென்னையின் பிரபல மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அக்ரிதி சச்தேவ்கிட்ட மேக்கப் நுணுக்கங்களைக் கத்துக்கிட்டேன். ஒரு பிரைடல் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டா களத்துல இறங்கினேன். ‘ப்ரீத்தி ஆர்ட்டிஸ்ட்ரி’ என்ற பெயரில் என் ஸ்டூடியோவை ஆரம்பிச்சேன். இப்போ அடுத்தகட்டமா மேக்கப் தொடர்பான புராடக்ட்ஸை லான்ச் பண்றதுக்கான வேலையையும் பார்த்திட்டிருக்கேன். இப்பவும் ஆறு மாசத்துக்கு ஒரு முறை மேக்கப் தொடர்பான வகுப்புகளில் கலந்துட்டு என்னை அப்டேட் பண்ணிக்கிறேன். இப்போ பிரைடல் மேக்கப், செலிபிரிட்டி போட்டோ ஷூட், பார்ட்டி மேக்கப்னு நேரம் போதாமல் சுழண்டுட்டு இருக்கேன். வருஷம் 15 லட்சம் ரூபாய் வருமானம் பார்க்கிறேன். ஒன்றரை வருஷத்துக்கு முன்னால எனக்குத் திருமணம் ஆச்சு. கணவர் ஷேக் ரசூல் ஒரு எம்என்சி கம்பெனியில வொர்க் பண்றார். என் கம்பெனிக்கான லோகோ டிசைன்ல இருந்து சோஷியல் மீடியா புரமோஷன் வரை அவரின் உதவி உண்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்களோட யூடியூப் சேனல் பற்றி?

சவுத் இண்டியன் பிரைடல் மேக்கப்பை மையமாகக்கொண்டு மூணு வருஷங்களுக்கு முன்னால ஆரம்பிச்சதுதான் ‘ப்ரீத்தி மேக்கப் ஆர்ட்டிஸ்ட்ரி’ யூடியூப் சேனல். டார்க் ஸ்கின் பெண்களுக்கு, மேக்கப் பண்ணிக்கலாமா வேண்டாமா என்ற குழப்பம் எப்பவும் இருக்கும். எந்த நிறத்தில் இருப்பவரையும் அவரோட முகத்தில் உள்ள குறைகளைக் குறைத்தும், நிறைகளை ஹைலைட் செய்தும் காட்டுவதுதான் மேக்கப். சரும நிறத்தை மாத்துறது இல்ல... சருமத்தை பளிச்னு காட்டுறதுதான் மேக்கப்.

தேவதையாக மிளிரவைக்கும் மேக்கப்!

டார்க் ஸ்கின் பெண்ணை மேக்கப்ல அழகாகக் காட்டலாம். அந்த தன்னம்பிக்கையை அவங்களுக்குக் கொடுக்குற மாதிரி ஒரு வீடியோ அப்லோடு பண்ணினேன். இதுவரை 4.8 மில்லியன் பேர் அந்த வீடியோவைப் பார்த்திருக்காங்க. தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட, இப்போ நான் யூடியூப்லயும் பிஸியாகிட்டேன். தவிர, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட்னு பல சோஷியல் மீடியாவிலும் மேக்கப் தொடர்பான தகவல்களைத் தொடர்ந்து பதிவேத்திட்டு வர்றேன். மேக்கப் தொடர்பா பலரும் கேட்கிற சந்தேகங்களில் இருந்துதான் என்னோட புது வீடியோக்களுக்கான கான்செப்ட் உருவாகுது.

ஒரு பிரைடல் மேக்கப் ஆர்டிஸ்ட்டா உங்களோட அனுபவங்கள்..?

முகூர்த்த நேரத்துல மணப்பெண் ரொம்ப சோர்வாகிடுவாங்க. அதனால, அவங்க பிரைட்டா தெரியுற மாதிரி கண்கள், முகம் எல்லாம் பிரைட் மேக்கப் போடுவேன். பெண் முகத்தில் துளியும் சோர்வு தெரியாத அளவில் என் மேக்கப்பை அமைக்கிறதுதான் என்னோட ஸ்பெஷல். பிரைடல் மேக்கப்ல இன்னிக்கு டிரெண்ட்டா இருக்கறது குளோயி மேக்கப். இதில், பரபர முகூர்த்த சூழலிலும் மணப்பெண்ணின் முகம் பளபளன்னு ஃப்ரெஷ்ஷா இருக்கும். ‘ஸ்மோக்கி ஐஸ்’ மேக்கப்பை எல்லா தரப்பு பெண்களுமே விரும்புறாங்க. இப்படி மணப்பெண்களின் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் அவங்க மனசுக்கு நிறைவா நிறைவேற்றிக் கொடுக்கணும்.

