Published:Updated:

ஜீன்ஸுக்கு மேலே புடவை... இதுதான் இப்போ டிரெண்ட்!

 கீர்த்தி சுரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
கீர்த்தி சுரேஷ்

ஃபேஷன்

கொசுவம் வைத்து, அரை டஜன் சேஃப்டி பின்களால் அதை நகரவிடாமல் தடுத்து, மடிப்பு கலையாமல் பார்த்துக்கொண்டு... அடிக்கடி புடவை கட்டுவோருக்குத்தான் தெரியும் இந்த இம்சைகள். டோன்ட் வொரி கேர்ள்ஸ்... புடவையை புடவையாக அல்லாமல் வேறு வேறு மாதிரி கட்டிக்கொள்வதுதான் லேட்டஸ்ட் டிரெண்ட். இளம் பெண்கள் விரும்பும் வகையில் லெஹெங்கா கவுல் டிரேப் ஸ்டைல், பெங்காலி டிரேப் ஸ்டைல் வித் ட்விஸ்ட், ஷோல்டர் பார்ட்டிவியர் டிரேப் ஸ்டைல் என்று பல... இவற்றில் தோத்தி ஸ்டைலில் புடவை கட்டும் முறையை விளக்குகிறார் ஹேஷ்டேக் நிறுவனத்தின் உரிமையாளரும் ஸ்டைலிஸ்ட்டுமான ஹர்ஷா.

 கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்
 ரெஜினா
ரெஜினா
தோத்தி புடவை...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
ஜீன்ஸுக்கு மேலே புடவை... இதுதான் இப்போ டிரெண்ட்!

கடைசியில்: புடவைக்கு மேட்ச்சாக ஒரு பெல்ட்டும் நகைகளும் அணிந்தால் தோத்தி ஸ்டைல் டிரெண்டி லுக்கில் அசத்தலாம்.

ஜீன்ஸுக்கு மேலே புடவை... இதுதான் இப்போ டிரெண்ட்!

ஸ்டெப்-1: டி-ஷர்ட் அல்லது வெஸ்டர்ன் ப்ளவுஸுடன் லெகின் அல்லது ஜீன்ஸ் பேன்ட் அணிந்து கொள்ளவும். புடவையை சமமாகப் பிரித்து, படத்தில் காட்டியுள்ளபடி உடலின் பின்புறம் வழியாகப் புடவையின் முனைகளை வயிற்றுப் பகுதிக்கு நேராகக் கொண்டுவந்து இறுக்கமாக முடிச்சிட்டுக்கொள்ளவும்.

ஜீன்ஸுக்கு மேலே புடவை... இதுதான் இப்போ டிரெண்ட்!

ஸ்டெப்-2: இடது காலின் அருகிலிருக்கும் புடவையின் ஒரு பகுதியை இடது காலின் முன்புறம் வழியாக உள்ளே விட்டு, படத்தில் காட்டியுள்ளபடி முதுகுப் பகுதிக்கு நேராக எடுத்துக்கொள்ளவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜீன்ஸுக்கு மேலே புடவை... இதுதான் இப்போ டிரெண்ட்!

ஸ்டெப்-3: இப்போது முதுகுப் பகுதிக்கு நேராக இருக்கும் துணியில் மடிப்புகள் வைக்கவும்.

ஜீன்ஸுக்கு மேலே புடவை... இதுதான் இப்போ டிரெண்ட்!

ஸ்டெப்-4: மடிப்பு வைத்த துணியைப் படத்தில் காட்டியுள்ளபடி பின்புறம் செருகிக்கொள்ளவும்.

ஜீன்ஸுக்கு மேலே புடவை... இதுதான் இப்போ டிரெண்ட்!

ஸ்டெப்-5: மடிப்பின் இடது புறம் இருக்கும் துணியை உடலின் முன்பகுதிக்குக் கொண்டுவந்து மடிப்பு வைத்து வயிற்றுப் பகுதிக்கு நேராகச் செருகிக்கொள்ளவும்.

ஜீன்ஸுக்கு மேலே புடவை... இதுதான் இப்போ டிரெண்ட்!

ஸ்டெப்-6: இப்போது வலது புறம் நாம் முடிச்சிட்டு விட்டிருந்த புடவைத் துணியை வலது காலின் முன்பகுதி வழியாக உள்ளே விட்டு முதுகுப் பகுதிக்கு நேராக எடுத்துக் கொள்ளவும்.

ஜீன்ஸுக்கு மேலே புடவை... இதுதான் இப்போ டிரெண்ட்!

ஸ்டெப்-7: அதில் பாதி அளவுக்கு மடிப்புகள் வைத்து முதுகுப் பகுதிக்கு நேராகச் செருகிக்கொள்ளவும்.

ஜீன்ஸுக்கு மேலே புடவை... இதுதான் இப்போ டிரெண்ட்!

ஸ்டெப்-8: இப்போது புடவையின் பள்ளு பகுதியை மடிப்புகள் வைத்து டி-ஷர்ட் மேல் மாராப்பு போன்று இட்டு பின் செய்து கொள்ளவும்.

பெங்காலி டிரேப் ஸ்டைல் வித் ட்விஸ்ட்

ஜீன்ஸுக்கு மேலே புடவை... இதுதான் இப்போ டிரெண்ட்!

லெஹெங்கா கவுல் டிரேப் ஸ்டைல்

ஜீன்ஸுக்கு மேலே புடவை... இதுதான் இப்போ டிரெண்ட்!

ஷோல்டர் பார்ட்டிவியர் டிரேப் ஸ்டைல்

ஜீன்ஸுக்கு மேலே புடவை... இதுதான் இப்போ டிரெண்ட்!