Election bannerElection banner
Published:Updated:

`100 காஸ்ட்யூம்ஸ், 5 டிசைனர்ஸ், 10 நாள்!' - `பிக்பாஸ்' ரம்யாவின் ஃபேஷன் சீக்ரெட்ஸ் பகிரும் சகோதரி

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

ரம்யாவின் பிக்பாஸ் ஆடைகள் குறித்து ரம்யாவின் சகோதரியும் ஃபேஷன் டிசைனருமான சுந்தரி பகிர்ந்த தகவல்கள் இங்கே...

பிக்பாஸ் சீஸன் - 4 முடிவடையும் நேரத்தை எட்டியுள்ளது. மக்களிடையே யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு போட்டியாளரை ஆதரிக்கவும் நிறைய ஆர்மிகள் உருவாகியுள்ளன. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த நாள் முதல் இருந்து இப்போது வரை எல்லா சூழலையும் புன்னகையால் கடந்து செல்பவர் ரம்யா பாண்டியன். சாஃப்ட் ஹேட்டர் என்று சொல்லப்பட்டாலும், பிக்பாஸில் நடந்த எல்லா டாஸ்க்கிலும் தன்னுடைய முழு முயற்சிகளைக் கொடுத்தவர்.

Bigg boss season 4 Ramya Pandian
Bigg boss season 4 Ramya Pandian

ரம்யாவின் கூல் ஆட்டிடியூட் மற்றும் வெரைட்டியான டிரெஸ்ஸிங் சென்ஸுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கடந்த 100 நாள்களில் ரம்யா அணிந்து வந்த ஒவ்வோர் ஆடையும் ஏதோ ஒரு வகையில் பார்வையாளர்களை ஈர்க்கும் விதத்தில் இருந்தது. ரம்யாவின் பிக்பாஸ் ஆடைகள் குறித்து ரம்யாவின் சகோதரியும் ஃபேஷன் டிசைனருமான சுந்தரி பகிர்ந்த தகவல்கள் இங்கே.

``ரம்யாவுக்கு எப்போதுமே ஃபேஷன் ஆர்வம் அதிகம். புதுசா என்ன டிரெண்ட் வந்துருக்குதுனு அப்டேட்டடா இருப்பா. சாதாரண சூழல்ல அவளுக்கு கேஷுவல் ஆடைகள் அல்லது சிங்கிள் பீஸ் ஆடைகள் ரொம்ப பிடிக்கும். ஆனா, பிக்பாஸ் ஷோவுக்கு வெரைட்டியான ஆடைகளைக் கொடுத்து அனுப்பினோம். ரம்யா பிக்பாஸ் போறதுக்கு 10 நாள்களுக்கு முன்னாடிதான் அவ பிக்பாஸ்க்கு போறதே எங்களுக்குத் தெரிஞ்சுது. பிக்பாஸ் ஷோ - 100 நாள். ரம்யா அதில் எத்தனை நாள் இருப்பானு சொல்ல முடியாது என்பதால் குறைஞ்சது 100 டிரெஸ்ஸாவது தேவைப்பட்டுச்சு.

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

இந்த சீஸனைப் பொறுத்தவரை ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், நியூ இயர், பொங்கல்னு நிறைய விஷேச நாள்களும் இருந்ததால் கூடுதலாக நிறைய டிசைனர் ஆடைகளும் தேவைப்பட்டுச்சு. நானும் என் தங்கச்சி ரம்யாவும் சேர்ந்து முதலில் என்ன மாதிரியான ஆடைகள் வேணும்னு பிளான் பண்ணோம்.

ஒரே மாதிரியான டிரெஸ் ஆக இல்லாமல் ஷார்ட் டிரெஸ், லாங் கவுன், லெஹெங்கா, ஜீன் - ஷர்ட், புடவைனு ஆடைகளுக்கான தேவைகளைப் பிரிச்சுகிட்டோம். நிறங்களைப் பொறுத்தவரை இப்போ பேஸ்டல் நிறங்கள் டிரெண்டில் இருப்பதால் பேஸ்டல் நிற ஆடைகளை ரம்யாவும் விரும்பினா. ஆனால், பேஸ்டல் நிறங்களை மட்டும் தேர்வு செஞ்சா நல்லா இருக்காது. கோல்ட், வார்ம், பிரைட் கலர்ஸ்னு ஆடைகளின் நிறங்களை மிக்ஸ் பண்ணோம். பிக்பாஸ் வீட்டைச் சுற்றி நிறைய லைட்கள் இருப்பதால் வெள்ளை நிறம் மட்டும் அதிகம் பயன்படுத்த வேண்டாம்னு முடிவு பண்ணோம்.

