Published:Updated:

என்ன நெக் டிசைனுக்கு எந்தக் கம்மல்... மேட்சிங் டிப்ஸ்!

காலர் நெக்லைனில் ஹை காலர், போலோ காலர், ரவுண்டு காலர், ஸ்டாண்டிங் காலர், சைனீஸ் காலர், பீட்டர் பேன் காலர், பேக் ஹை காலர் என நிறைய டிசைன்கள் உள்ளன.

பிரீமியம் ஸ்டோரி
பிரபா
பிரபா

ஜிமிக்கி கம்மல் தொடங்கி இயர் கஃப் வரை உங்கள் அலமாரியில் ஒரு ஃபேன்சி ஸ்டோரே இருக்கும். ஆனாலும் எந்த ஆடைக்கு எந்தக் காதணி அணியலாம் என்ற குழப்பம் எப்போதும் இருக்கும். ‘அணியும் ஆடைகளுக்கு மேட்ச்சாகுமா என யோசிப்பதைவிட, உடைகளின் நெக் லைனுக்கேற்ப காதணிகளைத் தேர்வு செய்வதே சரி’ என்கிறார் ஃபேஷன் டிசைனர் பிரபா. அதற்கான டிப்ஸையும் வழங்குகிறார்.

என்ன நெக் டிசைனுக்கு எந்தக் கம்மல்... மேட்சிங் டிப்ஸ்!

போட் நெக் லைன்

போட் நெக் பிளவுஸ் அணிந்து புடவை அல்லது ஸ்கர்ட் அண்டு டாப் அணிகிறீர்கள் என்றால் நடுத்தர நீளமுள்ள (Mid Length) காதணிகளை அணியலாம். டிரெண்டியான ஆடைகளுக்கு அதிக வேலைப்பாடுகள் இல்லாத டிராப் இயர் ரிங்ஸை (Drop Earrings) தேர்வு செய்யலாம். போட் நெக்லைன் வைத்த ஆடைகளுக்கு நெக் பீஸ் வேண்டிய தில்லை.

என்ன நெக் டிசைனுக்கு எந்தக் கம்மல்... மேட்சிங் டிப்ஸ்!

காலர் நெக் லைன்

காலர் நெக்லைனில் ஹை காலர், போலோ காலர், ரவுண்டு காலர், ஸ்டாண்டிங் காலர், சைனீஸ் காலர், பீட்டர் பேன் காலர், பேக் ஹை காலர் என நிறைய டிசைன்கள் உள்ளன. காலர் நெக் லைன் உங்கள் சாய்ஸ் எனில் ஜாக்கெட் இயர் ரிங்ஸ் (Jacket Earrings) சிங்கிள் ஸ்டோன் ஸ்டட், ஹக்கி இயர் ரிங்ஸ் (Huggie Earrings) போன்றவை பெஸ்ட் சாய்ஸ். பட்டுப் புடவைக்கு காலர் நெக் லைன் வைத்த பிளவுஸ் அணி கிறீர்கள் என்றால் ஜிமிக்கி பொருத்த மாக இருக்கும்.

என்ன நெக் டிசைனுக்கு எந்தக் கம்மல்... மேட்சிங் டிப்ஸ்!

V நெக் லைன்

இதில் டீப் V நெக் (Deep V Neck), ராப் நெக் (Wrap Neck), சிம்பிள் V நெக் (Simple V Neck) என மூன்று வகைகள் இருக்கின்றன. ஷர்ட், டி- ஷர்ட், கவுன் போன்ற ஆடைகளுக்கு நீளமான டாங்கல் இயர் ரிங்ஸ் (Dangle Earrings), த்ரெடர் இயர் ரிங்ஸ் (Threader Earrings) நன்றாக இருக்கும். டிரெடிஷனல் ஆடைகள் எனில் ஸ்டோன், மணி வேலைப்பாடுகளுடன் கூடிய நீளமான காதணிகளைத் தேர்வு செய்யலாம். டீப் V நெக் பிளவுஸ் எனில் காதணிகளைவிட நெக்பீஸில் அதிக கவனம் செலுத்துங்கள். டிசைனர் புடவைக்கு நீளமான சாண்டேலியர் இயர் ரிங்ஸ் (Chandelier Earrings) ஓகே.

என்ன நெக் டிசைனுக்கு எந்தக் கம்மல்... மேட்சிங் டிப்ஸ்!

ஸ்கொயர் நெக் லைன்

ஸ்கொயர் நெக் லைன் வைத்த உடைகளை அணியும்போது உங்களின் தோள்பட்டை எலும்புகள் பார்ப்பவர்களின் கண்களை உறுத்தாமல் ஆபரணங்களை மேட்ச் செய்ய வேண்டும். டிரெடிஷனல் ஆடைகளுக்கு அதிக வேலைப்பாடுகளுடன் கூடிய நீளமான காதணிகளைத் தேர்வு செய்யலாம். கூடியவரை ஜிமிக்கி கம்மல்களைத் தவிருங்கள்.

என்ன நெக் டிசைனுக்கு எந்தக் கம்மல்... மேட்சிங் டிப்ஸ்!

ஹை ரவுண்டு நெக் லைன்

ஹை ரவுண்டு நெக் லைன் பிளவுஸ் அணிந்து டிரெடிஷனல் ஆடைகளை மிக்ஸ் மேட்ச் செய்கிறீர்கள் என்றால் கிராண்டான ரவுண்டு ஷேப் க்ளஸ்டர் இயர் ரிங்ஸ் (Cluster Earrings) பொருத்தமான தேர்வு. பிளெயின் பிளவுஸ் என்றால் நடுத்தர நீளமுள்ள ஜிமிக்கி அணிந்து சோக்கருடன் மிக்ஸ் மேட்ச் செய்யலாம். டிசைனர் புடவைகளுக்கு சாண்டேலியர் மாடல் (Chandelier Earrings) இயர் ரிங்ஸும், வெஸ்டர்ன் உடைகளுக்கு சிம்பிளான ஸ்டோன் தோடுகளும் பொருத்தமாக இருக்கும். ஹை ரவுண்டு நெக் லைன் கொண்ட ஆடைகள் அணியும்போது, தோள்பட்டைவரை தொங்கும் நீளமான கம்மல்கள் அணிவதைத் தவிர்த்து விடுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு