Published:Updated:

``கான்ஃபிடன்ஸுடன் மேக்கப் செஞ்சுக்கோங்க கேர்ள்ஸ்... ஏன்னா?" - மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஒலிவியா

Recreation Makeup by Oliviya
Recreation Makeup by Oliviya

``மேக்கப் என்பது கிண்டலுக்குரியது என்ற காலமெல்லாம் மாறிப்போச்சு.'' என்கிறார் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஒலிவியா.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மேக்கப் உலகில் சமீபத்திய டிரெண்ட்... ரீக்ரியேஷன். அதாவது, சாதாரண பெண்கள் அல்லது மாடல்களை, செலிப்ரிட்டிகளின் லுக்கில் மாற்றுவது. அந்த வகையில் சமீபத்தில் நயன்தாராவின் லுக்கை மாடலுக்கு ரீக்ரியேட் செய்து பிரபலமானவர், மேக்கப் ஆர்டிஸ்ட் ஒலிவியா.

Oliviya's make up
Oliviya's make up

``ரீக்ரியேஷன் (Recreation)' மேக்கப்ங்கிறது, ஒருவரோட குறிப்பிட்ட ஒரு லுக்கை எடுத்துக்கிட்டு, அதில் கண், மூக்குனு அவங்களோட அம்சங்களை மேக்கப் மூலம் மாடலுக்குக் கொண்டுவர்றது. நாங்க நயன்தாராவின் ரெண்டு லுக்களை அப்படி ரெப்ளிகேட் செய்தோம்.

ஒன்று, நயன்தாராவின் இயற்கையான லுக். மற்றொன்று, `லவ் ஆக்ஷன் டிராமா' என்ற மலையாளப் படத்துல அவங்களோட பிரைடல் லுக். அதுக்குக் கிடைச்ச வரவேற்பு, எங்க டீமுக்குக் கிடைத்த வெற்றி'' என்று சொல்லும் ஒலிவியா, சிம்பு, அக்‌ஷரா ஹாசன், ரெஜினா கசண்ட்ரா வரை பல செலிப்ரிட்டிகளுடனும் பணிபுரியும் முன்னணி மேக்கப் கலைஞர். கார்ப்பரேட் துறையிலிருந்து காஸ்மெடிக் துறைக்கு வந்திருப்பவர்.

Recreation Makeup by Oliviya
Recreation Makeup by Oliviya

``சின்ன வயசுலயிருந்தே மேக்கப்பில் ஆர்வம் என்றாலும், அதை புரொஃபஷனா நினைக்கலை. கார்ப்பரேட் கம்பெனியில ஏழு வருஷம் வேலைபார்த்தேன். ஒரு கட்டத்தில், மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆர்வம் என்னை ஆக்கிரமிச்சது. யூடியூப் வீடியோக்கள்லேயே அதைக் கத்துக்கிட்டேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேக்கப் ஆர்டிஸ்ட் கண்ணன் ராஜமாணிக்கம் சென்னையில் நடத்தின மூன்று நாள்கள் பயிற்சி, `ஜாஸ்மின் பியூட்டி கேர்' நிறுவனம் அகமதாபாத்தில் நடத்தின ஒரு நாள் பயிற்சி இவற்றில் கலந்துகிட்டு என் அறிவை வளர்த்துக்கிட்டேன்.

இவங்களையெல்லாம் விட முக்கியமான ஒரு டீச்சர், தான் ஆபீஸுக்குக் கிளம்பும்போது காம்பேக்ட் பவுடரையும் லிப்ஸ்டிக்கையும் போடுறதையே ஆர்வமா என்னை வேடிக்கை பார்க்கவெச்ச எங்கம்மா'' என்று சிரிப்பவர், அக்‌ஷரா ஹாசன், யாஷிகா ஆனந்த், பிரியங்கா தேஷ்பாண்டே எனப் பல முன்னனி நட்சத்திரங்களுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

``அக்‌ஷராவுக்கு இயற்கையாகவே அழகிய கண்கள் மற்றும் மாசற்ற சருமம். அதனால, நேச்சுரல் லுக்கைதான் அவங்க விரும்புவாங்க. யாஷிகாவின் கண்களும் உதடுகளும் அவங்களோட சிறப்பம்சம் என்பதால, அதை ஹைலைட் செய்யும்விதமான மேக்கப்பை விரும்புவாங்க.

குறிப்பா, `ஸ்மோகி ஐஸ்' மேக்கப் அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். தொகுப்பாளர் பிரியங்கா, நான் மேக்கப்பை முடிக்கும்வரை முழு பொறுப்பையும் என்கிட்ட விட்டுடுவாங்க. நடுவுல கண்ணாடிகூட பார்க்க மாட்டாங்க. `பிக் பாஸ்' ஆரவ் நிக்காவில், அவர் மனைவி ராஹேவுக்கு நான்தான் மேக்கப் ஆர்டிஸ்ட்.

Oliviya
Oliviya

ரெட்ரோ ஸ்டைல்ல, எனக்கு ஶ்ரீதேவியின் மேக்கப் சென்ஸ் ரொம்பப் பிடிக்கும். அவங்க தன்னோட எல்லா கேரக்டர்களுக்கு செய்துக்கிற ஒப்பனையும் ரசிக்கும் விதமா இருக்கும். இப்போ, பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், நயன்தாரா, சமந்தாவின் ஃபேஷன் சென்ஸ் மற்றும் மேக்கப் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இவங்ககூடயெல்லாம் வேலைபார்க்க ஆசை'' என்றவர், தன் பிரைடல் மேக்கப் அனுபவங்கள் பற்றிப் பகிர்ந்துகொண்டார்.

``மணப்பெண்களுக்கு நான் டைம்லெஸ் லுக்கையே தர விரும்புவேன். அதாவது, பல வருஷங்கள் கழிச்சு அவங்க தங்களோட கல்யாண ஆல்பத்தைப் பார்க்கும்போதும், அவங்களுக்கு அது அவுட் ஆஃப் ஃபேஷன்னு தோணாத கிளாஸிக் ஸ்டைல்கள்தான் என் தேர்வா இருக்கும்.

இப்போ எல்லா மணப்பெண்களும் விரும்பிக் கேட்பது, `ஏர் பிரஷ் மேக்கப்'. வியர்வை, தண்ணீர் ரெசிஸ்டென்ட் மேக்கப் ஆன இது 12 மணி நேரம் கலையாமல் இருக்கும்'' என்றவர், இறுதியாக இதைச் சொல்லி முடித்தார்.

Oliviya's make up
Oliviya's make up

``மேக்கப் என்பது கிண்டலுக்குரியது என்ற காலமெல்லாம் மாறிப்போச்சு. கூடவே, சிவப்புதான் அழகு என்ற கான்சப்ட்களும் வலுவிழந்து வர்றது வரவேற்புக்குரியது. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு வகையில் அழகு. அதை ஹைலைட் செய்துகாட்ட... கான்ஃபிடன்ஸுடன் மேக்கப் செய்துக்கோங்க!''

- மைத்ரேயி.ர & சாய் சஹானா அ.மு.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு