Published:Updated:

“பிடிச்ச விஷயமே பிசினஸா மாறினா அது வேற லெவல் சந்தோஷம்!”

 நந்திதா
பிரீமியம் ஸ்டோரி
நந்திதா

செலிபிரிட்டி டிசைனர் நந்திதா

“பிடிச்ச விஷயமே பிசினஸா மாறினா அது வேற லெவல் சந்தோஷம்!”

செலிபிரிட்டி டிசைனர் நந்திதா

Published:Updated:
 நந்திதா
பிரீமியம் ஸ்டோரி
நந்திதா

சென்னையச் சேர்ந்த செலிபிரிட்டி டிசைனர் நந்திதா. பிடித்த விஷயத்தை பிசினஸாக மாற்றிய தன் வெற்றிப் பயணத்தை நம்முடன் பகிர்ந்துகொள் கிறார் அவர்.

“எனக்கு சொந்த ஊர் திருப்பூர். திருப்பூர்ல பொட்டிக் வெச்சிருந்த எங்கம் மாவைப் பார்த்து வளர்ந்த எனக்கும் டிசைனிங் சார்ந்த விஷயங்கள் பிடிக்க ஆரம்பிச்சுது. காலேஜ்ல படிச்சிட்டிருந்த போதே, அம்மாகிட்ட சொல்லி டிரஸ் டிசைன் பண்ணி விற்பனை பண்ணிருக் கேன். படிப்பை முடிச்சதும் ஐ.டி நிறுவனத்துல கை நிறைய சம்பளத்துல வேலை கிடைச்சாலும், மெஷின் மாதிரி ஓடிக்கிட்டே இருக்குற மாதிரி தோணவே வேலையை விட்டுட்டேன். அப்போ டிசைனிங் துறையில இருந்த என் ஃபிரெண்ட், அவங்களுக்கு உதவி செய்ய முடியுமானு கேட்டாங்க. உடனே ஓகே சொல்லிட்டேன்'' என்ற நந்திதா, தனக்குப் பிடித்த டிசைனிங் துறையில் தன் வளர்ச்சி குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

“பிடிச்ச விஷயமே பிசினஸா மாறினா அது வேற லெவல் சந்தோஷம்!”

“ஃபிரெண்டுக்கு ஆறுமாசம் ஹெல்ப் பண்ணி, டிசைனிங் தொடர்பான நுணுக்கமான விஷயங்களைக் கத்துக் கிட்டேன். இந்தியா முழுக்க டிராவல் பண்ணி, ஒவ்வொரு மாநிலத்துலயும் கிடைக்குற மெட்டீரியல்கள் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். சில லட்ச முதலீட்டுல சொந்தமா பொட்டிக்கை தொடங்கினேன். ஆரம்பத்துல பிளவுஸ் டிசைனிங் மட்டும்தான் பண்ணிட்டி ருந்தேன். அப்புறம் ஃபேஷன் சம்பந்தமா லண்டன்ல ஒரு கோர்ஸ் படிச்சிட்டு, இண்டோ வெஸ்டர்ன் ஆடைகளையும் டிசைன் பண்ண ஆரம்பிச்சேன்.

‘களத்தில் சந்திப்போம்’ படத்துக்கு டிசைனரா வேலை செய்யும் வாய்ப்பு கிடைச்சுது. படத்துக்கு டிசைனரா வேலை செய்யறது கஷ்டம். அந்தப் பரபரப்பும், டென்ஷனும் வேண்டாம்னு சினிமாவுக்கு டிசைன் பண்றதை விட்டுட்டு பிசினஸ்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்.

“பிடிச்ச விஷயமே பிசினஸா மாறினா அது வேற லெவல் சந்தோஷம்!”

நான் டிசைன் பண்ண உடைகளுக்கு நானேதான் மாடலிங் பண்ணுவேன். ஒருமுறை நான் டிசைன் பண்ண தோதி ஸ்டைல் டிரஸ்ல ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அங்கே வந்திருந்த ஜோதிகா மேடம், தனக்கும் அதே மாதிரி டிசைன் பண்ணிக்கொடுக்க முடியுமானு கேட்டாங்க. நான் டிசைன் பண்ண தோதி டிரஸ்ஸைதான் ஃபிலிம்ஃபேர் நிகழ்ச்சிக்குப் போட்டுட்டுப் போனாங்க. அடுத்தடுத்து தோதி ஸ்டைலலயே மூணு டிரஸ் வாங்கினாங்க...’’ - முதல் செலிபிரிட்டி கஸ்டமர் அனுபவம் பகிரும் நந்திதாவுக்கு சங்கீதா விஜய், ஷாலினி அஜித், பிரியா பவானி சங்கர், வாணி போஜன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆர்த்தி ரவி உட்பட இன்னும் பல விஐபி வாடிக்கையாளர்கள் இருக் கிறார்கள்.

‘`மனசுக்குப் பிடிச்ச விஷயத்தையே பிசினஸா செய்யுற சந்தோஷம் நிச்சயம் வேற லெவல்...'' நிறைவாகச் சொல்கிறார் நந்திதா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism