Published:Updated:

`டீப் V நெக்லைன், பெல்லி பட்டன் ஸ்டட்...!'- கிராமி விருது விழாவில் பிரியங்கா சோப்ரா

பிரியங்கா - நிக் ஜோனஸ்
பிரியங்கா - நிக் ஜோனஸ் ( instagram )

டீப் V நெக்லைன் டிசைன்தான் இந்த கவுனின் ஹைலைட். மேலும், பெல்லி பட்டனில் பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த கிரிஸ்டல் ஸ்டட் செம்ம ஹாட்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பரபரப்பாகப் பேசப்படும் அளவுக்கு உடையணியும் பாலிவுட் பிரபலங்களில் முக்கியமானவர் பிரியங்கா சோப்ரா. 2019-ல் நடந்த `மெட் கலா' நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த உடை, கொடுக்கப்பட்ட கான்செப்டுக்கான நியாயத்தைச் செய்தாலும் நெட்டிசன்களால் மீம்ஸ் போடுமளவுக்கு ட்ரோல் செய்யப்பட்டது.

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா
instagram

தற்போது 2020-ம் ஆண்டுக்கான 62-வது கிராமி விருது நிகழ்ச்சியில் பிரியங்கா அணிந்துவந்த உடையைப் பார்த்த நெட்டிசன்கள் அடுத்த பரபரப்பை ஆரம்பித்துவிட்டனர். கிராமி விருது நிகழ்ச்சிக்கு முன்னர் நடந்த பார்ட்டியில் கலந்துகொண்ட பிரியங்கா, பேக்லெஸ் ஹால்டெர் நெக் கவுன், நீண்ட பக்கவாட்டு ஸ்லிட், லாங் ட்ரெயின் என `நிக்கோலஸ் ஜெப்ரான்' பிராண்டின் டிசைனில், ரோஸ் கோல்டு நிற சாட்டின் மெட்டீரியல் கவுனின் பளபளப்பில் அனைவரின் கண்களையும் கவர்ந்தார்.

பிரியங்கா, நிக் ஜோனஸ் இருவரும் கவனம் ஈர்க்கும் வகையில் உடையணிவதில் தேர்ந்த ஜோடி எனப் பெயர் பெற்றவர்கள். இந்நிகழ்ச்சியின் ரெட் கார்பெட்டுக்கு பிரியங்கா ஐவரி நிறத்திலும், நிக் ஜோனஸ் தங்க நிறத்திலும் உடையணிந்துவந்து `பெஸ்ட் கபுள் லுக்'கில் அனைவரையும் பொறாமைப்பட வைத்தனர்.

`டீப் V நெக்லைன், பெல்லி பட்டன் ஸ்டட்...!'- கிராமி விருது விழாவில் பிரியங்கா சோப்ரா

ஐவரி கலர் க்ரேப் சில்க் மெட்டீரியலில் ஹேண்டு பெயின்ட், 3D ஆர்கன்ஸா பெட்டல்ஸ், ஓபல் ஸ்டோன்களை வைத்து ஸீக்வென்ஸ் வேலைப்பாடு என தகதகக்கும் உடையில், பெல் ஸ்லீவில் ஐவரி மற்றும் பீச் நிற ஃபிரின்ஜ் அட்டாச் செய்யப்பட்டுள்ள இந்த உடையை பிரபல பிரிட்டிஷ் லேபிளான `ரால்ஃப் அண்டு ரஸ்ஸோ' டிசைன் செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கழுத்திலிருந்து தொப்புள் பகுதிவரை ஓப்பனாக இருப்பதுபோன்ற டீப் V நெக்லைன் டிசைன்தான் இந்த கவுனின் ஹைலைட். மேலும், பெல்லி பட்டனில் பிரியங்கா அணிந்திருந்த கிரிஸ்டல் ஸ்டட் செம்ம ஹாட். இவ்வுடையில் கிளாமராக இருந்த பிரியங்காவின் புகைப்படத்தை நெட்டிசன்கள் வைரலாக்கினர்.

ஜெனிஃபர் லோபஸ்
ஜெனிஃபர் லோபஸ்
billboard.com

இன்னும் சிலர், 2000-ம் ஆண்டு கிராமி விருது விழாவில் ஜெனிஃபர் லோபஸ் அணிந்திருந்த உடையைப் போன்று இது இருப்பதாகவும், இருவரில் யாருக்கு இது பொருத்தமாக இருக்கிறது என்பது போன்ற விவாதத்தையும் தொடங்கிவிட்டனர்.

இது ஒருபுறம் இருக்க, விருது விழா நடைபெற்ற ஜனவரி 26-ம் தேதியன்று, அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து வீரரான கோப் பிரயன்ட் விபத்தில் மரணமடைந்தார். பிரியங்கா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரயன்ட்டுக்காக ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

மகளுடன் பிரயன்ட்
மகளுடன் பிரயன்ட்
showbox channel

மேலும், கிராமி விருது விழாவில் பிரியங்கா தன் வலது ஆள்காட்டி விரல் நகத்தில் பிரயன்ட்டின் ஜெர்ஸி நம்பரான '24' எண்ணை வரைந்திருந்தார். ஒரு தரப்பு நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்ய, மறுதரப்பினர், `பிரயன்ட்டுக்கு மரியாதை செய்த பிரியங்காவின் மீது மதிப்பு ஏற்படுகிறது' என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு