அவ்வப்போது டிரெண்டாகும் புதிய ஆடைகளோ ஆபரணங் களோ நமக்கு செட் ஆகுமா, ஆகாதா என்ற தயக்கம் பலருக்கும் இருக்கும். அந்தத் தயக்கத்தை உடைத்து, உங்களையும் டிரெண்டியாகக் காட்டிக்கொள்வதற்கான ஃபேஷன் டிப்ஸ் வழங்குகிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த ‘நாடியா டிசைனர் ஸ்டூடியோ’ இணை நிறுவனர் சுப்ரியா மனோகரன்.

அளவு முக்கியம் லேடீஸ்

எல்லா வகையான ஆடைகளையும் எல்லாரும் அணியலாம். ஆனால், அவற்றைப் பயன்படுத்து வதில் சில நுணுக்கங்களைக் கையாள வேண்டும். எந்த ஆடையாக இருந்தாலும் உங்களின் உடல் அளவுக்குத் தகுந்தாற்போன்று கச்சிதமாகத் தேர்வு செய்ய வேண்டும். ரெடிமேட் ஆடைகளை வாங்கும்போது உங்கள் அளவுக்கு ஏற்றாற்போல் மாற்றியமைத்து உடுத்த வேண்டும்.

இடம், பொருள், ஏவலறிந்து உடைகளைத் தேர்வு செய்ய வேண்டும். வேலை தொடர்பான இடங்களுக்கு எம்ப்ராய்டரி, சமிக்கி வேலைப்பாடுகள் இல்லாத ஆடைகளைத் தேர்வு செய்ய வேண்டும். எந்த நிறத்தைத் தேர்வுசெய்வது என்ற குழப்பம் இருந்தால் கறுப்பு, வெள்ளை நிறங்களைத் தேர்வு செய்து அணியலாம்.

இரவு நேர நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது நியான், பிரைட் நிற ஆடைகளும், பகல் நேர நிகழ்ச்சிகளுக்கு அடர் நிறங்களும் சரியான சாய்ஸ்.

ஆடை பாதி, ஆபரணங்கள் மீதி...

சிம்பிளான காட்டன் புடவைகளுக்கு தங்க நகைகள் தவிர்த்து ஃபேஷன் ஜுவல்லரி அணியலாம். பட்டுப் புடவைகளுக்கு ஆன்ட்டிக் நகைகளை மேட்ச் செய்யலாம்.

ஜீன்ஸ், டி-ஷர்ட் அணியும்போது சிங்கிள் ஸ்டோன் செயின், சிறிய கம்மல் போன்றவற்றை மேட்ச் செய்யுங்கள்.

கொலுசு அணியும் பழக்கம் உள்ளவர்கள் எனில் ஜீன்ஸ் அணியும்போது வழக்க மான சலங்கை கொலுசுக்குப் பதிலாக டிரெண்டியான கொலுசு அணிய வேண்டும்.

குர்தி பிரியைகள் எனில் உங்கள் ஆடையின் நிறத்துக்குப் பொருந்திப்போகும் டிசைனர் கம்மல்கள், ஃபேன்ஸி நகைகளை மேட்ச் செய்யலாம்.

டிரெடிஷனல் ஆடைகள் அணியும்போது டிசைனர் க்ளட்ச் அல்லது ஷார்ட் ஹேண்ட் பேக்குகளைப் பயன்படுத்தலாம். கேஷுவல் லுக்கை விரும்புவோர் ஃப்ன்கி ஸ்டைலில் (Funky Style) டிரெண்டியான ஹேண்ட் பேக்குகளை தேர்வு செய்யலாம்.

உள்ளாடைத் தேர்வில் கவனம்

தகுந்த உள்ளாடைகளைத் தேர்வுசெய்து அணிய வேண்டியது அவசியம். பிரேஸியரைப் பொறுத்தவரை வயர்ட், பேடட், புஷ்அப் பிரா, டி-ஷர்ட் பிரா, ஸ்போர்ட்ஸ் பிரா என நிறைய வகைகள் இருக்கின்றன. உங்கள் உடல்வாகு, அணியும் ஆடைக்கு ஏற்ற பிரேஸியரை தேர்வு செய்ய வேண்டும்.

பிரேஸியர் வாங்கும்போது கப் சைஸ் பார்ப்பது அவசியம். கப் சைஸ் A,B,C என்ற மூன்று அளவுகளில் கிடைக்கும். உதாரணமாக 32 A என்பது 32 என்ற அளவில் சிறிய கப் சைஸ் பிரேஸியர். 32B சராசரி கப் சைஸ், 32C என்பது பெரிய அளவு கப் சைஸ் கொண்டது.

ஒரே டைப் பிரேஸியரை எல்லா ஆடைகளுக்கும் பயன் படுத்தக் கூடாது. உதாரணமாக டி-ஷர்ட் பிரேஸியரை ப்ளவுஸ் அணியும்போது பயன்படுத்தினால் அது உங்களின் மொத்த தோற்றத்தையும் கெடுத்துவிடும்.

உடல் ஷேப்பாக இல்லை என்று நினைப்பவர்கள் ஷேப்பர் வியர் அணிந்து அதற்கு மேல் ஆடைகளை அணிந்து கொள்ளலாம். தொப்பை இருப்பதால் வெஸ்டர்ன் ஆடைகளை அணிய முடியவில்லை என்பவர் வெயிஸ்ட் சின்ச்சர்களை (Waist Cinchers) அணிந்து கொள்ளலாம்.

பேன்ட்டீஸின் லைனர்கள் மிருதுவாக இருப்பது போன்று வாங்கினால், மெல்லிய ஆடை அணிந்தாலும் வெளியே தெரியாது.

கலக்கல் காலணிகள்

காலணி அணிவதற்கு முன் கால்களை மாய்ஸ்ச்சரைஸ் செய்து, காலணிகளைச் சுத்தம் செய்தே பயன்படுத்த வேண்டும்.

மேக்ஸி போன்ற ஆடைகளுக்கு ஹை ஹீல், அல்லது க்ரீக் (Greek Sandlas) காலணிகளைப் பயன்படுத்த லாம். கேஷுவல் ஆடைகளுக்கு ஹை ஹீல் ஷூ, மொக்காசின்ஸ் (Moccasins), ஷூ வித் ஸ்மால் எட்ஜெஸ் பொருத்தமாக இருக்கும்.

டிசைனர் ஆடைகளுக்கு (Pumps) பம்ப்ஸ், ஷூ வித் க்ளோஸ்டு டோ (Shoe with Closed Toe) போன்றவை பொருத்தமானவை.

புடவைகளுக்கு ஜுட்டி (Jutti), ஸ்ட்ராப்பி ஹீல்ஸ் (Strappy Heels) ஸ்டிலிடோஸ் (Stilettos) மோஜாரி ஷூ (Mojari Shoes) போன்றவற்றைத் தேர்வு செய்யலாம்.