தேவதையாக மிளிரவைக்கும் மேக்கப்!

மேக்கப் மட்டுமில்லாம, கல்யாணப் பொண்ணுக்கு என்ன கலர்ல பட்டுப் புடவை எடுக்கலாம், பிரைடல் பிளவுஸ் எங்க ஸ்டிச் பண்ணலாம், வாடகை நகைகள், டயட்னு பல விஷயங்களிலும் கஸ்டமர்களுக்கு உதவுறேன். என்னதான் மேக்கப் பண்ணினாலும், ஸ்டைலிங் முக்கியம். அதனால சம்பந்தப்பட்ட பொண்ணுக்கு, எப்படிச் சிரிக்கணும், எப்படி நடக்கணும், உட்கார்ந்து எழும்போது என்னென்ன செய்யணும், மேக்கப்புக்கு அப்புறம் செய்ய வேண்டிய டச்சப்னு இதையெல்லாம் பற்றி அறிவுறுத்துவேன். மேக்கப் ட்ரயல் பண்ணும்போதே என்னோட மொபைல்ல ஒரு போட்டோஷூட் பண்ணி கஸ்டமர்கிட்ட காட்டுவேன். அந்தப் பெண் எந்தக் கோணத்துல அழகா தெரிவார்; எந்தெந்த போஸ்கள் அவருக்கு செட்டாகும்; அவர் எப்படிச் சிரித்தால் போட்டோவுக்கு அழகா இருக்கும் என்பதுவரை ஆலோசனைகள் தருவேன்.

தேவதையாக மிளிரவைக்கும் மேக்கப்!

சவால்கள்..?

முகூர்த்த நாள்ல மேக்கப், புடவை கட்டுறது, ஹேர்ஸ்டைல் எல்லாம் பண்ண மூன்று மணி நேரமாவது கேட்பேன். இரண்டரை மணி நேரத்துல மேக்கப் எல்லாம் முடிச்சிட்டு, அரை மணி நேரம் என்னோட பர்சனல் ஷூட் இருக்கும். நானே போட்டோஸ் எடுத்துப் பார்த்து, பிரைடுக்கு ஏற்ற போஸை ஃபிக்ஸ் பண்ணுவேன். ஆனா, எல்லா இடத்திலேயும் இதுபோல டைம் கிடைக்காது. குறிப்பா, அதிகாலை முகூர்த்தங்களில் எனக்கு ஒரு மணி நேரம் கிடைக்கிறதே கஷ்டம். போட்டோகிராபர் ஷூட் பண்ணக் காத்துட்டிருக்க, நாம சீக்கிரமா மேக்கப்பை முடிச்சாகணும். இப்படி நேரத்தைத் துரத்தி வேலைபார்க்கிறதைத்தான் இதில் சவாலா உணர்றேன்.

பணி நிறைவை உணர்வது எப்போது?

இன்று எல்லா தரப்பு பெண்களும் மேக்கப்பில் அதிக ஆர்வம் காட்டுறாங்க. அலுவலகம் செல்லும் பெண்களுக்கு அன்றாட தேவையாக மாறியிருக்கும் மேக்கப், அவர்களைத் தன்னம்பிக்கையுடன் மிளிரச் செய்யுது. இன்னும் வீட்டு விசேஷங்கள், நண்பர்களின் பார்ட்டி, கோயில் விழாக்கள்னு ஒவ்வோர் இடத்துக்கும் ஒவ்வொரு விதமான மேக்கப்பை பெண்கள் போட்டுக்க விரும்புறாங்க. அப்படி அவங்க மனசுக்கு நெருக்கமான நிகழ்ச்சிகளுக்கு அவங்களுக்கு மேக்கப் செய்துவிடும்போது, அவங்க கண்ணாடியை ரசிச்சுப் பார்த்து தங்களை ஒரு தேவதையா உணரும்போது எனக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஓவியருக்கு அவர் வரைந்து முடித்த ஓவியம் எப்படிப்பட்ட உணர்வைத் தருமோ, அதற்கு ஈடான ஸ்பெஷல் உணர்வு அது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism