Published:Updated:

`கேரளா முண்டு ஸ்டைல் உடையில் ரம்யா பாண்டியன்!' - லேட்டஸ்ட் போட்டோ ஷூட்

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

பிரபலமான 'பிளேபாய்' பத்திரிகையில் வேலை செய்த முதல் இந்திய போட்டோகிராபரான எல்.ராமசந்திரன் மற்றும் ரம்யா பாண்டியன் காம்போவில் வெளிவந்த வித்தியாசமான கான்செப்ட் ஷூட்.

நடிகையாவதற்கு முன்பு மாடலாக இருந்தவர் ரம்யா பாண்டியன். அதன் பிறகு சினிமா துறைக்கு வந்து 'ஜோக்கர்', 'ஆண் தேவதை' போன்ற படங்களில் நடிப்பில் அசத்தினார்.

'மொட்டை மாடி' ரம்யா பாண்டியன்
'மொட்டை மாடி' ரம்யா பாண்டியன்
instagram

ஆனால், திடீரென ஒரே ஒரு போட்டோ ஷூட்டின் மூலம் நெட்டிசன்கள் மத்தியில் வைரலானார். மொட்டைமாடியில் நடந்த கேஷுவலான போட்டோ ஷூட்டுக்குப் பிறகு, அதற்கு நேரெதிரான ஒரு போட்டோ ஷூட்டை செய்து முடித்திருக்கிறார் ரம்யா பாண்டியன்.

சென்ற முறை மேக்கப் இல்லாமல், கேஷுவலாக வீட்டின் மொட்டை மாடியிலேயே ஷூட்டை முடித்த ரம்யா, இம்முறை புரொஃபஷனல் மேக்கப், ஹேர் டிரெஸ்ஸிங் எனக் கான்செப்ட் போட்டோ ஷூட் செய்து அசத்தியிருக்கிறார்.

சர்வதேச புகைப்படக் கலைஞர் எல். ராமசந்திரன்
சர்வதேச புகைப்படக் கலைஞர் எல். ராமசந்திரன்

இன்டர்நேஷனல் போட்டோகிராபரான ராமசந்திரன் ஷூட் செய்திருக்கிறார். இவர், 2019-ல் தன் நண்பர்கள் ஐந்து பேருடன் இணைந்து 950 பேருக்கு 'பேஸ் பெயின்டிங்' செய்த கின்னஸ் சாதனையாளர்.

தவிர பிரபலமான 'பிளேபாய்' பத்திரிகையில் வேலை செய்த முதல் இந்திய போட்டோகிராபரும்கூட. இவர்கள் இருவரின் காம்போவில் வெளிவந்த வித்தியாசமான கான்செப்ட் ஷூட் குறித்து ரம்யாவிடம் பேசியதில்...

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

"என்னுடைய மொட்டைமாடி போட்டோஸைப் பார்த்த ராமச்சந்திரன் சார், அவரின் கிரியேடிவ் டைரக்டர் மூலமா, `ஒரு போட்டோ ஷூட் நடத்தலாமா?' என என்னைக் கேட்டார். பொதுவாவே போட்டோ ஷூட்டில் ஆர்வம் அதிகமா இருக்குற நான், ஒரு இன்டர்நேஷனல் போட்டோகிராபருடன் வேலை செய்யும் வாய்ப்பை எப்படி மிஸ் பண்ணுவேன்.

'உங்களுடைய மொட்டைமாடி ஷூட்டுக்கு கான்ட்ராஸ்டா ஒரு கான்செப்ட் ஷூட் பண்ணலாமா'ன்னு ஆரம்பிச்ச பேச்சு கடைசியில் 'கடவுள் போன்ற கான்செப்ட்டில் போட்டோ எடுக்கலாமா' என்ற கேள்விக்கு வந்தது. முதல் முறையா இன்டர்நேஷனல் போட்டோகிராபருடன் பக்கா புரொஃபஷனல் ஷூட் என்பதால் ரொம்பவே ஆர்வமா சம்மதிச்சேன்.

எடப்பாடி `கோட்' , மோடி `வேட்டி' , ரம்யா பாண்டியன் `ஹிப் செயின்' - 2019-ன் டிரெண்டிங் லுக்ஸ்!

காஸ்ட்யூம், மேக்கப் மட்டுமல்லாம பேக்ரவுண்டுக்கு ஆர்ட் டிபார்ட்மென்ட் வைத்து செட் எல்லாம் போட்டது புது அனுபவமா இருந்துச்சு. கடவுள் கான்செப்ட், ஒரு கேரளா முண்டு டிரெஸ் கான்செப்ட்டுன்னு இதோடு இன்னும் வேற ரெண்டு கெட்டப்பும் இருக்கு. ஆனா அந்த ரெண்டு கெட்டப்பையும் இன்னும் ரிலீஸ் பண்ணல" என்றார்.

பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் அடுத்த போட்டோ ஷூட்டில் இப்போது ரம்யா படு பிஸி..!

அடுத்த கட்டுரைக்கு