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

நான் டிசைனராக இருந்தாலும் பத்து நாளில் 100 ஆடைகள் வடிவமமைக்கிறது ரொம்ப சிரமமான ஒன்று. அதனால் ஏற்கெனவே ரம்யாவுக்கு டிசைனிங் செய்த நாலு டிசைனர்களையும் என் கூட இணைச்சுக்கிட்டேன். ரம்யா போட்டிருந்த எல்லா ஆடைகளுக்கும் ஜுவல்லரி, காலணிகளை முதலிலேயே மிக்ஸ் மேட்ச் பண்ணிட்டோம். அவ போட்டிருந்த ஆக்ஸிடைஸ்டு நகைகளுக்கு நிறைய வரவேற்பு இருந்துச்சு. உண்மையை சொல்லணும்னா அந்த ஒவ்வொரு நகையும் அவளுக்காக வடிவமைச்சது." என்ற சுந்தரியிடம் ரம்யா பிக்பாஸில் அணிந்திருந்த ஆடைகளில் இருந்த ஸ்பெஷல் பற்றிக் கேட்டோம்.

ஒவ்வோர் ஆடையையும் நிறைய மெனக்கெட்டுதான் வடிவமைச்சுருக்கோம். ஆனாலும் சில ஆடைகள் ரொம்பவே ஸ்பெஷல். கமல் சார் நிகழ்ச்சியன்னிக்கு ரம்யா பர்பிள் நிறத்தில் ஒரு டிரெஸ் போட்டிருந்தா. அந்த ஆடை அவளுக்காக டையிங் செய்து எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்டது. அதே போல் ஷோவில் ரம்யா போட்டிருந்த ஒரு மெரூன் வெல்வெட் ஆடைக்கு நல்ல வரவேற்பு இருந்துச்சு. வெல்வெட்டை ஒரு டிரெண்டாக கொண்டு வரலாம்னு அந்த ஆடையை வடிவமைச்சேன். இப்போ ஒரு புடவை டிசைன் செய்து கொடுத்து இருக்கேன். பொங்கலுக்கு அதைப் பயன்படுத்துவானு நானும் எதிர்பார்த்துட்டு இருக்கேன்" என்ற சுந்தரியிடம், `ரம்யா பாண்டியனுக்கு புடவைகள் பிடிக்கும்னு நிறைய இடத்தில் அவங்களே பகிர்ந்துருக்காங்க. ஆனா பிக்பாஸ் ஷோவில் அதிகமாக புடவைகள் பயன்படுத்தலையே?' என்ற கேள்வியை முன்வைத்தோம்.

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

``ரம்யா ஒரு சாரி லவ்வர். ரொம்ப அழகா கேரி பண்ணுவா. ஆரம்பத்தில் அவளின் மொட்டை மாடி போட்டோ ஷூட் கூட சாரியில்தான் இருக்கும். அந்த ஷூட்டுக்கு போட்டோகிராபர் கான்செப்ட் சொன்னாரு. லைட் வெயிட்டான புடவை வேணும்னு என்கிட்ட கேட்டா, அதனால் நான் லினன் புடவையைத் தயார் செய்து கொடுத்தேன். நிறைய ஷோக்களில் இது வரை எல்லாருமே ரம்யாவை புடவையில் பார்த்துருப்பாங்க. ஒரு மாறுதலா இருக்கட்டுமேனுதான் எல்லா ஆடைகளையும் மிக்ஸ் செய்து வார்ட்ரோப் ரெடி பண்ணோம்." என்ற சுந்தரி பிக்பாஸ் ஷோவிற்கு ரம்யா தயார் ஆன விதம் பற்றி பேசத் தொடங்கினார்.

``ரம்யா எப்போதும் தன்னோட பிட்னெஸ்ஸில் ரொம்ப கவனமாக இருப்பா. மொட்டை மாடி போட்டோஷூட்டிற்கு பிறகு நாலு கிலோ வெயிட் குறைச்சா, தினமும் யோகா, டான்ஸ், உடற்பயிற்சி, டயட்னு எல்லாத்தையும் சரியா ஃபாலோ பண்ணுவா.

ramya pandian
ramya pandian

ஃபிட்னெஸ்ஸை தவிர வேற எந்த மைண்டு பிராக்டிஸும் அவ பண்ணல. வீட்டில் எப்படி கேஷுவலா இருப்பாளோ அப்படிதான் ஷோவிலும் இருக்கா. இந்த ஷோ மூலமா ரம்யா நிறைய பேருடைய இதயத்தை ஜெயிச்சுருக்கா. ரொம்ப சந்தோஷமா இருக்கு " என்று விடைபெறுகிறார் சுந்தரி.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு