Published:Updated:

தாவணி போட்ட தீபாவளி... சிக்கன செலவில் ‘சிக்’கான டிரஸ்கள்!

ஃபேஷன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபேஷன்

ஃபேஷன்

ந்த வருஷ தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல்... இப்போதே ஆரம்பித்து விட்டது இந்த விசாரிப்பு. கொரோனாவையெல்லாம் தற்காலிகமாக மறந்து, கொண்டாட்டத்துக்குத் தயாராகி வருகிறார்கள் மக்கள். இந்தத் தீபாவளிக்கு டிரெண்ட் ஆகும் ஆடைகள் பற்றி விவரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் அஞ்சு சங்கர்.

தாவணி போட்ட தீபாவளி... சிக்கன செலவில் ‘சிக்’கான டிரஸ்கள்!

இந்தத் தீபாவளிக்கு தாவணி மாடல் லெஹெங்கா புது வரவாகக் களமிறங்குகிறது. அதாவது, தாவணி பேட்டர்னில் டிசைனர் மெட்டீரியலில் வடிவமைக்கப்படும் நியூ லுக் ஆடை. அதாவது, டிரெடிஷனும் டிரெண்டும் கலந்த ஃப்யூஷன் ஆடைகள். ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டிய அவசிய மில்லை. வீட்டிலிருக்கும் புடவை, துப்பட்டாவை கூட மிக்ஸ் மேட்ச் செய்து கலக்கலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தாவணி போட்ட தீபாவளி... சிக்கன செலவில் ‘சிக்’கான டிரஸ்கள்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

டிரெடிஷனல் லுக்

பக்கா டிரெடிஷனல் லுக் வேண்டும் என்பவர்கள் ஸ்கர்ட், ப்ளவுஸ், தாவணி என மூன்றையுமே காஞ்சிபுரம் சில்க், பனராஸி சில்க், ரா சில்க் போன்றவற்றில் வடிவமைத்துக்கொள்ளலாம். இது 80’ஸ் ஸ்டைலை நினைவுபடுத்தும்.

தாவணி போட்ட தீபாவளி... சிக்கன செலவில் ‘சிக்’கான டிரஸ்கள்!

இதே லுக்கில் இன்னும் வெரைட்டி காட்ட நினைப்பவர்கள் ஹை காலர் ப்ளவுஸ், போட் நெக் ப்ளவுஸ் போன்றவற்றைத் தேர்வு செய்து அணியலாம். ஊதா, சிவப்பு, பச்சை, மஞ்சள் போன்ற டிரெடிஷனலான நிறங்களில் உங்களின் ஆடையை வடிவமைத்து ஆன்ட்டிக் நகைகளை மிக்ஸ் மேட்ச் செய்யலாம். இந்த லுக்குக்கு புதிதாக ப்ளவுஸ் வடிவமைக்கத் தேவையில்லை. உங்களிடம் இருக்கும் பட்டுப்புடவைகளின் ப்ளவுஸ்களையே மிக்ஸ் மேட்ச் செய்துகொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தாவணி போட்ட தீபாவளி... சிக்கன செலவில் ‘சிக்’கான டிரஸ்கள்!

