Published:Updated:

ஆன்லைனில் ஃபேஷன் ஷோ!

ஃபேஷன் ஷோ
பிரீமியம் ஸ்டோரி
ஃபேஷன் ஷோ

நியூ டிரெண்ட்

ஆன்லைனில் ஃபேஷன் ஷோ!

நியூ டிரெண்ட்

Published:Updated:
ஃபேஷன் ஷோ
பிரீமியம் ஸ்டோரி
ஃபேஷன் ஷோ

லரும் ஆன்லைனில் மருத்துவம், கல்வி மற்றும் தொழில் சார்ந்த ஆலோ சனைகளை நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில் ஃபேஷன் ஷோவையே நடத்திமுடித்துவிட்டார் சியாஶ்ரீ.

ஆன்லைனில் ஃபேஷன் ஷோ!

கடந்த சில தினங்களுக்கு முன்பு சியாவின் ‘எஃப்ஃபேஸ் கிரியேட்டர்ஸ்’ என்ற ஃபேஷன் நிறுவனமும், அவள் விகடனும் இணைந்து நடத்திய ‘Congeniality Stars, South India’ என்ற டிஜிட்டல் ஃபேஷன் ஷோ ஆன்லைனில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்தப் புது முயற்சியைக் கையிலெடுத்து ஃபேஷன் ஷோவை நடத்தி முடித்த ‘எஃப்ஃபேஸ் கிரியேட்டர்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளரும் நிறுவனருமான சியாஶ்ரீ நம்மிடம் பேசுகையில்...

சியாஸ்ரீ
சியாஸ்ரீ
ஆன்லைனில் ஃபேஷன் ஷோ!

“நான் கடந்த எட்டு வருஷமா ஃபேஷன் துறையில இருக்கேன். சில திரைப்படங்களிலேயும், ‘ராஜா ராணி’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ போன்ற தொடர்களிலும் ஆடை வடிவமைப்பாளரா பணியாற்றியிருக்கேன். ஃபேஷன் துறையில் ஏதாவது புதுசா செய்யணும் என்கிற ஆர்வம் ‘எஃப்ஃபேஸ் கிரியேட்டர்ஸ்’ என்ற நிறுவனத்தை ஏற்படுத்த காரணமா இருந்தது. இந்த நிறுவனத்தின் மூலம் பல ஃபேஷன் ஷோக்களை நடத்தி வந்தேன். ஆனா, கொரோனா லாக்டௌன் காரணமா அது எல்லாமே தடைபட்டன.

ஆன்லைனில் ஃபேஷன் ஷோ!

என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருந்தப்போ இந்த டிஜிட்டல் ஃபேஷன் ஷோ ஐடியா க்ளிக் ஆச்சு. ‘Congeniality stars, South India’ கான்செப்ட்ல ஒரு ஃபேஷன் ஷோ நடத்தினோம். தென்னிந்தியா வைச் சேர்ந்த 150 மாடல்கள் இந்தப் போட்டியில கலந்துக் கிட்டாங்க. ஃபேஷன் மாடல், ஃபிட்னஸ் மாடல், ப்ளஸ் சைஸ் மாடல், டிசைனர் ஸ்டைலிஸ்ட், மேக்அப் ஆர்ட்டிஸ்ட், ஹேர் ஸ்டைலிஸ்ட், போட்டோ கிராபர், மெஹந்தி ஆர்ட் டிஸ்ட்ன்னு பல பிரிவுகள் இந்தப் போட்டியில் இருந்தன. போட்டியாளர்கள் எல்லாரும் இன்ஸ்டா லைவ் மூலமா இந்த ஷோவுல கலந்துக்கிட்டாங்க.

ஆன்லைனில் ஃபேஷன் ஷோ!

போட்டியாளர் தங்களோட போட்டோஸ், ரேம்ப் வாக் வீடியோ, மேக்அப் டிசைன்ஸ், மெஹந்தி மாடல் எல்லாத்தையும் இன்ஸ்டா லைவ்ல ஷேர் பண்ணினாங்க. இதைப் பார்த்து போட்டி நடுவர்கள் போட்டியாளர்களுக்கு மதிப்பெண் வழங்கினாங்க. தங்கள் மனம்கவர்ந்த போட்டியாளர்களுக்கு இன்ஸ்டா, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களின் வழியா பொதுமக்கள் வாக்களிச்சாங்க. இதன் அடிப்படையில வெற்றியாளர்களைத் தேர்வு செய்தோம்.

ஆன்லைனில் ஃபேஷன் ஷோ!
ஆன்லைனில் ஃபேஷன் ஷோ!

லாக்டௌன் காரணமா யாராலயும் வெளியில போக முடியாததால மாடல்ஸ் எல்லாரும் தங்களுக்குக் கிடைச்ச நியூஸ் பேப்பர், காய்கறிகள், பிளாஸ்டிக் கவர் போன்ற எளிமையான பொருள்களை வைத்தே அவங்களுக்கான ஆடைகளை வடிவமைச்சிருந்தாங்க. எல்லாமே ரொம்பப் புதுமையா இருந்தது. உண்மையா சொல்லணும்னா இந்த ஃபேஷன் ஷோ நாங்க எதிர்பார்த்ததைவிட நல்லாவே வந்திருக்கு. இனிவரும் காலங்களில் ‘டிஜிட்டல் ஃபேஷன் ஷோ’தான் டிரெண்ட். இதுமாதிரி இன்னும் நிறைய போட்டிகளை நடத்தி ஃபேஷன் கலைஞர்களுக்கு தங்களோட திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை உருவாக்கித் தருவோம்” என்று நிறைவாகக் கூறி முடிக்கிறார் சியாஶ்ரீ.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism