Published:Updated:

`We did it!' - `மிஸ் யுனிவர்ஸ்' ஹர்னாஸ் சாந்துவின் ஆடையை வடிவமைத்த திருநங்கை சயிஷா

திருநங்கை ஆடை வடிவமைப்பாளர் சயிஷா ஷிண்டே
News
திருநங்கை ஆடை வடிவமைப்பாளர் சயிஷா ஷிண்டே

`மிஸ் யுனிவர்ஸ்' போட்டிக்கான ஆடையை வடிவமைத்தவர் சயிஷா ஷிண்டே என்ற ஆடை வடிவமைப்பாளர். பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான கரீனா கபூர், ஷ்ரதா கபூர், கியாரா அத்வானி, அனுஷ்கா ஷர்மா, சன்னி லியோன், தீபிகா படுகோன் போன்ற நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார்.

லாரா தத்தாவுக்குப் பிறகு 20 ஆண்டுகள் கழித்து மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற இந்தியர் ஹர்னாஸ் கவுர் சாந்துவை நாடே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இறுதிச்சுற்றில் அவர் அணிந்திருந்த பீஜ் நிற கவுன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் ஹர்னாஸ் அணிந்திருந்த ஆடை
மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் ஹர்னாஸ் அணிந்திருந்த ஆடை

ஹர்னாஸின் அந்த ஆடையை வடிவமைத்தவர் ஆடை வடிவமைப்பாளர் சயிஷா ஷிண்டே. இவர் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம், திருநங்கையாக மாறியதாக தன் இன்ஸ்டாகிராம் தளத்தில் அறிவித்தார்.

பாலிவுட்டின் முன்னனி நடிகைகளான கரீனா கபூர், ஷ்ரதா கபூர், கியாரா அத்வானி, அனுஷ்கா ஷர்மா, சன்னி லியோன், தீபிகா படுகோன் போன்ற நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார்.

`மிஸ் யுனிவர்ஸ்' போட்டி நிறைவு பெற்றதையடுத்து, ஹர்னாஸுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவர் வடிவமைத்த ஆடையை அணிந்த ஹார்னாஸின் போட்டோவைப் பதிவிட்டு அதில் `We did it' என்று குறிப்பிட்டிருக்கிறார் சயிஷா. அதற்கு பதிலளித்துள்ள ஹர்னாஸ், `Thank you for the lucky charm, you are!' என்று பதிலளித்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

Costume designer Saisha Shinde
Costume designer Saisha Shinde

ஆணாக ஆடை வடிவமைத்ததற்கும் திருநங்கையாக மாறிய பின்னர் தன்னுடைய ஆடை வடிவமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களையும் பற்றி சயிஷா கூறும்போது, ``37 வருடங்களாக இருந்ததைத் காட்டிலும் தற்போது சயிஷாவாக இருப்பது மனதுக்கு நிறைவாக உள்ளது. நான் திருநங்கையாக மாறிய முடிவு சரியானதுதான். அதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஓர் ஆணாக ஆடை வடிவமைத்ததற்கும் பெண்ணாக ஆடை வடிவமைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆணாக இருந்தபோது ஒரு பெண்ணுக்கு இந்த உடை அழகாக இருக்கும் என்று நினைத்து வடிவமைப்பேன். பெண்ணாக உணர்ந்து வடிவமைக்கும்போது சின்ன சின்ன விஷயங்களில்கூட அதிக கவனம் செலுத்தி அதை மேலும் அழகாக்குகிறேன்" என்கிறார்.

Saisha Shinde
Saisha Shinde

``நான் திருநங்கையாக மாறியதை மதிக்கும் விதமாக எனது டீமில் உள்ளவர்கள் `மேம்' என்று கூப்பிடுவதை நினைத்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.