டிரெண்டி லுக்

டிரெண்டி லுக் பிரியைகள் நெட்டடு, எம்ப்ராய்டரி, ஜர்தோஸி, வேலைப்பாடுகள் செய்யப்பட்ட மெட்டீரியல்களைத் தேர்வு செய்யலாம். தாவணியை வழக்கம்போல் மடிப்பு வைத்து அணியாமல் சிங்கிள் ப்ளீட்டிலோ, ஒருபுறமாகப் பின் செய்தோ அணியலாம். டிரெண்டி லுக்குக்கு அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ப்ளவுஸை மிக்ஸ் மேட்ச் செய்யாமல் உங்களிடம் இருக்கும் கிராப் டாப், பேட்டர்ன் ப்ளவுஸ்களை மிக்ஸ் மேட்ச் செய்தால் அட்டகாசமாக இருக்கும். ஸ்கர்ட்டில் இருக்கும் பார்டர் பெரியதாக இல்லாமல் இருந்தால் நீட் லுக் கிடைக்கும். ஸ்கர்ட், தாவணி ப்ளவுஸ் மூன்றையும் வெவ்வெறு நிறங்களில்கூட தேர்வு செய்யலாம். கோல்டன் நிற நெட்டடு அல்லது எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட துப்பட்டாவை எந்த ப்ளவுஸுடனும் மிக்ஸ் மேட்ச் செய்து வெரைட்டி காட்ட முடியும். சோக்கர் மற்றும் பெரிய காதணிகள் அழகுக்கு அழகு சேர்க்கும்.

பட்ஜெட் ஃப்ரெண்ட்லி

உங்கள் வீட்டில் இருக்கும் எந்தப் புடவையையும் நீங்கள் ஸ்கர்ட்டாக மாற்ற இயலும். இது நியூ டிரெண்ட் என்பதால் இப்படித்தான் மிக்ஸ் மேட்ச் செய்ய வேண்டும் என்று எந்த வரையறையும் இல்லை. உங்களிடம் இருக்கும் எந்த ப்ளவுஸையும், எந்த துப்பட்டாவையும் நீங்கள் மிக்ஸ் மேட்ச் செய்து அணியலாம்.

தாவணி போட்ட தீபாவளி... சிக்கன செலவில் ‘சிக்’கான டிரஸ்கள்!

ஒரே புடவையிலேயே அம்மா - மகள் காம்போ ஸ்கர்ட் டிசைன் செய்து ஒரே செலவில் இருவருக்கான ஷாப்பிங் வேலையை முடிக்கலாம்.

இண்டோ வெஸ்டர்ன்

இண்டோ வெஸ்டர்ன் உங்களின் சாய்ஸ் எனில் புரோகேடு, ரா சில்க், காஞ்சிபுரம் சிலக், கோரா காட்டன் போன்றவற்றில் ஸ்கர்ட்டை வடிவமைத்துக்கொண்டு தாவணியை டிசைனர் மெட்டீரியலில் தேர்வு செய்யலாம். அல்லது ஸ்கர்ட்டை டிசைனர் மெட்டீரியலில் வடிவமைத்துக்கொண்டு தாவணியை சில்க் அல்லது புரோகேடு மெட்டீரியலில் மேட்ச் செய்யலாம்.

தாவணி போட்ட தீபாவளி... சிக்கன செலவில் ‘சிக்’கான டிரஸ்கள்!

ப்ளவுஸுக்கு மேட்ச்சிங்காக பெல்ட் அணிந்தால் கம்பீர லுக் கொடுக்கும். `தாவணியெல்லாம் சின்ன பொண்ணுங்க உடுத்தறதாச்சே' எனத் தயங்குவோர், தாவணியை துப்பட்டா போன்று அணிந்துகொள்ளலாம். அல்லது கேன் கேன் சாரி போன்றும் கட்டிக்கொள்ளலாம்.

டூ இன் ஒன்

நீங்கள் வடிவமைத்திருக்கும் ஸ்கர்ட்டை கிராப் டாப்புடன் அணிந்து ஸ்கர்ட் அண்டு டாப் போன்று பயன்படுத்தினால் ஃப்ரெஷ் லுக் கிடைக்கும்.

தாவணி போட்ட தீபாவளி... சிக்கன செலவில் ‘சிக்’கான டிரஸ்கள்!

ப்ளெயின் ஸ்கர்ட்டில் பார்டர் மட்டும் புரோகேடு மெட்டீரியலில் வைத்துக்கொண்டால் அந்த ஸ்கர்ட்டை டிரெடிஷனல், டிரெண்டி என எந்த லுக்குக்கும் மிக்ஸ் மேட்ச் செய்ய இயலும்.