Published:Updated:

பிரின்ட்டடு மெட்டீரியல்கள்... சம்மருக்கேற்ற சாய்ஸாக மாற்றுங்கள்...

பிரின்ட்டடு மெட்டீரியல்கள்
பிரீமியம் ஸ்டோரி
பிரின்ட்டடு மெட்டீரியல்கள்

அலுவலகம் செல்பவர்கள் இக்கட், செக்டு, சிங்கிள் லைன், அல்லது சிம்பிள் காரி (Khari) டிசைன் மெட்டீரியல்களை தேர்வு செய்து அணியலாம்

பிரின்ட்டடு மெட்டீரியல்கள்... சம்மருக்கேற்ற சாய்ஸாக மாற்றுங்கள்...

அலுவலகம் செல்பவர்கள் இக்கட், செக்டு, சிங்கிள் லைன், அல்லது சிம்பிள் காரி (Khari) டிசைன் மெட்டீரியல்களை தேர்வு செய்து அணியலாம்

Published:Updated:
பிரின்ட்டடு மெட்டீரியல்கள்
பிரீமியம் ஸ்டோரி
பிரின்ட்டடு மெட்டீரியல்கள்

அதிக வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகள் கோடைக்காலத்தில் எரிச்சல் உணர்வைத் தரும். `சம்மருக்கு பெஸ்ட் சாய்ஸ் பிரின்ட்டடு மெட்டீரியல்கள்’ என்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த டிசைனர் ஹரி நந்தினி சங்கீத். அவற்றைத் தேர்வுசெய்யும் டிப்ஸையும் பகிர்கிறார்.

பிரின்ட்டடு மெட்டீரியல்கள்... சம்மருக்கேற்ற சாய்ஸாக மாற்றுங்கள்...

ஃபார்மல் லுக்

அலுவலகம் செல்பவர்கள் இக்கட், செக்டு, சிங்கிள் லைன், அல்லது சிம்பிள் காரி (Khari) டிசைன் மெட்டீரியல்களை தேர்வு செய்து அணியலாம்.

அதிக ஃப்ளோரல் டிசைன்களை தவிர்த்துவிடுவது நல்லது.

வெளிர் நிறம் அல்லது பேஸ்டல் நிற மெட்டீரியல்களை தேர்வு செய்து அணியலாம்.

சைனீஸ் காலர் (Chinese Collar) மற்றும் ஸ்ட்ரெயிட் கட் குர்தி (Straight Cut) ஆடைகள் புரொஃபஷனல் லுக் தரும்.

பிரின்ட்டடு மெட்டீரியல்கள்... சம்மருக்கேற்ற சாய்ஸாக மாற்றுங்கள்...

கேஷுவல் லுக்

லெஹெரியா (Leheriya) சங்கனேரி (Sanganeri Prints ) போல்கா டாட் (Polka Dot) பாந்தினி பிரின்டஸ், பத்திக் (Batik) குவர்கி பிரின்ட் (Quirky Print Fabric) போன்றவை கேஷுவல் லுக்குக்குப் பொருத்தமான பிரின்ட் வகைகள்.

இவற்றில் மேக்ஸி, ஷார்ட் டிரஸ், ஸ்கர்ட் அண்ட் டாப் போன்றவற்றை வடிவமைக்கலாம்.

வார்ம் மற்றும் நியான் நிறங்கள் கேஷுவல் லுக்குக்குப் பொருத்தமான தேர்வு.

கேஷுவல் லுக்குக்கு ஆடை முழுவதுமே பிரின்ட் இருந்தாலும் அழகாகத்தான் இருக்கும் என்பதால் டாப் மற்றும் பாட்டம் இரண்டுமே பிரின்ட்டடாக இருக்கலாம்.

பிரின்ட்டடு மெட்டீரியல்கள்... சம்மருக்கேற்ற சாய்ஸாக மாற்றுங்கள்...

ஃபங்ஷன் லுக்

பட்டோலா (Patola Print), மோட்டிஃப் (Motif) டெம்பிள் பிரின்ட்ஸ் (Temple Prints) போன்றவை பொருத்தமான பிரின்ட் மெட்டீரியல் வகைகள்.

கோல்டன் நிற பிரின்ட் வகை களைத் தேர்வு செய்யலாம்.

எத்னிக் லுக்குக்காக பிரின்ட்டடு மெட்டீரியலில் ஆடைகள் வடிவமைக்கும்போது, மார்புப் பகுதி வரை பிரின்ட் இருப்பது போன்று வடிவமைத்தால் நீட் லுக் கிடைக்கும். கிராண்ட் லுக் வேண்டும் என்றால் ஆடை முழுவதுமே பிரின்ட் இருப்பது போன்று வடிவமைத்துக் கொள்ளலாம்.

மிரர் அல்லது எம்பிராய்டரி செய்யப்பட்ட துப்பட்டாக்களை மேட்ச் செய்யலாம். ஓவர் ஜாக்கெட் அணிந்தால் இண்டோவெஸ்டர்ன் லுக்கில் அசத்தலாம்.

 ஹரி நந்தினி சங்கீத்
ஹரி நந்தினி சங்கீத்

டிரெடிஷனல் லுக்

டிரெடிஷனல் லுக் பிரியைகள் சில்க் காட்டன், கைத்தறி மெட்டீரியல்களில் புட்டி பிரின்ட்ஸ் (Buti Prints) அஜ்ரக் பிரின்ட்ஸ் (Ajrakh Prints), செக்டு போன்ற வகைகளைத் தேர்வு செய்யலாம்.

சிவப்பு, பச்சை, மஞ்சள் போன்ற டிரெடிஷனல் நிறங்கள் அழகாகக் காட்டும்.

டிப்ஸ்

உயரம் குறைவாக உள்ளவர்கள் வட்ட, செவ்வக வடிவ பிரின்ட்டுகளை தவிர்த்து ஃப்ளோரல் டிசைன், முக்கோண வடிவங்கள், நீள வடிவ கோடுகள் கொண்ட ஆடைகளைத் தேர்வு செய்யலாம். ஒரே ஆடையில் வெவ்வெறு நிறங்கள் கொண்ட மெட்டீரியல்களைத் தேர்வு செய்வதைத் தவிர்க்கவும்.

* பருமனானவர்களுக்கு சிம்பிளான ஃப்ளோரல் டிசைன் கொண்ட ஆடைகள் பொருத்தமாக இருக்கும்.

* உயரமான பெண்களுக்கு இக்கட் பிரின்ட் மெட்டீரியல் கூடுதல் அழகு...