விதவிதமான ஹேர் ஸ்டைல்கள், நாள்தோறும் அப்டேட் ஆகும் ஃபேஷன், புதுப் புது அழகு சாதனப் பொருள்களின் வருகை என அதகளப் படுத்திக்கொண்டே இருக்கிறது அழகுத்துறை. நாமும் அதற்கேற்றவாறு அப்டேட் ஆக வேண்டாமா? அதற்கான அரிய வாய்ப்பு காத்திருக்கிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உற்சவா கிரியேஷன்ஸ் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடத்திவரும் மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் கருத்தரங்கு கோவையில் நடைபெறவுள்ளது. சின்னத்திரை நடிகையும் செலிபிரிட்டி மேக்கப் ஆர்ட்டிஸ்டுமான சந்தோஷி ஸ்ரீகர் கருத்தரங்கில் பங்கேற்று பயிற்சி அளிக்கவிருக்கிறார்.
கோவை பீளமேட்டிலுள்ள ஹோட்டல் விஜய் எலன்ஸாவில் ஏப்ரல் 10-ம் தேதி ஒருநாள் பயிற்சியாக காலை 9 முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
முகம் தொடங்கி, ஹேர்ஸ்டைல், உடை அலங்காரம், வடஇந்திய, தென்னிந்திய ஸ்டைலில் சேலை கட்டுவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளைத் தர இருக்கிறார் சந்தோஷி.

மேலும் மார்க்கெட்டில் வந்திருக்கும் புதிய வகை அழகு சாதனப் பொருள்கள், அவற்றின் விலை, எப்படிப் பயன்படுத்துவது என்பன போன்ற விவரங்களையும் அளிப்பார். கட்டண கருத்தரங்காக நடைபெறும் இதில் பயிற்சியை முடிப்பவர்களுக்குச் சான்றிதழும் வழங்கப்படும்.